Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: அஸ்வினியில் பயணம் செய்யும் ராகு..திடீர் ஜாக்பாட் யாருக்கு கிடைக்கும்

அஸ்வினி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் ராகுவினால் தனுசு, மகரம்,கும்பம்,மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: ராகு பகவான் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். கேது பகவான் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். வேத ஜோதிடத்தில் கேதுவைக் காட்டிலும், ராகுவுக்கே முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்படுகிறது. கரும்பாம்பு என அழைக்கப்படும். ராகு போக காரகன். செம்பாம்பு எனும் கேது மோட்ச காரகன். இவர்கள் எந்த பாவத்தில் அமர்கிறார்களோ அந்த பாவத்தை தாக்கம் அடையச் செய்வர். அதுபோல் இவற்றுடன் இணையும் கிரகங்களின் காரகத்துவங்களிலும் தாக்கம் ஏற்படும். ராகு கேதுவின் நட்சத்திர இடமாற்றம் தனுசு, மகரம்,கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

நவக்கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகு - கேதுவுக்கு என தனியாக வீடுகள் ஒதுக்கப்படவில்லை. எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த வீட்டு அதிபதியின் குணத்தை கிரகித்துக் கொள்வர். இவர்கள் மற்ற கிரகங்களைப் போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக் கூடியவர்கள்.

Rahu Ketu Peyarchi 2023: Rahu travel in Aswini from 21st Feb prediction for Dhanusu to Meenam

மேஷ ராசியில் ராகுவும் துலாம் ராசியில் கேதுவும் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக பயணம் செய்து வருகின்றனர். ராகு பகவான் சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் இருந்து கேதுவின் அஸ்வினி நட்சத்திரத்திற்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். ராகுவின் நட்சத்திர மாற்றம் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்களைத் தரப்போகிறது என்று பார்க்கலாம். இப்போது ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது பயணம் செய்கிறார். ஜூன் மாதம் முதல் கேது செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்திற்கு இடம்மாறுவார். இந்த ராகு கேது பெயர்ச்சியால் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

தனுசு

சனி விலகிவிட்டதால் உடல் சுறுசுறுப்படையும் அசதி, சோர்வு விலகும். குடும்ப வருமானத்தை அதிகப்படுத்த சுய தொழில் செய்யத் தொடங்குவீர்கள். அக்டோபர் 30 வரை ராகு பகவான் அஸ்வினியில் பயணம் செய்கிறார். கோட்சாரத்தில் லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவின் நட்சத்திரத்தில் கோட்சார ராகு பயணிக்கும் காலம். உங்களுக்கு பெரிய லாபம் தான்.புதிய நட்பு வட்டாரம் உருவாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். உறவுகளிடையே ஏற்பட்ட கசப்புகள் நீங்கும்.

5ல் பயணிக்கும் ராகுவின் நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கும் இதுவரை பாராமுகம் காட்டிய உங்களின் மூத்த சகோதரர் உங்கள் வீட்டின் சுப நிகழ்விற்கு முன் வந்து நடத்தி வைப்பார். குழந்தை பாக்கியம் தொடர்பான உங்களின் எண்ணம் ஈடேறும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம், ஆரோக்கியம் மனநிறைவு தரும். வெளிநாட்டுப் படிப்பு அல்லது வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். குலதெய்வம், பித்ருக்கள் வழிபாட்டில் ஆர்வம் காட்டுவது நல்லது.

Rahu Ketu Peyarchi 2023: Rahu travel in Aswini from 21st Feb prediction for Dhanusu to Meenam

கேதுவின் சித்திரை நட்சத்திர பயணத்தால் தெய்வ வழிபாட்டில் ஆர்வம் மிகும். ஆலய தரிசனம் மன அமைதியைத் தரும். நெடுந்தூர தீர்த்த யாத்திரை சென்றுவரலாம். நியாயமாக கடுமையாக உழைப்பவர்களுக்கும் ராகுவும் கேதுவும் துணை நிற்பார்கள்.கேது சாதகமாக இருப்பதால் கழுத்து வலி, இடுப்பு வலி குறையும். தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளவும். காலபைரவரை வணங்க நன்மைகள் நடைபெறும்.

