ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: புனர்பூசம், பூசம், ஆயில்யம்..யாருடைய வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை
சென்னை: மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் ராகு மீன ராசியில் ரேவதி நட்சத்திற்கு இடம் மாறுகிறார். அதே போல துலாம் ராசியில் உள்ள கேது கன்னி ராசியில் உள்ள சித்திரை நட்சத்திரத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த இடப்பெயர்ச்சியால் புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.
புனர்பூசம்: குரு பகவான் நட்சத்திரமான புனர்பூசத்தில் பிறந்தவர்கள் வெற்றிகளை ருசிக்கப் பிறந்தவர்கள், மிதுன ராசியில் மூன்று பாதங்களும் கடக ராசியில் ஒரு பாதமும் இந்த நட்சத்திரத்திற்கு உள்ளது. ராகு கேது பெயர்ச்சி இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சாதகமாகவே உள்ளது. ராகு பத்தாம் வீட்டிலும் கேது நான்காம் வீட்டிலும் பயணம் செய்கின்றனர். சுகஸ்தான கேது தொழில் ஸ்தான ராகு உங்களுடைய வாழ்க்கையில் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் தரப்போகின்றனர். வேலை மாற்றம், வீடு மாற்றம், ஊர் மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது. நல்ல மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தயாராகுங்கள். உங்களுடைய தசாபுத்தி பார்த்து அதற்கேற்ப வரக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கேது திசை நடப்பவர்களுக்கு சற்றே சுமாரான பலன்களைத் தரும். புதன் திசை நடந்து கொண்டிருந்தால் உங்களுக்கு யோகம்தான் காரணம் கேது புதனை போல செயல்படப்போகிறார். ஜாதகத்தில் ராகுவும் புதனும் இணைந்திருந்தாலோ அல்லது ராகுவும் சனியும் இணைந்திருந்தாலோ மிகப்பெரிய யோகக்காரர்களாக இருப்பார்கள். இந்த ராகு கேது பெயர்ச்சி அற்புத யோகத்தை கொடுக்கப்போகிறது. நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். வேலையில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது.

பூசம்: சனி பகவானை அதிபதியாகக் கொண்ட பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி என்ன செய்யப்போகிறது என்று பார்க்கலாம். ராகு கடக ராசிக்கு 9ஆம் வீட்டிலும் கேது 3ஆம் வீட்டிலும் பயணம் செய்வதால் அந்த ராசியில் உள்ள பூசம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு அற்புதமான யோகத்தை தரப்போகிறது. உங்களுக்கு சுக்கிரதிசை நடக்கும் பட்சத்தில் கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறது. உங்கள் வாழ்க்கையில் அதிரடியான மாற்றத்தை தரப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து உயரும். எதையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதில் தன்னம்பிக்கை தைரியம் கூடும்.

ஆயில்யம்: புதன் பகவானை ராசி அதிபதியாகக்கொண்ட ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறவி புத்திசாலிகள். ராகு கேது பெயர்ச்சி மிகப்பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகளைத் தேடித் தரப்போகிறார். கேது திசை நடக்கும் பட்சத்தில் உங்களுக்கு சற்றே சுமாரான பலன்கள்தான். அதே நேரத்தில் தற்போது சுக்கிர திசை நடந்தால் ராகு பகவான் அற்புதமான யோகத்தை தருவார். வேலை செய்பவர்களுக்கு புரமோசன், சம்பள உயர்வை தரும். உங்களின் நிதி நிலைகளை மேம்படுத்தி பொருளாதார ரீதியாக மிகப்பெரிய முன்னேற்றத்தை தரப்போகிறது. மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகமாகவே இருப்பீர்கள். நேர்மறை எண்ணங்கள் உங்களுக்கு அதிகரிக்கும். மனதில் உள்ள கவலைகள் நீங்கி நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். எந்த பிரச்சினைகளையும் எளிதில் எதிர்கொள்வீர்கள்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications