ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: பத்தில் ஒரு பாவி.. பதவி சுகத்தை சந்தோஷமாக அனுபவிக்கப்போவது யார்?
சென்னை: நவ கிரகங்களில் ராகு கேது நிழல் கிரகங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி அடையும். ராகு கேது இந்தாண்டு வரும் அக்டோபர் இறுதியில் இடப்பெயர்ச்சி அடைகின்றன. மேஷ ராசியில் உள்ள ராகு மீனம் ராசிக்கும் துலாம் ராசியில் உள்ள கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைவதால் மிதுன ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் என்ன பலன்கள் கிடைக்கும் யோகங்கள், அதிர்ஷ்டங்கள் தேடி வருமா என்று பார்க்கலாம்.
ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாரும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். மீன ராசியில் அமரும் ராகு குருவைப்போலவும், கன்னி ராசியில் அமரும் கேது புதன் பகவானைப் போலவும் செயல்படப்போகிறார்.

நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ,ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சி மிதுன ராசியில் மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்குக் கொடுக்கும் பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு ராசிக்கு 11ல் ராகுவும் 5ல் கேதுவும் அமர்ந்து இருக்கின்றனர். நவம்பர் மாதத்தில் இருந்து ராகு 10ஆம் வீட்டிலும் கேது 4ஆம் வீட்டிலும் இடம் மாறி அமரப்போகின்றனர். ஏற்கனவே இருந்த இடம் யோகமான இடமாகும். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு கேந்திரத்தில் பாவ கிரகங்கள் வரும் பொழுது வலிமையாக பலனை செய்யும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த நீங்கள், இனி அதற்கான நற்பலனை அடைவீர்கள். குடும்பத்தில் அமைதியும் சாந்தமும் நிலவும் கணவன், மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். பணவரவு அதிகம் உண்டு.
பத்தில் ஒரு பாவி வந்தால் பதவியும் கூடவே வரும் என்று சொல்வார்கள். மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு 10ல் ராகு வருவதால் நல்ல வேலையும் பதவி உயர்வும் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் உண்டு.
குழந்தை இல்லாத தம்பதியருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு, வாகன வசதி பெருகும். வீண் அலைச்சல்கள் நீங்கும். இனி திட்டமிட்டு எதையும் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வருமானத்தை அதிகரிப்பீர்கள். சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். வராமலிருந்த பாக்கிகளும் வசூலாகும். வாடிக்கையாளர்களைக் கவரும்விதமாக புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள்.
உங்களுக்கு ராகு கேது அடுத்த 18 மாதங்களுக்கு நன்மையை செய்யப்போகிறார்கள். சூரியனை கண்டு பனி விலகுவதை போல துன்பங்கள் விலகி ஓடும். ஓவ்வொரு முயற்சியும் காரியமும் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். 10 ஆம் இடம் தொழில் ஸ்தானம், கீர்த்தி, செல்வாக்கு அந்தஸ்து ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழிலாளி முதலாளி ஆகலாம். நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம் நல்ல சம்பளம் வசதி வாய்ப்புகளைஅதிகரிப்பார் ராகு பகவான்
சண்டை சச்சரவாக இருந்த குடும்பத்தில் சமாதானம் உண்டாகும். கணவன் மனைவி ஓற்றுமை ஒங்கும். குடும்பத்தில் சுபகாரியம் சுபமாக முடியும். வாடகை வீட்டில் உள்ளவர்கள் புது வீடு மாறலாம். புது வீடு, நிலம் வாங்கும் வசதி அதிகரிக்கும். கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு வருமானம் அதிகாக்கும். கடன் சுமை குறையும். இந்த ராகு கேது பெயர்ச்சி ஆறுதலையும் முன்னேற்றத்தையும் தரும்.
இதுவரையில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்துகொண்டு, முன்கோபத்தை ஏற்படுத்திய கேது. இப்போது ராசிக்கு நான்காம் வீட்டில் சுக ஸ்தானத்தில் அமர்கிறார். பதற்றம் நீங்கும் பேச்சில் கனிவு பிறக்கும். உங்களின் நட்பு வட்டம் அதிகரிக்கும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வீட்டில் தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் இனி நடக்கும். பிள்ளைகளின் பிடிவாத குணம் மாறும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.
நான்காம் வீட்டில் கேது அமர்வதால் அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். மருத்துவச் செலவுகள், வந்துபோகும். சிலர் வீட்டுக்குத் தேவையான ஆடம்பரப்பொருட்களை வாங்குவீர்கள். சொந்தவீடு கனவு நனவாகும். வீடு கட்ட தேவைப்படும் பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு, வீடு கட்ட தொடங்குவது நல்லது. வியாபாரத்தில், உங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்வீர்கள். பாராட்டும் பதவி உயர்வும் வரும். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வணங்க மேலும் நன்மைகள் நடைபெறும். ஞாயிறன்று ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு போடுங்கள் மகிழ்ச்சியும் நிம்மதியும் வீட்டில் நிறைந்திருக்கும்.












Click it and Unblock the Notifications