ராகு கேது பெயர்ச்சி பலன் 2022: யாரெல்லாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் - மின்னல் வேக பலன்கள்
ராகு கேது பெயர்ச்சி இன்று நிகழ்கிறது. இந்த பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று சுருக்கமாக பார்க்கலாம்.
சென்னை: நவ கிரகங்களில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்றாலும் மனிதர்களின் நல்லது கெட்டதுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன்பாக ராகு காலம் எமகண்டம் பார்த்துதான் செய்கின்றனர். ராகு ஆசைக்காரகன் அள்ளிக்கொடுப்பார். கேது ஞானத்தை கொடுப்பார். ராகுவும் கேதுவும் தந்தைக்காரகன் சூரியனுக்கும் தாய் காரகன் சந்திரனுக்கும் ஆகாத கிரகங்களாக இருக்கின்றன. ராகு கேது பெயர்ச்சி இந்த ஆண்டு வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று நிகழ்கிறது. இந்த பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று சுருக்கமாக பார்க்கலாம்.
ராகு கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது அந்த அளவிற்கு அள்ளிக்கொடுப்பார். ஒருவருக்கு மறைமுகமாக வரும் திடீர் அதிர்ஷ்டம் பணவரவு யோகங்கள் எல்லாமே ராகுவினால் ஏற்படக்கூடியதுதான்.
கேது ஆன்மீக வழியில் கொண்டு செல்வார். போதும்டா சாமி இதுக்கு மேல எதுவுமே வேணாம். சந்நியாச வாழ்க்கையே சந்தோஷம் என்ற மனநிலைக்கு மாற்றி விடுவார் கேது.
ராகு கேது சாதகமாக இருந்தால் ஒருவருக்கு செல்வம் செல்வாக்கு எப்படி தேடி வருமே அந்த அளவிற்கு ராகு கேது கிரகங்கள் சரியாக அமையாவிட்டால் செல்வம், செல்வாக்கு இழந்து அவமரியாதை ஏற்படும். ராகு கேது சாதகமாக இருப்பவர்களுக்குத்தான் லாட்டரியில் பணமும், திடீர் புதையலும் கிடைக்கும். ஒரு பிச்சைக்காரர்கூட திடீர் என கோடீஸ்வரராக மாறுவதும் கூட ராகுவினால்தான். கேது திடீர் ஞானத்தை கொடுத்து மோட்சத்திற்கு வழிகாட்டுவார்.
இந்த ராகு கேது பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று மின்னல் வேகத்தில் பார்க்கலாம்.

மேஷம் - ஜென்ம ராகு களத்திர கேது
18 ஆண்டுகளுக்கு பிறகு மேஷ ராசிக்கு ராகு வந்து அமர்கிறார். ஜென்ம ராகு, ஏழாம் வீட்டில் கேது இனி 18 மாதங்கள் அதாவது அக்டோபர் 2023ஆம் ஆண்டுவரை உங்க ராசியில் சஞ்சரிப்பார்கள். திடீர் பணவருமானம் வரும் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். மனைவி பெயரில் புதிய தொழில் தொடங்கலாம். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வேலையில் திடீர் இடமாற்றம் வரலாம். திடீர் செலவுகள் வரும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். எந்த வேலையிலும் கவனமாகவும் விழிப்புணர்வோடும் இருங்கள். செவ்வாய்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு நல்லெண்ணெய் தீபம் விளக்கு போடுவது நல்லது.

ரிஷபம் விரைய ராகு ருண ரோக சத்ரு கேது
ராகு விரைய ஸ்தானத்திற்கும் கேது ஆறாம் வீடான நோய் எதிரி சத்ரு ஸ்தானத்திற்கும் மாறுகின்றனர். இதுநாள்வரை உங்க ராசியில் அமர்ந்து ஆட்டிப்படைத்த ராகு இனி விரைய ஸ்தானத்திற்கு மாறுவது சிறப்பு. சுபகாரியங்கள் திருமணம் சடங்கு கிரக பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம், தொழில் அமையும் வாய்ப்பை அமைத்துக்கொடுப்பார். கேது பெயர்ச்சியால் சிலருக்கு புது வேலை வாய்ப்பு மற்றும் தொழில் அமையும். இதுநாள் வரை தொந்தரவு செய்த நோய்பிரச்சினை நீங்கும். போட்டி பொறாமை ஒழியும்.
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் ராகு பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடலாம்.

