ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: மழைபோல கொட்டப்போகும் பணம்..இந்த 6 ராசிக்காரர்களுக்கு திடீர் ஜாக்பாட்

மேஷ ராசியில் இருக்கும் ராகுவும் துலாம் ராசியில் இருக்கும் கேதுவும் மீனம், கன்னி ராசிகளுக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகின்றன. சர்ப்ப கிரகங்களினால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவ கிரகங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு கேது கிரகங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றன. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ராகு கேது கிரகங்கள் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசியிலும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றன. தீபாவளிக்குப் பிறகு இந்த ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. இந்த கிரகப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

பொதுவாகவே ராகு கேதுகள் இருக்கும் இடத்துக்கேற்ப அந்த வீட்டின் அதிபதியைப் போல் பலன் தருவார். கன்னி ராசி அதிபதி புதன், கேது பகவான் புதன் பகவான் போல செயல்படுவார். தனுசு குருவின் வீட்டின் அதிபதி என்பதால் ராகு குரு பகவான் போல ஆன்மிகத்தையும் அளிப்பார்.

Rahu Ketu peyarchi 2023 Money will pour like rain Sudden jackpot for these 6 zodiac signs

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும் காலம் வந்து விட்டது. 12 ஆம் இட ராகு ஆறாம் இட கேதுவினால் நன்மைகள் அதிகம் நடைபெறும். நீண்டநாள் உடல் உபாதைகள் நீங்கும். சம்பாதிக்கும் பணத்தினை முறையான வழியில் சேமிப்பது அவசியம். பண விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணத்தை யோசித்து முதலீடு செய்யுங்கள். பத்திரமான இடத்தில் பணத்தை சேமிப்பது நன்மை தரும். நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். கேது பகவான் எதிரிகளை வெல்வார். கடன் பிரச்னைகள் குறையும். பொறுமையுடன் இருந்தால் நன்மைகள் அதிகம் நடைபெறும். சங்கடகர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும்.

Rahu Ketu peyarchi 2023 Money will pour like rain Sudden jackpot for these 6 zodiac signs

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே.. இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரப்போகிறது. ராகு பகவான் லாப ஸ்தானமான 11வது வீட்டிலும் கேது பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாவது வீட்டிலும் பயணம் செய்யப்போவதால் உங்கள் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். அசாத்தியமான வெற்றியைப் பெற்றுத் தருவார் ராகு. கேதுவினால் விவேகமும், ராகுவினால் வேகமும் இணைவதால் எல்லா விஷயங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். உணவு விசயத்தில் கவனம் தேவை. இரவு நேரங்களில் காரமான உணவுகளைத் தவிர்க்கவும்.

Rahu Ketu peyarchi 2023 Money will pour like rain Sudden jackpot for these 6 zodiac signs

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்திலும் கேது பகவான் நான்காம் வீடான சுக ஸ்தானத்திலும் அமர்ந்து உள்ளனர். சொத்து, சுகம் சேருவதோடு வாழ்வியல் தரமும் உயர்வடையும். நீங்கள் எடுக்க போகும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறைக் காட்டுங்கள்.வேலையில் முன்னேற்றமும், ஊதிய உயர்வும் கிடைக்கும். முன்கோபத்தை குறையுங்கள். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலில் விளக்கேற்றி வழிபடுங்கள்.

Rahu Ketu peyarchi 2023 Money will pour like rain Sudden jackpot for these 6 zodiac signs

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் வாழ்க்கைத் தரம் உயரும். அஷ்டம சனி காலமாக இருந்தாலும் ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் கேது பகவான் தைரிய ஸ்தானத்திலும் அமரப்போகிறார். ராகு வெளிநாட்டு பயணத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார். கேதுவின் இடமாற்றத்தினால் மறைமுக எதிரிகள் மாயமாவார்கள். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். புதிய சொத்து வாங்க முயற்சிப்போருக்கு கால நேரம் கூடிவரும். விலகியிருந்த உறவினர்கள் நெருங்கி வருவார்கள். செவ்வாய்கிழமைகளில் விநாயகரை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

Rahu Ketu peyarchi 2023 Money will pour like rain Sudden jackpot for these 6 zodiac signs

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு கண்டச்சனி தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வது உடல்நிலையில் சில கவலைகளை ஏற்படுத்தும். பிரச்சினைகளை வெளியில் சொல்ல வேண்டாம். ராகு பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் கேது பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. வீண் வாக்குவாதத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். பணம் விசயங்களில் வாக்குக்கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். குடும்ப பிரச்சினைகளை யாருக்கும் சொல்ல வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

Rahu Ketu peyarchi 2023 Money will pour like rain Sudden jackpot for these 6 zodiac signs

கன்னி

கன்னி ராசிக்காரர்களே.. இந்த ராகு கேது பெயர்ச்சி யோகத்தை அள்ளித்தரப்போகிறது. ராகு பகவான் ஏழாம் வீட்டிலும் கேது பகவான் ஜென்ம ராசியிலும் அமர்வதால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் இதுநாள் வரை தடைபட்டு வந்த சுப காரியங்கள் கைடி வரும். கணவன் மனைவிடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்வீர்கள். ஜென்ம ராசியில் வந்து அமர உள்ள கேது பகவான் விரக்தியான மனநிலையைத் தருவார் என்றாலும் கவலைப்படாமல் செய்யும் வேலையில் கவனம் செலுத்துங்கள். உடல்நல பாதிப்புகள் வந்து நீங்கும்.

Rahu Ketu peyarchi 2023 Money will pour like rain Sudden jackpot for these 6 zodiac signs

துலாம்

ஜென்ம கேதுவினால் சிரமப்பட்டு வந்த துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரப்போகிறது. ஆறாம் வீட்டில் அமரப்போகும் ராகு நோய்களையும் கடனையும் அதிகரிப்பார். வயிறு செரிமான கோளாறுகள் நீங்கும். மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. கடன் வாங்க வேண்டாம் யாருக்கும் கடன் கொடுக்கவும் வேண்டாம் ஜாமீன் கையெழுத்தும் போட வேண்டாம். விரைய ஸ்தானத்தில் கேது பயணம் செய்யப்போவதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நல்ல வேலையும் உத்யோகத்தில் சம்பளம், பதவி உயர்வு கிடைக்கும். வெள்ளிக்கிழமையன்று ராகு காலத்தில் சிவ ஆலயம் சென்று துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

Rahu Ketu peyarchi 2023 Money will pour like rain Sudden jackpot for these 6 zodiac signs

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே..லாப ஸ்தான கேதுவும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமரப்போகும் ராகுவும் உங்களுக்கு உத்யோக உயர்வையும், பணவரவையும் தரப்போகின்றனர். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும் புகழ் கூடும். ஐந்தாம் வீட்டில் அமர்ந்துள்ள ராகுவும் லாப ஸ்தானமான 11வது வீட்டில் அமர்ந்துள்ளனர். தொழிலுக்காக வெளியூரில் தங்க வேண்டியிருக்கும். சிலருக்கு இடமாற்றமும் ஏற்படும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கும். ஆன்மீக விசயங்களுக்காக அதிக செலவுகளை செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலக விசயமாக வெளிநாடு பயணம் அடிக்கடி செல்வீர்கள். புதிதாக சிலருக்கு வெளிநாடு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. ராகுவினால் டென்சன் குறையும், கேதுவினால் பொருளாதார வரவு அதிகரிக்கும். செவ்வாய்கிழமையன்று ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

Rahu Ketu peyarchi 2023 Money will pour like rain Sudden jackpot for these 6 zodiac signs

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி வாழ்க்கையில் வெற்றியை தேடித்தரப்போகிறது. நான்காம் வீட்டில் ராகுவும், தொழில் ஸ்தானத்தில் கேதுவும் அமரப்போவது சிறப்பான அம்சமாகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சிலர் புதிய வீடு மாறுவீர்கள். சிலருக்கு வேலையில் மாற்றம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பொறுமையோடு இருந்தால் இழப்பை சரி செய்யலாம். இழந்த செல்வாக்கை திரும்ப பெறுவீர்கள். பொருளாதார நிலை சீரடையும். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு சென்று துர்க்கையை வழிபட நன்மைகள் நடைபெறும்.

Rahu Ketu peyarchi 2023 Money will pour like rain Sudden jackpot for these 6 zodiac signs

மகரம்

மகர ராசிக்காரர்களே..மூன்றாமிடத்தில் அமரப்போகும் ராகுவினால் உங்கள் மனதில் அசாத்தியமான தைரியம் அதிகரிக்கும். அடுத்தவர் செய்யத் தயங்கும் காரியத்தினை எவ்வித தயக்கமுமின்றி சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து உள்ள கேதுவினால் நீங்கள் நினைத்தது நிறைவேறும் சில நேரங்களில் நீங்கள் விரும்பியது கிடைக்காவிட்டாலும், கிடைத்ததை விரும்பினால் வெற்றி நிச்சயம். வெள்ளிகிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வைத்து வழிபடுங்கள்.

Rahu Ketu peyarchi 2023 Money will pour like rain Sudden jackpot for these 6 zodiac signs

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களே..நிகழப்போகும் ராகு கேது பெயர்ச்சி வளர்ச்சியை ஏற்படுத்தும். உங்கள் ராசிக்கு ராகு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் - கேது பகவான் அஷ்டம ஸ்தானத்திலும் பயணம் செய்யப்போவதால் குடும்பத்தில் சலசலப்புகள் இருந்தாலும் கலகலப்பிற்குக் குறைவிருக்காது. பேசும் வார்த்தைகளில் கடுமை வெளிப்படும் கவனம் தேவை. பொருளாதார வரவு அதிகரிக்கும் அதே நேரத்தில் செலவும் கூடும் சேமிக்கத் தொடங்குங்கள். கேது பகவான் உங்கள் உடல்நிலையில் சிரமத்தை ஏற்படுத்துவார். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். கடன் கொடுக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்வது நல்லது.

Rahu Ketu peyarchi 2023 Money will pour like rain Sudden jackpot for these 6 zodiac signs

மீனம்

மீன ராசிக்காரர்களே..ஜென்ம ராகு உங்களுக்கு அள்ளித்தரப்போகிறார். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று பாடும் நேரம் வந்து விட்டது. ஜென்ம ராகுவினாலும் களத்திர ஸ்தான கேதுவினாலும் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பணம் விசயத்தில் யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு சீராகும். ஏழாம் இடத்தில் அமர்ந்து உள்ள கேதுவினால் சத்ரு நாசம் ஏற்படும். எதிரிகள் காணாமல் போவார்கள்.
புதிய நபர்களை நம்பி எந்த விஷயத்திலும் இறங்கக் வேண்டாம். பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. செவ்வாய்கிழமையில் துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடலாம். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடலாம்.

Rahu Ketu peyarchi 2023 Money will pour like rain Sudden jackpot for these 6 zodiac signs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+