Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: கோடி கோடியாக கொட்டப்போகும் பணமழை..4 ராசிக்காரர்களுக்கு குபேர யோகம்

அஸ்வினி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் ராகுவினால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: ராகு பகவான் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். கேது பகவான் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். வேத ஜோதிடத்தில் கேதுவைக் காட்டிலும், ராகுவுக்கே முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்படுகிறது. கரும்பாம்பு என அழைக்கப்படும். ராகு போக காரகன். செம்பாம்பு எனும் கேது மோட்ச காரகன். இவர்கள் எந்த பாவத்தில் அமர்கிறார்களோ அந்த பாவத்தை தாக்கம் அடையச் செய்வர். அதுபோல் இவற்றுடன் இணையும் கிரகங்களின் காரகத்துவங்களிலும் தாக்கம் ஏற்படும். ராகு கேதுவின் நட்சத்திர இடமாற்றம் சிம்மம், கன்னி, துலாம்,விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

நவக்கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகு - கேதுவுக்கு என தனியாக வீடுகள் ஒதுக்கப்படவில்லை. எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த வீட்டு அதிபதியின் குணத்தை கிரகித்துக் கொள்வர். இவர்கள் மற்ற கிரகங்களைப் போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக் கூடியவர்கள்.

Rahu Ketu Peyarchi 2023: Rahu travel in Aswini Nakshatra prediction for Simmam to Viruchigam

மேஷ ராசியில் ராகுவும் துலாம் ராசியில் கேதுவும் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக பயணம் செய்து வருகின்றனர். ராகு பகவான் சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் இருந்து கேதுவின் அஸ்வினி நட்சத்திரத்திற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ராகுவின் நட்சத்திர மாற்றம் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்களைத் தரப்போகிறது என்று பார்க்கலாம். இப்போது ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது பயணம் செய்கிறார். ஜூன் மாதம் முதல் கேது செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்திற்கு இடம்மாறுவார். இந்த ராகு கேது பெயர்ச்சியால் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே..இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு மிகப்பெரிய யோகத்தை தரப்போகிறது. கேது பகவான் 3ஆம் வீட்டில் பயணம் செய்வதால் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதிகமாக வரும் வருமானத்தில் சொந்த வீடு கட்டுவீர்கள். ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் கோட்சார கேதுவின் அஸ்வினி நட்சத்திரத்தில் ராகு பயணம் செய்யப்போகிறார் . பூர்வீகச் சொத்து பிரிப்பதில் சகோதரரிடம் கருத்து வேறுபாடு உண்டாகலாம். கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து சிலர் தனிக் குடித்தனம் செல்வீர்கள். இப்போது ராகுவின் நட்சத்திரத்தில் கேது பயணம் செய்கிறார். அதிக வேலையினால் மனஅழுத்தம் அதிகமாகும். வருமானம் அதிகரிப்பதால் கடன் பிரச்சினை நீங்கும். தான தர்மங்கள் செய்வீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். செவ்வாயின் நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் கேது மாறும் போது, ஜூன் மாதத்திற்குப் பிறகு அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். ரியல் எஸ்டேட் தொழில் லாபத்தை கொடுக்கும். வேலை தொழிலில் புதிய மாற்றமும் ஏற்றமும் உண்டு. தந்தையின் பூர்வகச் சொத்து உங்கள் பெயரில் பட்டா போடப்படும். விற்க முடியாமல் கிடக்கும் பல வருடங்களாக கிடந்த சொத்துக்கள் விற்கும். புரோகிதர்கள், ஜோதிடர்கள், டூரிஸ்ட் தொழில், ஆடிட்டர்களுக்கு நல்ல வருமானம் உண்டாகும். தீர்த்த யாத்திரை, மகான்களின் நல்லாசிகள் கிடைக்கும். நல்லது, கெட்டது இரண்டும் அவரவரின் செயலைப் பொறுத்ததுதான். இறைவனை சரணாகதி அடையும் போது எல்லா நல்ல நாட்களாகவே அமையும். வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீரங்கநாதரை நெய்தீபம் ஏற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே..பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. எதிர்பாராத பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ள வேண்டாம். ராகு பகவான் அஸ்வினி நட்சத்திரத்திற்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். உங்கள் சொந்த வாழ்க்கையில் அடுத்தவர்களை தலையிட விடாதீர்கள். வீண் வம்பு வழக்குகளில் மாட்டிக்கொள்ளாதீர்கள். வேலையில் கவனக்குறைவு ஏற்படும். வீண் விமர்சனங்களில் சிக்கிக்கொள்வீர்கள். பங்குச்சந்தை முதலீடுகளைத் தவிர்க்கவும். ஆன்லைன் சூதாட்டம் மீளமுடியாத கடன் பிரச்சினையை உருவாக்கிவிடும். பணம் விசயங்களில் யாருக்கும் வாக்குக் கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். கண்களில் பிரச்சினை வரலாம் கவனம் தேவை. வாகன பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். ஜாமீன் கையெழுத்துப் போட்டு யாருக்கும் பணம் கடனாக வாங்கிக்கொடுக்காதீர்கள். செவ்வாய்கிழமைகளில் மவுன விரதம் இருப்பது மிகப்பெரிய நன்மையைக் கொடுக்கும்.

கேது பகவான் இப்போது ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். எட்டாம் இட கேது சில சிக்கல்களை ஏற்படுத்தும். கூடவே இருந்து குழி பறிப்பவர்கள் அதிகம் இருப்பார்கள் கவனம் தேவை. பேச்சில் நிதானம் அவசியம். வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் வந்து நீங்கும். அரசு வழி காரியங்கள் நடைபெறுவதில் சில தடை தாமதங்கள் உண்டாகும். ஜூன் மாதத்திற்குப் பிறகு உங்களுக்கு கேதுவின் நட்சத்திர மாற்றத்தினால் ஞாபக சக்தியில் தடுமாற்றம் உண்டாகும். பணம் நகை விசயங்களில் கவனம் தேவை. பேராசைப் பட்டு பெருநஷ்டத்தை சந்தித்து விடாதீர்கள். சிலருக்கு பூர்வீக சொத்து விசயங்களின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்ற பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகம் நடைபெறும்.

Rahu Ketu Peyarchi 2023: Rahu travel in Aswini Nakshatra prediction for Simmam to Viruchigam

துலாம்

சுக்கிரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே.. கேது பகவான் உங்கள் ராசியில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். ஜென்ம கேது ராகுவின் நட்சத்திரத்தில் பயணம் செய்யும் இந்த நேரத்தில் ராகு பகவான் கேதுவின் அஸ்வினி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். புகழ் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் ராகு பயணம் செய்கிறார். ராகு பகவான் உங்களுக்கு பெயர், புகழ், கவுரவம் சந்தோஷம் அதிகரிக்கும். அதே நேரத்தில் பேராசையும் அதனால் பண பிரச்சினையும் அதிகரிக்கும். மன அமைதியும் நிம்மதியும் அதிகரிக்கும். சொந்த பந்தங்களுடன் கூடி மகிழ்வீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கேது பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். மன அழுத்தமும் நிம்மதியும் குறைய வாய்ப்பு உள்ளது. பேச்சில் நிதானம் தேவை. பூர்வீக சொத்துக்களில் பிரச்சினை வரலாம் கவனம் தேவை. ஜூன் மாதத்திற்குக் பிறகு குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கண் பிரச்சினைகளில் ஏற்பட்ட பிரச்சினைகள் வந்து நீங்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். பெருமாள் கோவிலில் கருட பகவானுக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

Rahu Ketu Peyarchi 2023: Rahu travel in Aswini Nakshatra prediction for Simmam to Viruchigam

விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் உள்ள ராகு அற்புதமான பலன்களைத் தரப்போகிறார். வெற்றிகள் தேடி வரப்போகிறது. அரசு வேலைக்காக தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம்

கடந்த நான்கரை வருடத்துக்குப் பிறகு உங்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. 6-ல் ராகு இருப்பதால் நீங்கள் இனி எதை செய்தாலும் அதில் வெற்றி உண்டு. பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். வேலை கிடைக்கும். மனதாலும், உடலாலும் இருந்து வந்த அவஸ்தைகள் விலகும். கேதுவும் சாதகமாக இருப்பதால் பாதியில் நின்று போன அரசு வேலைகள் உடனே நடக்கும். குடும்பத்தில் மனைவி பிள்ளைகளுடன் சந்தோஷமாக இருப்பீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. புது வேலை கிடைக்கும். மகனுக்கோ மகளுக்கோ திருமணம் முடியும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். சுவாதி நட்சத்திரத்தில் ராகு பயணம் செய்வதால் பண வருமானம் அதிகரிக்கும். ஜூன் மாதத்திற்கப் பிறகு செய்யும் செயல்களில் கவனம் தேவை. புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அடுத்தவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பணம் விசயங்களில் அடுத்தவரை நம்பி ஏமாந்து விட வேண்டாம்.

Rahu Ketu Peyarchi 2023: Rahu travel in Aswini Nakshatra prediction for Simmam to Viruchigam
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+