ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: தொட்டதெல்லாம் பொன்னாகும்.. 4 ராசிக்காரர்களுக்கு இனி பொற்காலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராகு கேது ஆடும் ஆட்டத்தினால் குப்பையில் இருப்பவர்கள் கூட உச்சத்திற்கு செல்வார்கள். கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் கோடி கோடியாக அள்ளித்தருவார் ராகு பகவான். ராகு கேது பெயர்ச்சியால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களில் யாருக்கு பொற்காலம் தொடங்கப்போகிறது என்று பார்க்கலாம்.

ராகு கேது பெயர்ச்சி: பெரும்பாலான கோவில்களில் நாளைய தினம் ராகு கேது பெயர்ச்சி பரிகார யாகங்கள் செய்கின்றனர். சிறப்பு அபிஷேகங்களும் லட்சார்ச்சனையும் செய்கின்றனர். திருக்கணித பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் 30ஆம் தேதி நிகழ உள்ளது. மேஷ ராசியில் இருந்து ராகு மீன ராசிக்கும் துலாம் ராசியில் இருந்து கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியால் தனுசு மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு கோடீஸ்வர யோகமும் திடீர் அதிர்ஷ்டமும் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.

Rahu ketu peyarchi palan 2023: Dhanusu,Makaram, Kumbam and Meenam Prediction

தனுசு: ராகு நான்காம் வீட்டிற்கும் கேது 10ஆம் வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றனர். 4ஆம் பாவம் தாயார்,சுகம்,வாகனம் கல்வி,நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இந்த 4ஆம் பாவத்திற்கு ராகு வருகிறார். பத்தில் ஒரு பாவி இருந்தால் பதவி யோகம் தேடி வரும் என்று சொல்வார்கள். இது வரை தடைப்பட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவுக்கு வரும். ராகு பகவான் வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். சிலருக்கு இடமாற்றம் தொழில் மாற்றம் வரலாம். பழைய கடன்கள் அடைப்படும். பணவரவுகள் சேமிப்பாக உயரும். ஜீவன ஸ்தானத்தை பார்ப்பதால் தொட்டது துலங்கும் நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். பத்தாம் இடம் என்பது தொழில், மாமியார் வீடு, உத்தியோகம் வேலை வாய்ப்பு ஆகிய ஸ்தானங்களுக்கு கேது வருகிறார். லாப ஸ்தானத்தில் இருந்து யோகத்தை செய்த கேது இப்பொழதும் யோககாரனாக செயல்பட்டு யோக பலனை வாரி வழங்குவார். தொழில் நிலை முன்னேற்றத்தை தரும்.யோகம் வசதி வாய்ப்புகள் கூடும். தனுசு ராசிக்காரர்களுக்கு இன்னும் 18 மாதங்களுக்கு நல்லதே நடக்கும். நம்பிக்கையோடு இருங்கள்.

மகரம்: "ராகு பதினொன்று,முன்று,ஆறாம் இடத்திற்கு சேரின் பாகு தேன் பழமும் பாலும் வற்றாத தனமும் உண்டாகும்.
"காரியங்களுண்டாம்,அன்னதானங்களுண்டாம்.வாகு மதி மணமுண்டாம்,வரத்து மேல் வரத்துண்டாம்" என்ற ஜோதிட பாடல் படி ராகு இப்பொழுது யோகத்தை வழங்க போகிறார். கடந்த முன்று ஆண்டுகளாக கஷ்டம், பலவிதமான பிரச்சனைகள் கடன், வம்பு, வழக்குகள் இதை எல்லாம் முறியடித்து தலைநிமிர்ந்து வாழ வழி செய்யப்போகிறார் ராகு பகவான். கடந்த ஓன்றறை ஆண்டுகளாக வரன் தேடியும் அமையாத திருமண நிகழ்ச்சிகள் சுபமாக முடியும். உங்களின் நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். மோட்சத்தை கொடுக்க கூடிய கேது பகவான் 9ஆம் வீட்டிற்கு வருவதால் உங்களுக்கு பொற்காலம் ஆரம்பமாகப்போகிறது. கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டீர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். இனி எந்த பிரச்சினைகள் வந்தாலும் ராகு கேது உங்களை காப்பாற்றி நல்ல வழி வாழ நல்லது செய்யும்.

Rahu ketu peyarchi palan 2023: Dhanusu,Makaram, Kumbam and Meenam Prediction

கும்பம்: குடும்ப ஸ்தானமான 2ம் இடத்தில் ராகுவும்,8ம் இடத்திற்கு கேதுவும் வருகிறார்கள். உங்களுக்கு தேவைகேற்ப தனவரவு, நண்பர்கள் உதவி கிடைக்கும். பூர்வீக சொத்து வீடு மனைகளால் பிரச்சனை வரலாம். எதிலும் நிதானமாக பேசியும் அமைதியாகவும் செயல்படுவது நல்லது. அரசு மற்றும் வெளிநாட்டு வேலைகளுக்கு காத்து இருந்தவர்களுக்கு வாய்ப்பு கை கூடிவரும். வீடு பூமி வாகனம் சம்பந்தபட்ட வகையில் சுப விரைய செலவுகள் ஏற்படும். யாரோ பட்ட கடனுக்கு நீங்கள் பொறுப்பேற்று கடனை அடைக்கும் நிலையும் வரலாம். கேது 8ஆம் வீட்டில் இருப்பதால் தொட்டது துலங்கும். இது வரை யாரோ நமக்கு செய்வினை வைத்து விட்டார்களோ என்று பயந்து போன உங்களுக்கு கேது பகவான் போட்டி பொறாமை எதிரி எல்லாவற்றையும் அழிப்பார். கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கப்போகிறது. பொற்காலம் தொடங்கப்போகிறது.

மீனம்: "ஆமேடம் எருது சுறா நண்டு கன்னி ஜந்து இடத்தில் கருநாகம் அமர்ந்திருக்க பூ மேவும் ராஜயோகம் தனிதுயில் என்று புகழலாமே" என்ற யோகத்தால் எதையும் சாதிக்கும் வல்லமையை ராகு கொடுத்தார். ஜென்ம ராசியில் வரும் ராகுவிற்கு கேதுவின் பார்வையும் ராசிக்கு கிடைக்கிறது. நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். சகோதர சகோதரிகள் வகையில் அனுகூலம் ஆதாயத்தை தரும். சிலருக்கு மனைவி பெயரில் தொழில் தொடங்கும் வாய்ப்பு வரும். தொழிலில் முன்னேற்றம் வரும். சிலருக்கு தொழில் மாற்றம்,இடமாற்றம் வரலாம். நண்பர்கள் உதவியால் பொருளாதாரம் நிலை உயரும் இது வரை தடைப்பட்ட திருமணம் இனி தடை நீங்கி நடக்கும். உத்தியோக உயர்வு கல்வி மேன்மையை பெற்று நல்ல வேலைக்கு போகலாம். உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு வரும். ராகு கொடுத்தால் கேது கெடுப்பார். எல்லாவற்றிலும் கவனமாக செயல்பட வேண்டும். ராகு 7ம் இடத்தை பார்ப்பதால் இது வரை செய்த பரிகாரங்களுக்கு இப்பொழுது தான் பலன் கிடைக்கும். குல தெய்வ வழிபாடு குடும்பத்தில் மன நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கப்போகிறது. ராகு கொடுப்பதை அனுபவிக்கத் தயாராகுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+