ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: வெளிநாட்டு வேலை.. புது தொழில் தொடங்கும் யோகம் யாருக்கு தேடி வரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராகு கேது பெயர்ச்சி பலரது வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. மேஷ ராசியில் உள்ள ராகு மீனம் ராசிக்கும் துலாம் ராசியில் உள்ள கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைவதால் மீனம் ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகும் அதே நேரத்தில் திடீர் திருப்பங்களையும் தரப்போகிறது.

நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள்.

Rahu Ketu Peyarchi Palan 2023: Meenam Rasi Rahu ketu Peyarchi Palan and Parikaram

ராகுபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். கேது பகவான் எட்டாவது வீட்டில் பயணம் செய்கின்றனர். நவம்பர் மாதம் முதல் உங்கள் ஜென்ம ராசியில் வரும் ராகுவிற்கு கேதுவின் பார்வையும் கிடைக்கிறது. ஜென்ம ராசி என்பது கௌரவம், செயல் தன்மை, கீர்த்தி, செல்வாக்கு,புகழ்,பெறுமை,ஆற்றலை குறிக்கும் இடமாகும். குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் நீங்கும்.

நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும்.சகோதர சகோதரிகள் வகையில் அனுகூலம் ஆதாயத்தை தரும். ராகுவை சனி பார்ப்பதால் தேவையில்லாத விரைய செலவை கொடுக்கும். சிலருக்கு மனைவி பெயரில் தொழில் தொடங்கும் வாய்ப்பு வரும். தொழிலில் முன்னேற்றம் வரும். சிலருக்கு தொழில் மாற்றம்,இடமாற்றம் வரலாம். பொருளாதாரம் நிலை உயரும் இது வரை தடைப்பட்ட திருமணம் இனி தடை நீங்கி நடக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும்

பேச்சில் இருந்த குழப்பங்கள் நீங்கும். ஒருவித முதிர்ச்சியும் பக்குவமும் தெரியும். உங்களை சிலர் அவமதித்து பேசினாலும் அதற்கு சரியான பதிலடி கொடுப்பீர்கள். உங்களின் களத்திர ஸ்தானத்தை ராகு பார்வையிடுவதால் இது வரை செய்த பரிகாரங்களுக்கு இப்பொழுது தான் பலன் கிடைக்கும். மாணவர்கள் கல்வி மேன்மையை பெற்று நல்ல வேலைக்கு போகலாம். உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு கைகூடி வரும். வயிறு பிரச்சினை வரலாம் வெளி உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். நேரம் கடந்து சாப்பிடும் வழக்கத்தையும் மாற்றிக் கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் கேது இருப்பதால் கணவன், மனைவிக்குள் அவ்வப்போது காரசாரமான விவாதங்கள் வந்துபோகும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லுங்கள் அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். தொழில் ரகசியங்களை யாரிடமும் வெளியிடவேண்டாம். வேலை செய்யும் இடத்தில் பதவி உயரும். மேலதிகாரியை பகைத்துக்கொள்ள வேண்டாம். தவிர்க்க முடியாத செலவும் அதனால் கடன் வாங்கும் கட்டாயமும் வரலாம். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பார்கள்.

ராகு கொடுத்தால் கேது கெடுப்பார் ஜென்ம ராகு களத்திர கேது பயணம் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தும். இனி எல்லாவற்றிலும் கவனமாக செயல்பட வேண்டும். வியாழக்கிழமையன்று ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு போடுங்கள். ராகு, கேதுப் பெயர்ச்சி, கவலைகளிலிருந்து உங்களை விடுவித்து முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்லும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+