ராகு கேது பெயர்ச்சி 2023: வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்.. பாடப்போவது யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கால புருஷ தத்துவப்படி ராகு பகவான் 12ஆம் வீடான அயன சயன போக ஸ்தானமான மீன ராசிக்கும் கேது பகவான் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானமான கன்னி ராசிக்கும் மாறுகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய ராசிகளில் பிறந்த அரசியல்வாதிகளின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது என்று பார்க்கலாம்.

சிம்மம்: அஷ்டம ஸ்தான ராகு தன வாக்கு ஸ்தான கேது என 18 மாதங்கள் பாம்பு கிரகங்கள் பயணம் செய்யப்போகின்றன. தடைகளை தாண்டி வெற்றி பெறப்போகிறீர்கள். மனக்கவலைகள் நீங்கும். போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். சிம்ம ராசியில் பிறந்த அரசியல்வாதிகள் கட்சி பிரச்சினையில் கவனமாக இருக்க வேண்டும். பேச்சை உங்கள் கண்ட்ரோலில் வைத்துக்கொள்ளுங்கள். வாக்குக் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வரப்போகும் தேர்தல் காலத்தில் தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். காரணம் குருவின் பார்வை ஏப்ரல் மாதம் வரை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. கட்சித்தலைமையிடம் பாராட்டும் பதவியும் கிடைக்கும்.

Rahu ketu peyarchi palan 2023: Prediction for Simmam,Kanni,Thulam,Viruchigam

கன்னி: தலை மேல் கேது பயணம் செய்கிறார். ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானத்தில் ராகு பகவான் பயணம் செய்யப்போகிறார். எல்லாமே இழுபறியாக இருக்கிறதே எப்போது நல்லது நடக்கும் என்று யோசித்துக்கொண்டிருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் நிறைய பண வருமானத்தை தரப்போகிறார். எங்கேயும் எப்போதும் சந்தோஷம் என்று கொண்டாடும் அளவிற்கு கன்னி ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு வெற்றிகள் வரும் காலங்களில் தேடி வரப்போகிறது. பேச்சில் கவனமாக இருந்தால் வெற்றிகளை குவிக்கலாம். கட்சித்தலைமையை அனுசரித்து சென்றாலே போதும் பதவிகளும் பட்டங்களும் தேடி வரும்.

துலாம்: தலைமேல் இருந்த பாரம் இறங்கி விட்டது. கேது விலகியதால் உங்களுக்கு நேர்மறை எண்ணங்களும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட்டவர்கள் இனி எதையும் தெளிவாக சிந்திப்பீர்கள். களத்திர ராகுவும் விலகி ஆறாம் வீட்டிற்கு நகர்ந்து விட்டதால் மன உறுதி அதிகரிக்கும் வெற்றிகோட்டையை எட்டிப்பிடிக்கப் போகிறீர்கள். பொருளாதாரரீதியாக பலம் பெறுவீர்கள். புதிய பொறுப்புகளும் பதவிகளும் தேடி வரப்போகிறது. கடமையை கண்ணாக செய்தாலே மக்கள் செல்வாக்குடன் அதிகார பலமும் தேடி வரும்.

Rahu ketu peyarchi palan 2023: Prediction for Simmam,Kanni,Thulam,Viruchigam

விருச்சிகம்: பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டில் ராகு பகவான் பயணம் செய்கிறார். லாப ஸ்தானத்தில் கேது பயணம் செய்வதால் பண வருமானம் பல வழிகளில் இருந்தும் வரும். பேசும் வார்த்தைகளில் கவனமாகவும் நிதானமாகவும் இருப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை. மரியாதைக்கு பங்கம் வரலாம் கவனம் தேவை. கட்சித்தலைமையிடம் மனம் விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். இந்த தேர்தலில் உங்களின் திறமை பளிச்சிடும். அரசியலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொது மேடைகளில் எச்சரிக்கையாக பேசுவது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+