ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: அஸ்வினி, பரணி, கார்த்திகை.. சொத்து சுகம் யாருக்கு சேரும்
சென்னை: மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் ராகு மீன ராசியில் ரேவதி நட்சத்திற்கு இடம் மாறுகிறார். அதே போல துலாம் ராசியில் உள்ள கேது கன்னி ராசியில் உள்ள சித்திரை நட்சத்திரத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த இடப்பெயர்ச்சியால் மேஷ ராசியில் உள்ள அஸ்வினி, பரணி, கார்த்திகை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
அஸ்வினி: ராகு உங்கள் ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து விலகி ரேவதி நட்சத்திரத்திற்கு சென்று பயணம் செய்யப்போகிறார். கேதுவை நட்சத்திர அதிபதியாகக் கொண்ட அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உங்களுக்கு என்ன திசை நடக்கிறது என்ன புத்தி நடக்கிறது என்று பார்த்து அதற்கேற்ப பலன்களைப் பார்க்கலாம். ராகு திசை நடந்தால் இந்த ராகு கேது பெயர்ச்சி கோடீஸ்வர யோகத்தை கொடுக்கப்போகிறது. அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். உங்கள் ஜாதகத்தில் கேது வின் இடம் எங்கிருக்கிறது என்று பார்க்க வேண்டும். மனக்குழப்பம் நீங்கும் மனம் தெளிவடையும். கேது தற்போது கன்னி ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகிறார். உங்கள் நட்சத்திர அதிபதி கேது செவ்வாய் நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் பயணம் செய்வார். ராகு புத்தி கேது புத்தி நடந்தாலும் உங்களுக்கு மன நிம்மதி, பண வருமானத்தை கொடுக்கும். கோடீஸ்வர யோகத்தை பெறுவீர்கள். உங்கள் ஜாதகத்தில் சந்திரன் கேது இணைந்திருந்தாலும் மிகப்பெரிய யோகத்தை கொடுக்கப்போகிறது.

பரணி: மேஷ ராசியில் பரணி நட்சத்திரம் அறிவும் அழகும் திறமையும் கொண்டவர்கள். உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரப்போகிறது. ராகு 12ஆம் வீடு கேது 6ஆம் வீட்டிலும் பயணம் செய்யப்போகின்றனர். பரணி சுக்கிரன் நட்சத்திரம். கேது மறைமுகமாக கடன், நோய், எதிரிகள் தொந்தரவுகளை நீக்குவார். ராகு சுக்கிரன் கூட்டணி இருந்தால் உங்களுக்கு இது யோகமான கால கட்டம் கோடீஸ்வர யோகம் கொடுக்கும். குடும்பத்தில் குதூகலத்தை கொடுக்கும். நிறைய பொறுப்புகள் தேடி வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ராகு யோகத்தை தருவார் ஜாதகத்தில் சுக்கிரன் ராகு சேர்க்கை இருந்தால் இந்த ராகு கேது பெயர்ச்சி யோகத்தை தரும் கூடவே ராகு திசையும் நடந்தால் நீங்கள்தான் அதிர்ஷ்ட சாலி. ராகு இந்த முறை திடீர் பயணங்களைத் தருவார். வேலையில் திடீர் மாற்றத்தை கொடுப்பார். நிம்மதியும் சந்தோஷத்தையும் இந்த ராகு கேது பெயர்ச்சி தரப்போகிறது.
கார்த்திகை: சூரியனை நட்சத்திர அதிபதியாகக் கொண்ட கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி என்ன பலன்களை கொடுக்கப்போகிறது என்று பார்த்தால், சுமாரான பலனைத் தரும். உங்களுக்கு ராகு திசை நடக்கும் பட்சத்தில் ராகு கேது பெயர்ச்சி பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரும். பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தைக் கொடுக்கும். அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. ராகு உங்களுக்கு யோக காரகன் என்றாலும் நீங்கள் பேச்சில் கவனமாக இருக்கவும். கோபமான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்கள் சேரும். செய்யும் தொழிலில் ஆதாயமும் லாபமும் உண்டாகும். வீண் புகழ்ச்சியில் மயங்க வேண்டாம். கேது பகவான் உங்களுக்கு நிறைய அனுபவ பாடத்தை கற்றுக்கொடுப்பார்.












Click it and Unblock the Notifications