ராகு கேது பெயர்ச்சி 2022: யாருடைய வீட்டில் ராகு பண மழையைப் பொழியப்போகிறார் தெரியுமா
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: நெருப்பைப் போல தூய்மையும் காற்றைப்போல வேகத்தையும் கொண்ட தனுசு ராசிக்காரர்களே,
பூர்வ புண்ணிய ராசியான ஐந்தாவது வீட்டில் ராகுவும் லாப ஸ்தானமான 12வது வீட்டில் கேதுவும் பயணம் செய்கின்றனர். உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
ராகு கேது பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி நிகழ்ந்துள்ளது. ரிஷப ராசியில் இருந்து ராகு மேஷ ராசிக்கும் விருச்சிக ராசியில் இருந்து கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்பதால் எதிர்திசையில் சுழலும். இந்த கிரகங்களுக்கு சொந்த வீடு இல்லை செவ்வாயைப் போல ராகுவும், சுக்கிரனைப் போல கேதுவும் பலன் தரப்போகின்றனர்.
18 மாதங்கள் ராகுவும் கேதுவும் மேஷம் மற்றும் துலாம் ராசிகளில் பயணம் செய்கின்றனர். 18 மாதங்களில் ராகுவும், கேதுவும் தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன யோகத்தைத் தரப்போகிறார்கள், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்றும் பார்க்கலாம்.

பணம் பதவி தேடி வரும் காலம்
ஏழரைசனியால் எத்தனையோ நெருக்கடிகளை சந்தித்து வரும் உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி பல அற்புத பலன்களைத் தரப்போகிறது. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குழப்பங்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கப்போகிறது. கணவன் மனைவி இடையேயான பிரச்சனைகள் நீங்கும். தடைபட்ட காரியங்கள் நீங்கி வெற்றி உண்டாகும். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம் நீண்ட கால பயணங்களைத் தவிர்க்கவும்.

பொன் நகை சேர்க்கும்
ராகு பகவான் 18 மாதங்களில் கார்த்திகை நட்சத்திரம் 1ஆம் பாதம், சுக்கிரனின் பரணி நட்சத்திரம், கேதுவின் அசுவினி நட்சத்திரத்திலும் பயணம் செய்வார். இந்த காலகட்டத்தில் வரும் மே மாதம் வரை திடீர் பண வரவு வரும். பயணங்கள் அதிகமாகும். மனைவி அல்லது கணவனின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். விஐபிக்கள் அறிமுகமாவார்கள். பொன் நகை சேர்க்கை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் பூர்வீக சொத்து மூலம் லாபம் வரும். வேலையில் புரமோசனும் நீண்ட நாட்களாக வர வேண்டிய சம்பள உயர்வு வரும்.

ஆலய தரிசனம் மன அமைதி
கேது பகவான் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் திடீர் யோகம் தேடி வரும். பங்குச்சந்தை முதலீடுகள் திடீர் பண வரவைத் தரும். உங்களின் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். நேற்றுவரை யாரென்றே அடையாளம் தெரியாமல் இருந்த நீங்கள் புகழின் உச்சத்தை அடையப்போகிறீர்கள். திருமண தடைகள் நீங்கும். சுபகாரியம் நடைபெறும். வீடு கட்டும் யோகம் கைகூடி வரப்போகிறது. பேச்சில் தெளிவு இருக்கும். பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். புது வண்டி வாகனம் வாங்கும் யோகம் கைகூடி வரும். வெளியூர்களில் உள்ள ஆலயங்களுக்கு புனித பயணம் சென்று சாமி தரிசனம் செய்து வருவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

கேதுவின் பயணம் அற்புதம்
கேது பகவான் குருவின் விருச்சிக நட்சத்திரத்திலும், ராகுவின் சுவாதி நட்சத்திரத்திலும் செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்திலும் பயணம் செய்வார். தடைபட்ட வேலைகள் தடைகள் நீங்கி மளமளவென நடைபெறும். செப்டம்பர் முதல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரைக்குமே கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாகும். வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பு உள்ளது. 2023 ஜூன் மாதத்திற்குப் பிறகு அக்டோபர் மாதம் வரைக்கும் கேதுவின் பயணம் சாதகமாக உள்ளதால் நோய் பற்றி அச்சம் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். உயர்கல்விக்காக சிலர் வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications