ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: சுகமும் சந்தோஷமும் தரப்போகும் ராகு.. புது வேலை யாருக்கு கிடைக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் இறுதியில் நிகழப்போகிறது. மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு ராகு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு கேது இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ராகுவை போல கொடுப்பார் இல்லை என்று சொல்வார்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியால் சுகமும் சந்தோஷமும் யாருக்கு கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாரும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். குரு பகவானைப்போல ராகுவும் புதன் பகவானைப் போல கேதுவும் செயல்படப்போகின்றனர்.

Rahu ketu peyarchi palan 2023: Dhanusu Rasi Rahu Ketu Peyarchi Palan

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி புதுவித மாற்றங்களைத் தரப்போகிறது. 4ஆம் வீட்டில் ராகுவும் 10ஆம் வீட்டில் கேதுவும் அமரப்போகின்றனர். 4ஆம் பாவம் தாயார், சுகம், வாகனம் கல்வி, நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இந்த 4ஆம் பாவத்திற்கு ராகு வருகிறார். கேந்திர ஸ்தானத்தில் வரும் ராகு கேது இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவி செய்வார்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மருத்துவ செலவுகள் வரும். தாய்வழி உறவினர்களுக்கு இழப்பும் ஏற்படும்.

பத்தாம் இடம் என்பது தொழில், மாமியார் வீடு, உத்தியோகம் வேலை வாய்ப்பு ஆகிய ஸ்தானங்களுக்கு கேது வருகிறார். தொழிலில் இடமாற்றம் ஏற்படும். பத்தாம் இடத்தில் கேது அமர்வது ஒருசிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். வீடு கட்டவேண்டும் என்கிற நீண்ட நாள் கனவுகள் நனவாகும். கடன்கள் அடைபடும். கடந்தகால பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். புதிய வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும்.

Rahu ketu peyarchi palan 2023: Dhanusu Rasi Rahu Ketu Peyarchi Palan

பெண்களுக்கு உத்யோகத்தில் உயர்வு கிடைக்கும். தொழிலில் இடமாற்றம் உத்யோக உயர்வை கொடுக்கும். வெளிநாட்டு தொடர்புடைய தொழில்கள்,வருமானம் அனுகூலம் ஆதாயத்தை தரும். பூர்வீக இடத்தை விட்டு விட்டு சிலருக்கு தொழில் ரீதியாக இடமாற்றம் வரலாம். தனம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு எதிர்பாராத திருப்பத்தை தரும். இந்த ராகு கேது பெயர்ச்சியினால் நல்ல வேலை வாய்ப்பு அமையும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். அவப்பெயர் நீங்கும். மூத்தவர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். புதிய வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஆன்மீக சுற்றுலா பயணங்கள் அதிகரிக்கும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+