ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: 4 ராசிக்காரர்களுக்கு அஷ்ட லட்சுமி யோகத்தை அளித்தரும் ராகு கேது
சென்னை: ராகு கேது பெயர்ச்சி மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நவ கிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும் ராகுவும் கேதுவும் மீன ராசிக்கும் கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைந்து விட்டன. ராகுவும் கேதுவும் சக்தி வாய்ந்த கிரகங்கள். 18 மாதங்கள் ராகு கேதுவின் பயணத்தால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களில் யாருக்கு அஷ்டலட்சுமி யோகம் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.
தனுசு: முன்னோர்கள் சொத்துக்கள் தேடி வரும். மன குழப்பங்கள் நீங்கும். நோய், கடன், வம்பு வழக்கு பிரச்சினைகள் நீங்கும். சுக ஸ்தான ராகு சுகத்தை தருவார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். தொழில் ஸ்தான கேது நல்ல வேலை, புரமோசனை கொடுப்பார். குருவின் பார்வை உங்களுக்கு கிடைப்பதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். சுப காரியங்கள் நடைபெறும். திருமணத்திற்கு வரன் பார்க்கலாம். 18 மாதங்களும் யோக காலங்கள்தான். மன குழப்பங்கள் நீங்கும். வெளியூர் பயணம் செல்லப்போகிறீர்கள். சுய தொழில் தொடங்குவீர்கள். மாங்காடு சென்று காமாட்சி அம்மனை வழிபட்டு வர நன்மைகள் அதிகம் நடைபெறும்.

மகரம்: முயற்சி ஸ்தான ராகு வெற்றிகளை தரப்போகிறார். பாக்ய ஸ்தான கேது மகிழ்ச்சியை தரப்போகிறார். உளவியல் ரீதியாக பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். இன்னும் சில மாதங்களில் குரு பார்வை கிடைக்கப்போவதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். யோகங்கள் கை மேல் வரப்போகிறது. தான தர்மங்கள் செய்யப்போகிறீர்கள். சொத்து சேர்க்கை ஏற்படும். மிகப்பெரிய ராஜயோகம் கிடைக்கப்போகிறது. வெற்றிப்படிக்கட்டுகளில் ஏறப்போகிறீர்கள். வாலாஜா பேட்டை தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் ராகு கேதுவை தரிசனம் செய்ய நன்மைகள் மேலும் அதிகரிக்கும்.
கும்பம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி நடைபெறுகிறது. தன குடும்ப ஸ்தானத்தில் ராகு வந்து அமர்கிறார். எதிர்பாராத பண வருமானம் அதிகரிக்கும். அதே நேரத்தில் சுப விரைய செலவுகளும் அதிகரிக்கும். ராஜயோகமும் கௌரவ பதவிகளும் தேடி வரும் கோடீஸ்வரர் ஆகும் யோகம் தேடி வரப்போகிறது. கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். குரு பகவானின் வீட்டில் ராகு பயணம் செய்வதால் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். எட்டாம் வீட்டில் கேது பயணம் செய்வதால் படிப்பினை அதிகரிக்கும். உண்மையான உறவுகளை புரிய வைப்பார் கேது. பண விசயங்களில் கவனம் தேவை. யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். சொந்த பந்தங்களுடன் சேர்ந்திருப்பீர்கள். சிவ ஆலயத்தில் உள்ள ராகு கேதுவை வணங்குங்கள் நல்லது நடக்கும்.
மீனம்: ராசிநாதன் குரு பகவானை விட்டு ராகு விலகி விட்டார். குரு சண்டாள தோஷம் முடிவுக்கு வந்து விட்டது. குரு இனி தனது பணிகளை தடைகள் இன்றி செயல்படுத்துவார். ராகு பகவான் தலைமேல் அமர்ந்து விட்டார். களத்திர ஸ்தானமான ஏழாவது வீட்டில் கேது பயணம் செய்கிறார். திருமண சுப யோகம் கை கூடி வரப்போகிறது. பண வருமானம் அதிகரிக்கும் சொன்ன சொல்லுக்கு மதிப்பு கூடும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். குரு பெயர்ச்சிக்குப் பிறகு தோஷங்கள் விலகும். மீன ராசியில் ராகு அமர்ந்துள்ளது ராஜ யோகத்தை தரப்போகிறது. மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். மனதில் இருப்பதை எதையும் வெளிப்படையாக சொல்லாதீர்கள். 18 மாதங்களும் உங்களுக்கு அஷ்ட லட்சுமி யோகத்தை தரப்போகிறது. கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம், பூம்புகார் அருகில் உள்ள கீழப்பெரும்பள்ளம் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வருவது நன்மையை அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications