கேது பெயர்ச்சி பலன்கள் 2023.. தலைமேல் அமரும் தலையில்லாத கேது.. கன்னி ராசிக்காரர்கள் நிலை என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலையில்லாத கேது கன்னி ராசிக்காரர்களின் தலைமேல் அமர்ந்து என்னென்ன மாயங்களை செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கேது பெயர்ச்சி பலன்களை எழுதியுள்ள ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன், தலையில்லாத கேது என்ன செய்யப்போகிறார் என்பதை மீம்ஸ் ஆக பதிவிட்டுள்ளார்.

சோபகிருது வருஷம் புரட்டாசி மாதம் 21ம் தேதி அக்டோபர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 03:40 க்கு ராகு கிரகம் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும் கேது கிரகம் துலா ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைந்துள்ளது.

Rahu Ketu Peyarchi Palan 2023: Ketu transit from Thulam to Kanni rasi palan Astrology Memes

இந்த கிரகப்பெயர்ச்சி ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ராகு கேது கிரகங்கள் பின்னோக்கி நகரக்கூடியவை. கேது எப்பொழுதும் எதிர் கடிகார திசையில் சுழலும் தன்மை கொண்டது. தற்போது கேது இருக்கும் திசை மேற்காகும். கன்னி ராசி தெற்கு திசையை குறிக்கும். எனவே கேது கன்னி ராசி வந்ததும் உங்கள் ஜாதகத்தில் தெற்கு திசையில் இருக்கும் கிரகங்களை பாதிப்பார்.

ராசிக்கட்டத்தில் தெற்கு திசையை குறிக்கும் ராசிகள் முறையே "கன்னி", "ரிஷபம்", "மகரம்" ஆகும். மேலும் கேது எதை நோக்கி நகருகிறதோ அந்த ராசி எனவே "சிம்மம்". எனவே கேது கன்னி, ரிஷபம், மகரம் மற்றும் சிம்ம ராசியில் இருக்கும் கிரகங்களை பாதிக்கும்.

Rahu Ketu Peyarchi Palan 2023: Ketu transit from Thulam to Kanni rasi palan Astrology Memes

தந்தை உடன் கருது வேறுபாடு, தந்தைக்கு உடல்நல குறைபாடு, மூத்த மகன் உடன் கருது வேறுபாடு, வலது கண் பாதிப்பு, அரசாங்கம் வழியில் வழக்கு, ஆத்மா ஞானம், நிர்வாகப் பொறுப்பில் உள்ளவருக்கு சிக்கல், சிவ வழிபாடு அதிகரிக்கும், ஜாதகர் அரசியல்வாதி எனில் அவருக்கு சிக்கல், விந்தணு குறைபாடு, கண்கள் பாதிப்பு, மேலதிகாரியுடன் கருத்துவேறுபாடு, ஊதிய குறைபாடு, ஊதிய உயர்வு தடை, எலும்புகள் பாதிப்பு போன்றவை ஏற்படும்.
பரிகாரம் - சதுர்த்தி அன்று விநாயகர் கோவிலுக்கு சென்று ஒரு சுற்று வலம் வர வேண்டும்.

சந்திரன் - மன குழப்பம், மன அழுத்தம் , தாய் உடன் கருத்துவேறுபாடு, தாய்க்கு உடல்நல குறைபாடு, மாமியாருக்கு உடல்நல குறைபாடு, பயண தடை, விரதம் மேற்கொள்ளுதல், உணவு கட்டுப்பாடு, கண் பாதிப்பு, சோதிட ஆர்வம், ஹோர்மோன் குறைபாடு, சிறுநீரக குறைபாடு, ரத்த சோகையால் உடல் நலம் குறைபாடு உண்டாகும். இதற்கு பரிகாரமாக சங்கடகர சதுர்த்தி விரதம் இருக்கலாம். கோச்சார கேது ஜெனன ஜாதக கேதுவை அல்லது ராகுவை சந்திப்பதால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் மணிகண்டன் பாரதிதாசன் பதிவிட்டுள்ளார்.

Rahu Ketu Peyarchi Palan 2023: Ketu transit from Thulam to Kanni rasi palan Astrology Memes

கன்னி ராசிக்காரர்களுக்கு களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில் ராகு பயணம் செய்யப்போகிறார் புதிய தொழில் தொடங்கலாம். கோர்ட்டு விவாகரத்து என்று அலைந்தவர்களுக்கு தீர்ப்பு சாதகமாக அமைந்து மறுமணம் நடக்கலாம். உங்கள் ராசியில் கேது கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். அடுத்த ஆண்டு மே மாதம் குரு ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அப்போது கன்னி ராசியின் மீது குருவின் பார்வை விழுகிறது. அந்த வகையில் கேதுவுக்கு குரு பார்வை கிடைப்பதால் கோடீஸ்வர யோகம் தேடி வரும். கஷ்டங்களில் இருந்து விடிவு விமோசனம் ஆகியவற்றை அடையலாம். காலம் பிறக்கும் நல்ல வேலை கிடைக்கும். இது வரை போரட்டாம் ஏமாற்றம் சஞ்சலம் என்று வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் மாற்றம் முன்னேற்றம் வரும்.

அதே நேரத்தில் தலையில்லாத கேது கன்னி ராசியின் தலைமேல் அமர்ந்து ஆடப்போகும் ஆட்டங்களை மீம்ஸ் ஆக ஜோதிடர்கள் பதிவிட்டுள்ளனர். தலையில்லாத கேது தன் மேல் ஏறி உட்காருவதை உணர்கிறான் கன்னி ராசிக்காரர்கள் என்று பதிவிட்டுள்ளார் ஜோதிடர். இந்த கேது பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும் என்று பொதுவான பலன்களில் கூறப்பட்டுள்ளது. கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கை உச்சமடையப்போகிறது. கேது கன்னி ராசிக்காரர்களின் ராசி நாதன் புதன் போல போல செயல்படப்போகிறார். உங்களுக்கு வெற்றிகளை தருவார். மனதில் சந்தோஷத்தையும் சிந்தனையில் தெளிவையும் தருவார் ஞானகாரகன் கேது.

ராசியில் கேது அமர்வதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும். வருமானம் திருப்தி தரும். உடல் நலத்தில் கவனம் தேவை. வெளி உணவுகளைத் தவிர்த்து விடுங்கள் சில நேரங்களில் வருமானம் அதிகரித்தாலும் சேமிக்க முடியாமல் திணறுவீர்கள். திடீர்ப் பயணங்கள் அடிக்கடி நிகழும். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி நன்மைகளைத் தரப்போகிறது. மகிழ்ச்சியும் மனநிம்மதியும் தேடி வரப்போகிறது. பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து பூஜை அறையில் விளக்கேற்றி தியானம் செய்யுங்கள் நல்லதே நடக்கும் மனக்குழப்பங்கள் தீரும். திருச்செந்தூர் சென்று செவ்வரளி மாலை சாற்றி முருகப்பெருமானை வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+