Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: 18 ஆண்டுகளுக்குப் பின் அள்ளித்தரப்போகும் ராகு.. திடீர் லக் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவம்பர் மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. மேஷம் ராசியில் உள்ள மீனம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். ஒன்றரை ஆண்டுகாலம் மீனம் ராசியில் பயணம் செய்வார் ராகு. இதே போல துலாம் ராசியில் இருந்து கேது பகவான் நகர்ந்து கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குரு பகவானைப் போல ராகுவும் புதன் பகவானைப் போல கேதுவும் செயல்படப்போவதால் 18 ஆண்டுகளுக்குப் பின் திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம்.

துலாம்: உங்களுடைய ராசிக்கு எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன் அடைப்படும் தீராத நோய் தீரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் வீடு மனை வாங்கும் யோகம் வரும். தடைபட்ட திருமணம் நடைபெறும். நீண்ட நாள் கனவான குழந்தை பாக்கியம் கிடைக்கும். மோட்ச ஸ்தானத்தில் மோட்சகாரகன் கேது வருவதால் புது முயற்சிகள் கை கூடும். விரைய செலவுகள் குறைந்து சுப செலவுகள் உயரும். சுப தேவைகளுக்கு கடன் வாங்குவீர்கள். உங்களின் நீண்ட நாள் கடன்களும் அடையும். குரு பகவானைப் போல செயல்படும் ராகு அள்ளித்தரப்போகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சி திடீர் யோகத்தை கொடுத்து உங்களுக்கு செல்வம், செல்வாக்கை அதிகரிக்கப்போகிறது.

Rahu Ketu peyarchi Palan 2023: Rahu gives luck and fortune after 18 years Thulam to Meenam Prediction

விருச்சிகம்: ராகு உங்களுடைய ராசிக்கு 5ஆம் இடத்திற்கும் கேது லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிற்கும் வருகிறார்கள். 18 ஆண்டுகளுக்கு ஓருமுறை இந்த ஸ்தானங்களில் ராகு கேது சஞ்சரிப்பார்கள். விரைய செலவுகளால் அல்லல் பட்டு வந்தீர்கள். போதுமான வருமானம் வந்தாலும் நிம்மதி குறைந்த வாழ்க்கை வாழ்ந்த உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி நிம்மதியை தரும். கேது 11ஆம் வீட்டிற்கு வருவதால் தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும் சிலருக்கு மறுமணம் நடைபெறும். ராகு கேது பெயர்ச்சி சிலருக்கு ஆறுதலையும் முன்னேற்றத்தையும் வீடு மனை வாங்கும் யோகத்தை கொடுக்கப்போகிறது.

தனுசு: தனுசு ராசிக்காரர்களே ராகு கேந்திர ஸ்தானமான 4ஆம் இடத்திற்கும், கேது 10இடத்திற்கும் மாறுகிறார்கள். கேந்திரத்தில் வரும் ராகு கேது இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள். தாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் வரும். பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். சிலருக்கு இடமாற்றம் தொழில் மாற்றம் வரலாம். பழைய கடன்கள் அடைப்படும். பிள்ளைகளின் திருமணம் படிப்புக்கு செலவு செய்வீர்கள். கடனுக்கு வட்டி கட்டிய நேரம் மாறி வரவுகள் சேமிப்பாக உயரும். தொழில் உத்தியோகம் வேலை வாய்ப்பு ஆகிய ஸ்தானங்களுக்கு கேது வருகிறார். தொழிலில் இடமாற்றம் உத்தியோக உயர்வு கிடைக்கும். தனம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம் யோகத்தை கொடுக்கும். வசதி வாய்ப்புகள் கூடும். உங்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத திடீர் திருப்பம் உண்டாகும்.

Rahu Ketu peyarchi Palan 2023: Rahu gives luck and fortune after 18 years Thulam to Meenam Prediction

மகரம்: நிழல் கிரகமான ராகு பொதுவாகவே பதினொன்று,முன்று,ஆறாம் இடத்திற்கு வரும் போது எதிர்பாராத பண வரமும் தன வருமானமும் வரும்.
மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்திற்கு ராகு வரப்போவதால் செய்யும் தொழிலிலோ பார்க்கிற வேலையிலோ திருப்தி இல்லாத நிலைமாறி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். உங்களின் தேவைகள் யாவும் பூர்த்தியாகும் உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாள் இருந்த பிரச்சனைகள் தீரும். பாக்ய ஸ்தானத்திற்கு மோட்சத்தை கொடுக்க கூடிய கேது வருவதால் தடையின்றி சுப காரியம் நடைபெறும். நல்ல வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பளமும் கிடைக்கும். கடந்த காலங்களில் யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டீர்களோ அவர்கள் எல்லாம் வீடு தேடி வந்து தானாக உதவி செய்வார்கள்.

கும்பம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை தரப்போகின்றன. 18 ஆண்டுகளுக்குப் பிறகு ராகு உங்களுடைய ராசிக்கு 2ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். 2ம் இடம் என்பது செல்வம், குடும்பம்,பணம் கையிருப்பு, அசையும் சொத்துக்கள், கண்கள்,வாக்கு, நாணயம் இவைகளை குறிக்கும் பாவமாகும். குருபகவானைப் போல செயல்படும் ராகு பகவான் உங்களுக்கு அள்ளித்தரப்போகிறார். உங்களுக்கு தேவைகேற்ப பண வருமானம் வரும். நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகமும் கைகூடி வரும். தடைபட்ட சுப காரியங்கள் தடைகள் நீங்கி நடைபெறும். எட்டாம் வீட்டில் அமரும் கேதுவினால் தொட்டது துலங்கும். போட்டி பொறாமை எதிரிகள் தொல்லைகள் நீங்கும். வருமானம் அபரிமிதமாக வரும்.

Rahu Ketu peyarchi Palan 2023: Rahu gives luck and fortune after 18 years Thulam to Meenam Prediction

மீனம்: ராகு உங்க ராசிக்கும் கேது ஏழாம் வீட்டிற்கும் வரப்போகிறார்கள். ராகு உங்கள் ராசிநாதன் குரு பகவானைப் போல செயல்படுவார். 18 ஆண்டுகள் முடிவே இல்லாத பிரச்சனைகளை ஓன்றறை மணிநேரத்தில் தவிடு பொடியாக்கி செல்வாக்கை தக்க வைத்தார். இப்பொழுது ஜென்ம ராசியில் வரும் ராகு, ஏழாம் வீட்டில் உள்ள கேதுவின் பார்வையும் ராசிக்கு கிடைக்கிறது. நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். சகோதர சகோதரிகள் வகையில் அனுகூலம் ஆதாயத்தை தரும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியால் பொருளாதார நிலை உயரும் இதுநாள் வரை தடைப்பட்டிருந்த திருமணம் இனி தடை நீங்கி நடக்கும். உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு வரும். களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் கேது அமர்வதால் தவிர்க்க முடியாத செலவும் அதனால் கடன் வாங்கும் கட்டாயமும் வரலாம் கவனம் தேவை. ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபட பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+