ராகு கேது பெயர்ச்சி 2023: மன நிம்மதியும் மகிழ்ச்சியும் தரும் ராகு கேது - மின்னல் வேக பலன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராகு பகவான் மீன ராசிக்கும் கேது பகவான் கன்னி ராகிக்கும் இடப்பெயர்ச்சியாகும் இந்த காலத்தில் ராகு ரேவதி நட்சத்திரத்திலும் கேது சித்திரை நட்சத்திரத்திலும் பயணம் செய்யப்போகின்றனர். இந்த நட்சத்திர சஞ்சாரம் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்களைத் தரப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்: மன அழுத்தமும் குழப்பமும் நீங்கி மனதில் நிம்மதி பிறக்கும். உடலில் இருந்த ஆரோக்கியக் கோளாறுகள் படிப்படியாக நீங்கும். அழகும் பொலிவும் கூடும். ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை பயணம் செய்யப்போகிறார். வருமானம் அதிகரிக்கும். பணவரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும் என்பதால் அவற்றை நல்ல சுபசெலவுகளாக மாற்றிக்கொள்வது நல்லது. ஆறாம் வீட்டில் பயணம் செய்யும் கேதுவால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். சித்திரை நட்சத்திரத்தில் கேதுபகவான் பயணம் செய்யும் காலகட்டத்தில் கௌரவப் பதவிகள் தேடிவரும். பணம் பல வழிகளில் இருந்தும் வந்து சேரும்.

Rahu Ketu Peyarchi Palan 2023: Rahu Ketu Brings Peace of Mind and Happiness

ரிஷபம்: லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் ராகு வெற்றிகளையும் பண வருமானத்தையும் குவிக்கப்போகிறார். சவால்களை சாதனைகளாக மாற்றுவீர்கள். சவால்களை சாதனைகளாக மாற்றுவீர்கள். 2024 ஜூன் வரை ராகு ரேவதி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். தடையின்றி பண வருமானம் வரும். சுப செலவுகள் அதிகரிக்கும். கேது பகவான் 5ஆம் வீட்டில் பயணம் செய்வது சுமாரான பலனை கொடுக்கும். 2024ஆம் ஆண்டு பிப்ரவரி வரை கேது சித்திரை நட்சத்திரத்தில் பயணம் செய்யும் காலத்தில் உங்களுக்கு பண வருமானம் என்றாலும் செலவுகளும் கூடும்.

மிதுனம்: பத்தாம் வீட்டில் பயணம் செய்யும் ராகு காரிய வெற்றியை கொடுப்பார். தொழில் வியாபாரத்தில் லாபம் வரும். சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு பலிக்கும். ஜூன் 2024 வரை ரேவதி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் ராகுவினால் திடீர் பண வரவு வந்து திக்கு முக்காட வைக்கும் பதவி உயர்வு தேடி வரும். கேது நான்காம் வீட்டில் பயணம் செய்வதால் புத்திசாலித்தனம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கும். அக்டோபர் 2023 முதல் 2024 பிப்ரவரி வரைக்கும் கேது பகவான் சித்திரை நட்சத்திரத்தில் பயணம் செய்வதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பங்குச்சந்தை முதலீடுகள், பேராசை காட்டும் நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

கடகம்: ராகு பகவான் 9ஆம் வீட்டில் பயணம் செய்வதால் மிகப்பெரிய மாற்றங்களை உங்கள் வாழ்க்கையில் சந்திக்கப்போகிறீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். மன நிம்மதி அதிகரிக்கும். தூக்கத்தை தொலைத்தவர்கள் நிம்மதியாக உறங்குவீர்கள். ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் காலத்தில் பணம் பல வழிகளில் வரும். சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு மெய்ப்படும். முயற்சி ஸ்தானமான 3வது வீட்டில் கேது பயணம் செய்யும் காலத்தில் வெற்றிகள் தேடி வரும். மதிப்பு மரியாதை உயரும். 2024ஆம் ஆண்டு பிப்ரவரி வரைக்கும் பண வருமானம் அதிகரிக்கும் புதிய சொத்துக்கள் வாங்கலாம்.

சிம்மம்: பாவகிரகமான ராகு எட்டில் மறைவதால் நல்லதே நடக்கும். அலைபாய்ந்த மனம் இனி அமைதியாகும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் எனவே குடும்ப விஷயங்களை மூன்றாம் நபரிடம் வெளிப்படையாகப் பேசாமல் இருப்பது நல்லது. ராகு பகவான் வரும் ஜூன் 15, 2024 ஆம் ஆண்டு வரை பயணம் செய்வதால் பண வருமானம் அதிகரிக்கும். சுப விரைய செலவுகள் வரும் விபரீத ராஜயோகத்தால் வீடு வாகனம் வாங்கும் யோகம் கைகூடி வரும். கேது பகவான் குடும்ப ஸ்தானமான இரண்டாவது வீட்டில் பயணம் செய்யும் காலத்தில் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் களைகட்டும். சித்திரை நட்சத்திரத்தில் கேது பயணம் செய்யும் காலத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும். அதிகார பதவிகளில் அமரும் காலம் தேடி வரப்போகிறது.

கன்னி: ராகு பகவான் ராசிக்கு ஏழாவது வீடான களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்வதால் உங்களுக்குள் ஒளிந்து கிடந்த திறமை வெளிப்படும். வீண் விவாதங்களும், மன உளைச்சலும், டென்ஷனும் விலகும். காரிய வெற்றிகள் உண்டாகும். குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வந்து நீங்கும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ராகு ரேவதி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் காலமான ஜூன் 15,2024 வரைக்கும் பண வருமானம் அதிகரிக்கும். பெண்களுக்கு அற்புதமான காலகட்டமாக உள்ளது. கேது பகவான் இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். திடீர் பயணங்களால் கையிருப்பு கரையும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். சித்திரை நட்சத்திரத்தில் கேது பயணம் செய்யும் காலத்தில் வருமானம் அதிகரிப்பதால் வீடு மனை வாங்கும் யோகும் உண்டாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+