மிதுனம் லாப ராகு பூர்வ புண்ணிய ஸ்தான கேது
உங்க ராசிக்கு சாதகமான இடத்திற்கு ராகு கேது வந்திருக்கிறார்கள். விரைய ஸ்தானத்தில் இருந்த ராகு லாப ஸ்தானத்திற்கு மாறுவதால் எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவையும் கொடுப்பார். போட்டி பொறாமைகளை ஒழிப்பார். எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள். அடுத்தவர்களின் சூழ்ச்சியால் உங்களுக்கு வந்த பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும். மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ல் வருவது யோகம் தான். காரிய வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகள் கை கூடும். சுப காரியங்கள் சந்தோஷமாக நடக்கும். இது வரை உங்களை தரக்குறைவாக நடத்தியவர்கள் எல்லாம் இனி உங்களை கண்டு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள். புதன்கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் அதிகரிக்கும்.

கடகம் தொழில் ராகு சுக ஸ்தான கேது
நீங்கள் எடுக்கும் ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். தொழிலாளியாக இருந்த நீங்கள் முதலாளி ஆகும் யோகம் வரும். நினைத்த மாதிரி நல்ல வேலை வாய்ப்பு அமையலாம் சம்பள உயர்வும் வசதி வாய்ப்புகளும் தேடி வரும். சொந்த வீடு வாங்கும் யோகம் வரும், சுப காரியங்கள் நல்லமுறையில் கைகூடி வரும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு இனி சிறிது சிறிதாக கடன் சுமை குறையும். இந்த ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். திங்கட்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.

சிம்மம் பாக்ய ராகு தைரிய ஸ்தான கேது
கடந்த காலங்களில் பல பிரச்சினைகளை சந்தித்த உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் விமோசனம் கிடைக்கும். வருமானம் திருப்தி தரும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலைகளில் இடையூறு நீங்கும்.மறைமுக எதிர்ப்புகள் விலகும். கேது மாறி வரும் இடம் முன்றாம் பாவம் சகோதரம்,வீரியம்,வீரம்,எழுத்தறிவு,விளையாட்டு ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடி வரும், புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். நிர்வாக பொறுப்புகள் தேடி வரும். நினைத்த காரியம் கைகூடி வரும். ஞாயிறு மாலை ராகு காலத்தில் கால பைரவரை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும். பாதிப்புகள் குறையும்.

கன்னி அஷ்டம ராகு குடும்ப கேது
ராகு பெயர்ச்சி யோகத்தையும் பெருமை புகழையும் தருவார். எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். இது வரை கலங்கிய களங்கப்பட்ட வாழ்க்கை ஓளி மயமான வாழ்க்கைக்கு வழிகாட்டும். திருமணம் சுபகாரியம் நடக்கும். கோர்ட் வம்பு வழக்கு சாதகமாகும்.சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம். சிலர் பிள்ளைகள் படிப்புக்கு ஊரை மாற்றலாம்.சிலர் வீட்டுக்கு மேல் வீடு கட்டும் வாய்ப்பு வரும். 2 ல் கேது வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும். உங்க முயற்சி தன்னம்பிக்கை மூலம் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும். இந்த ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். புதன்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

துலாம் ஜென்ம கேது களத்திர ராகு
துலாம் ராசியில் கேதுவும் 7 ஆம் இடத்தில் ராகுவும் பெயர்ச்சியாகிறார்கள். உங்களால் எல்லோருக்கும் நல்லது நடக்கும். ஆனால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை என்ற நிலை மாறும். ராசியில் கேது சஞ்சரிப்பதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும்.வருமானம் திருப்தி தரும்.தேவைகள் பூர்த்தியாகும்.குடும்பத்தில் பிள்ளைகள் படிப்புக்கு செலவு செய்வீர்கள். களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில் ராகு அமர்வதால் கஷ்டங்கள் நீங்கி இனி தலை நிமிரலாம். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி ஓன்று சேரலாம். வாழ்க்கையே போர்க்களம், ஏமாற்றம் சஞ்சலம் என்று வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் நல்லதொரு மாற்றம் உண்டாகும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம் விரைய கேது ருண ரோக சத்ரு ராகு
செவ்வாய்கிழமை மாலை நேரத்தில் ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

தனுசு பூர்வ புண்ணிய ராகு லாப கேது
ராகு கேது பெயர்ச்சி நிம்மதியை தரும். தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும் தடைபட்ட காரியத்தை செவ்வனே செய்து முடிப்பீர்கள். கடன் சுமை குறையும். இந்த ராகு கேது பெயர்ச்சி நிலையான தொழில் யோகத்தையும் வலிமையான சம்பாதித்யத்தையும் கொடுக்கும். அசையா சொத்துகள் வீடு மனை வாங்கும் யோகத்தை கொடுக்கும். 18 வருஷத்துக்கு பிறகு 5ம் இடத்திற்கு ராகு வருவதால் முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கி சுகம் பெறலாம். வியாழக்கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மகரம் சுக ஸ்தான ராகு தொழில் ஸ்தான கேது
ராகு சுக ஸ்தானமான நான்காம் இடத்திற்கும், கேது10ஆம் இடத்திற்க்கும் மாறுகிறார்கள். இதுவரை திணறடித்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். 4ம் பாவம் தாயார்,சுகம்,வாகனம் கல்வி,நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இந்த 4ம் பாவத்திற்க்கு ராகு வருகிறார். இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள். தாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் உண்டாகலாம். பழைய கடன்கள் அடைப்படும். வருமானம் அதிகரிக்கும். தொழில் நிலை முன்னேற்றத்தை தரும். வரவுகள் அதிகரிக்கும் சேமிப்பும் உயரும். பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். சுபகாரியம்,திருமணம்,பிள்ளைகள் படிப்புக்கு செலவு செய்ய நேரிடும். காரிய வெற்றி உண்டாக சனிக்கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

கும்பம் தைரிய ராகு பாக்ய ஸ்தான கேது
கும்ப ராசிக்காரர்களே, இது வரை 4ஆம் இடத்தில் இருந்த ராகு 3ஆம் இடத்திலும் 10 இடத்தில் இருந்த கேது 9ம் இடத்திற்கும் வருகிறார்கள். 3ஆம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார். ராகு இப்பொழுது யோகத்தை வாரி வழங்க போகிறார். இனி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். திருமண நிகழ்ச்சிகள் சுபமாக முடியும். உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டீர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். உற்றார் உறவினர் பகை மறந்து வீடு தேடி வருவார்கள். சனிக்கிழமை ராகுகாலத்தில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மீனம் குடும்ப ராகு அஷ்டம ஸ்தான கேது
ராகுவும் கேதுவும் இன்று முதல் 2023ஆம் ஆண்டு அக்டோபர் வரை 18 மாதங்கள் உங்க ராசிக்கு குடும்ப ஸ்தானத்திற்கும் கேது உங்க ராசிக்கு ஆயுள் ஸ்தானத்திற்கும் வருவது சிறப்பு. திடீர் பணவருமானம் வரும் திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். அதே நேரத்தில் சேமிக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்படும் அளவிற்கு செலவுகளும் வரும். வேலை செய்யும் இடத்தில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். கோபம், உணர்வுகளை கட்டுப்படுத்துங்கள். உங்க வீட்டில் பேசும் போது காரசார விவாதங்களை தவிர்த்து விடுங்கள். பாதிப்புகள் நீங்க வியாழக்கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications