ராகு கேது பெயர்ச்சி 2022: நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும் - எந்த ராசிக்கு தெரியுமா?

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிரடியான முடிவுகளால் மற்றவர்களை அசரடிக்கும் விருச்சிக ராசிக்காரர்களே, குழந்தைத்தனமான மனது கொண்ட குணசாலிகள் நீங்கள். ஆறாம் வீட்டில் ராகுவும் விரைய ஸ்தானமான 12வது வீட்டில் கேதுவும் பயணம் செய்கின்றனர். உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

ராகு கேது பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி நிகழ்ந்துள்ளது. ரிஷப ராசியில் இருந்து ராகு மேஷ ராசிக்கும் விருச்சிக ராசியில் இருந்து கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்பதால் எதிர்திசையில் சுழலும். இந்த கிரகங்களுக்கு சொந்த வீடு இல்லை செவ்வாயைப் போல ராகுவும், சுக்கிரனைப் போல கேதுவும் பலன் தரப்போகின்றனர்.

18 மாதங்கள் ராகுவும் கேதுவும் மேஷம் மற்றும் துலாம் ராசிகளில் பயணம் செய்கின்றனர். 18 மாதங்களில் ராகுவும், கேதுவும் விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகின்றனர் என்று பார்க்கலாம்.

நோய்களை நீக்கும் ராகு

நோய்களை நீக்கும் ராகு

வீண் கவலைகள் நீங்கப்போகிறது. நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். அபரிமிதமான பண வரவினால் கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். பெண்களுக்கு பொன் நகை சேர்க்கை ஏற்படும். வெற்றிகள் தேடி வரப்போகிறது. நினைத்த காரியம் நிறைவேறும்.

வெற்றிகள் தேடி வரும்

வெற்றிகள் தேடி வரும்

வேலைச்சுமை அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவரின் ஒத்துழைப்பு கூடும். அரசாங்க காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவீர்கள். 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரைக்கும் கவனமும் நிதானமும் தேவைப்படும்.
சக உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் இழந்த சலுகையை மீண்டும் பெறுவீர்கள்.

கேது தரும் நன்மைகள்

கேது தரும் நன்மைகள்

ஜென்ம கேதுவினால் சங்கடப்பட்ட உங்களுக்கு இனி சந்தோஷம் கிடைக்கப்போகிறது. விரைய ஸ்தான கேதுவினால் இனி தெளிவாக இருப்பீர்கள். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் தடைகள் நீங்கி காரிய வெற்றி உண்டாகும். கோபம் நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சுபகாரியங்களினால் மனதில் உற்சாகம் பிறக்கும்.

திடீர் மருத்துவ செலவுகள்

திடீர் மருத்துவ செலவுகள்

செப்டம்பர் மாதம் வரை திடீர் மருத்துவ செலவுகள் வரும். உங்களின் புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த சம்பள உயர்வும் பதவி உயர்வும் தேடி வரும். அலுவலகத்தில் வீண் வாக்குவாதம் தவிர்க்கவும். நீங்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+