ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: குரு போல செயல்படும் ராகு.. கோடிகளை குவிக்கும் ராசிக்காரர்கள் யார்?
சென்னை: மேஷம் ராசியில் உள்ள ராகு நவம்பர் மாதத்தில் மீனம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். ஒன்றரை ஆண்டுகாலம் மீனம் ராசியில் பயணம் செய்வார் ராகு. இதே போல துலாம் ராசியில் இருந்து கேது பகவான் நகர்ந்து கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குரு பகவானைப் போல ராகுவும் புதன் பகவானைப் போல கேதுவும் செயல்படப்போவதால் கோடி கோடியாக செல்வம் யாருக்கு தேடி வரும் என்று பார்க்கலாம்.
மேஷம்: நவம்பர் மாதத்திற்குப் பிறகு 12 வீட்டிற்கு ராகுவும் 6ம் வீட்டிற்கு கேதுவும் இடம் மாறுகின்றனர். குருவுடன் பயணம் செய்த ராகு தனியாக பிரிந்து குருவின் வீடான மீன ராசிக்கு செல்கிறார். "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்" என்பதன் அடிப்படையில் இப்பொழுது 12ஆம் வீடான மறைவு ஸ்தானத்திற்கு ராகுவும் ஆறாம் வீடான ருண ரோக ஸ்தானத்திற்கு கேது வருவது நல்லது தான். சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும். கேதுவின் சஞ்சாரத்தினால் புது வேலை வாய்ப்பு மற்றும் தொழிலை பெருக்கி லாபம் சம்பாதிப்பீர்கள். சுகபோகங்களை பெருக்கி கொள்ளலாம். புதிய கடன்களை வாங்கினாலும் அது சுப விரயமாக மாறும். ராகு கேது பெயர்ச்சி முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் தரும். மகிழ்ச்சிகரமான ராகு கேது பெயர்ச்சியாக அமைந்துள்ளது.

ரிஷபம்: உங்க ராசிக்கு சாதகமான இடத்திற்கு ராகு கேது வரப்போகிறார்கள். 11ல் வரும் ராகு குருபகவானைப் போல எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவையும் லாபத்தையும் தரப்போகிறார்கள். உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும். மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ஆம் வீட்டிற்கு வருவது யோகம் தான். வாங்கிய கடனுக்கு அசலுக்கு அதிகமாக கடனை செலுத்தியவர்களுக்கு கடன் சுமை குறையும். கடன் பிரச்சினைகள் கழுத்தை பிடிக்க ஊரை விட்டு ஓடி வீடுவோமா என்று நினைத்தவர்கள் சொந்த ஊரிலே தலை நிமிர்ந்து வாழலாம். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும்.
மிதுனம்: 18 ஆண்டுகளுக்குப் பிறகு பத்தாம் வீட்டில் ராகுவும் நான்காம் வீட்டில் கேதுவும் பயணம் செய்யப்போகின்றன. 10 ஆம் இடம் தொழில் ஸ்தானம், கீர்த்தி, செல்வாக்கு அந்தஸ்து ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழிலாளி முதலாளி ஆகலாம். நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். வேலையை இழந்து வருமானம் இல்லாமல் தவித்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி வெற்றியை தரப்போகிறது. அஷ்டமத்து சனியால் கணவன் மனைவி உறவு கசந்து சங்கடங்களை சந்தித்த உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி யோகத்தைக் கொடுக்கப்போகிறது.
கடகம்: உங்கள் ராசிக்கு ராகு 9ஆம் வீட்டிற்கும் கேது மூன்றாம் வீட்டிற்கும் வருவது யோகமான அமைப்பாகும். குடும்பத்தில் சுபகாரியம் புதுமுயற்சி,திருமணம்,புத்திர பாக்கியம் போன்ற சுபமங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். குருவின் பார்வை சாதகமான இடத்தில் விழுகிறது. குடும்ப உறவு சிறப்படையும். குடும்பத்தில் பிரிவு மனக்கசப்புகளை சந்தித்தவர்களுக்கு ராகு கேது விடிவையும் விமோசனத்தையும் தரப்போகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள், தேடி வரும். வருமானம் திருப்தி தரும் வகையில் அமையும்.

சிம்மம்: உங்கள் ராசிக்கு 8ஆம் வீட்டிற்கு ராகு வருகிறார். கேது இரண்டாம் வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். ஜாதகத்தில் 8ஆம் இடம் என்பது கெட்ட ஸ்தானமாகும். இந்த ராகு பெயர்ச்சி யோகத்தையும் அதிர்ஷ்ட்டத்தையும் பெயர், புகழையும் தரப்போகிறது. குரு பகவானைப் போல செயல்படப்போகும் ராகு பகவான் விபரீத ராஜயோகத்தை தருவார். உங்களுக்கு எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். திருமணம் சுபகாரியம் நடைபெறும். கோர்ட் வம்பு வழக்கு சாதகமாகும். சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம். இது வரை வெளியூரில் இருந்தால் உள்ளுரில் செட்டில் ஆகலாம். குடும்ப ஸ்தானத்தில் கேது வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும். ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரப்போகிறது.
கன்னி: நவம்பர் மாதத்திற்குப் பிறகு உங்களுடைய ராசியில் கேதுவும் 7 ஆம் வீட்டிற்கு ராகுவும் பெயர்ச்சியாகப்போகின்றனர். களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். கணவன் மனைவி பிரச்சினை நீங்கி ஓன்று சேரலாம். கோர்ட்டு விவாகரத்து என்று அலைந்தவர்களுக்கு தீர்ப்பு சாதகமாக அமைந்து மறுமணம் நடக்கலாம். குரு பகவான் பார்வை போல ராகுவின் பார்வை நேராக உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. உங்கள் ராசியில் கேது வருவதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். கேதுவுக்கு குரு பார்வை கிடைப்பதால் கஷ்ட நஷ்டங்களிலிருந்து விடிவு விமோசனம் ஆகியவற்றை அடையலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும். வருமானம் திருப்தி தரும். பிள்ளைகள் படிப்புக்காக கடன் வாங்குவீர்கள். ராகு கேது பெயர்ச்சியால் மாற்றம் முன்னேற்றம் வரும்.












Click it and Unblock the Notifications