மகரம்

ராகுவும், கேதுவும் கேந்திர தானங்களில் பயணம் செய்வதால் குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். வீடு மாற்றம்
உங்கள் ராசிக்கு 10ல் சஞ்சரிக்கும் கேதுவின் நட்சத்திரத்தில் ராகு பயணம் செய்கிறார். எந்த செயலாக இருந்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து நிதானமாக செயல்பட வேண்டும். வேகத்தை விட விவேகம் முக்கியம். பெரிய அளவில் பணம் புரளும் தொழிலில் இருப்பவர்கள் பணப் பரிவர்தனைக்கு முறையான ஆதாரம் வைத்து இருக்க வேண்டும். உறவுகளிடையே பேச்சில் கவனம் தேவை.

Rahu Ketu Peyarchi 2023: Rahu travel in Aswini from 21st Feb prediction for Dhanusu to Meenam

சிறு, சிறு நோய்கள் தோன்றி மறையும். உடல் உறுப்பில் இடது காது, கணுக்கால், பின் முதுகில் அவ்வப்போது வலி தோன்றலாம். முறையான உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, யோகாவுடன் தகுந்த மருத்துவர்களின் ஆலோசனையும் அவசியம். அரசாங்கம் தொடர்பான விசயங்களில் கவனம் தேவை. ஜூன் முதல் அக்டோபர் வரைக்கும் தடைபட்ட வருமானம் வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும். அடமானத்தில் இருந்த நகைகளை மீட்பீர்கள். புதிய ஆடை அணிகலன்கள் வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குல தெய்வ வழிபாடு குடும்பத்தைக் காக்கும்.

கும்பம்

ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டிருக்கும் உங்களுக்கு இந்த ராகு- கேது பெயர்ச்சி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். மகளுக்கு திருமணம் யோகம் கைகூடி வந்துள்ளது.
அக்டோபர் 30 வரை ராகு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் பயணிக்கும் காலம் தைரியம் தன்னம்பிக்கை கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். சுவாதி நட்சத்திரத்தில் கேது பயணிக்கும் காலம். மாணவர்களின் உயர் கல்வி முயற்சியில் வெற்றி கிடைக்கும். தந்தைக்கும் சகோதரருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரிக்கும். பூர்வீக சொத்து பிரச்சினை உங்களை கவலைப்பட வைக்கும். வேலையில் சில சிக்கல்கள் வரலாம். வீடு அல்லது வியாபர நிறுவனத்தை மாற்றலாம். சிலர் தொழிற்சாலையை இட மாற்றம் செய்ய நேரும். தொழில் தர்மத்தை கடைபிடித்து நியாயமான முறையில் சம்பாதித்து புகழடைவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு அபாரமான தொழில் வளர்ச்சி ஏற்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். மகிழ்ச்சிகரமான இல்லறம் அமையும். வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் உண்டாகும். அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். சக ஊழியர்களிடையே நல்லிணக்கம் ஏற்படும்.உங்கள் திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும்.

Rahu Ketu Peyarchi 2023: Rahu travel in Aswini from 21st Feb prediction for Dhanusu to Meenam

மீனம்

மீன ராசிக்காரர்களே..யாரைரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள். விரைய செலவுகள் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வேலையால் அலைச்சலும் அதனால் உடலில் அசதியும் உண்டாகும். கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் ராகுவினால் எதையும் நிதானமாக செய்வது நல்லது. வேலையில் அலைச்சல் மிகுதியாக இருக்கும். பங்குச் சந்தை முதலீடுகள் உங்களை நிலை தடுமாற வைக்கும் கவனம் தேவை. அகலக்கால் வைக்காதீர்கள் முதலுக்கே மோசமாக முடியும் என்பதால் கவனம் தேவை. ராகுவின் நட்சத்திரத்தில் கோட்சார கேது பயணிக்கும் காலத்தில் வாக்கில் கவனமும் நிதானமும் தேவை. அக்டோபர் 30 வரை கேது சித்திரை நட்சத்திரத்தில் பயணம் செய்யும் காலத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். வீட்டுப் பெரியவர்களின் அன்பும், ஆசியும் கிடைக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும். ஊதிய உயர்வு நிச்சயம் உண்டு. முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முருகனின் வேலினை வழிபட வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும்.

Rahu Ketu Peyarchi 2023: Rahu travel in Aswini from 21st Feb prediction for Dhanusu to Meenam
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+