ராகு கேது பெயர்ச்சி 2023: பதவிகளும் பட்டங்களும் தேடி வரும் காலம்.. வெற்றிக்கனியை ருசிப்பது யார்?
சென்னை: பாம்பு கிரகங்களான ராகு கேது பெயர்ச்சி பாலருக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கால புருஷ தத்துவப்படி ராகு பகவான் 12ஆம் வீடான அயன சயன போக ஸ்தானமான மீன ராசிக்கும் கேது பகவான் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானமான கன்னி ராசிக்கும் மாறுகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சி சில அரசியல்வாதிகள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது.
தனுசு: குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசிநாதன் அருள் பார்வை உங்களுக்கு கிடைக்கிறது. நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் ராகு பயணம் செய்வதாலும், கேது பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கு மாறுவதாலும் உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படப்போகிறது. அரசியல்வாதிகளின் வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவார்கள். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை தவிர்த்தால் வெற்றிகளை வசமாக்கலாம். இல்லாவிட்டால் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் உண்டாகும். உங்களின் திறமை வெளிப்படும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கௌரவ பதவிகள் தேடி வரும். கட்சித்தலைமையின் ஆதரவினால் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

மகரம்: ராகு கேது பெயர்ச்சி உங்களுடைய முயற்சிகளில் வெற்றியை தேடித்தரப்போகிறது. கேது பகவான் உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானத்திற்கு மாறுவதால் நிறைய நன்மைகள் நடைபெறப்போகிறது. ஆன்மீக பயணங்கள் அதிகரிக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். பல வழிகளில் இருந்தும் பணம் வரும். தேர்தல் காலம் நெருங்குவதால் வேலைப்பளு அதிகரிக்கும். நெருக்கடிகளை எளிதில் சமாளிக்கும் தெம்பும் தைரியமும் கிடைக்கும். ஜென்மசனியால் ஏற்பட்ட மந்த நிலை மாறப்போகிறது. சுறுசுறுப்பும் தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். அலைச்சல் காரணமாக உடல் சோர்வு வரலாம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் மன அழுத்தங்கள் நீங்கும்.
கும்பம்: சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மிகப்பெரிய முன்னேற்றத்தை தரப்போகிறது. குடும்ப ராகு, அஷ்டம ஸ்தான கேது நன்மைகளை தரப்போகிறார். போட்டிகளை எளிதில் சமாளிப்பீர்கள். எதிரிகளை தூசு தட்டுவீர்கள். அரசியலில் ஆழம் பார்த்தவர்கள் நீங்கள் எதையும் அனுசரித்து சென்று வெற்றிகளை குவிப்பீர்கள். பண விவகாரங்களில் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் பணிகளை செய்து கட்சி தலைமையிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். எதிர்பார்த்த பதவிகளை அடைவீர்கள். நீங்கள் சொல்வது அனைத்தும் பரிசீலனை செய்யப்படும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

மீனம்: குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீன ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியில் ஜென்ம ராகுவாகவும், ஏழாம் வீட்டில் களத்திர கேதுவாகவும் பயணம் செய்வதால் எடுத்த முயற்சிகள் கைகூடும் ஆதாயங்கள் அதிகரிக்கும். கட்சி தலைமையிடம் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பல வழிகளில் இருந்தும் பண வருமானம் வரும். பதவி உயர்வு தேடி வரும் கௌரவ பதவிகள் உங்களுக்கு கிடைக்கும். நெருக்கடிகளை முறியடிப்பீர்கள். காரியங்களில் வெற்றி காண்பீர்கள். துணிச்சலும் தைரியமும் அதிகரிக்கும். புது பொறுப்புகள் தேடி வரும் அதை சுமையாக கருதாமல் சுகமாக செய்து கட்சித்தலைமையிடம் நற்பெயர் சம்பாதிப்பீர்கள். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்த்தாலே போதும் வெற்றிகளை கைவசப்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications