ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: தீபாவளிக்குப் பின் பெட்டி நிறைய பணம் யாருடைய வீட்டிற்கு தேடி வரும்?
சென்னை: ராகு கேது பெயர்ச்சி ஐப்பசி மாதத்தில் நிகழப்போகிறது. தீபாவளிக்கு முன்னதாகவே மேஷ ராசியில் இருக்கும் ராகு பகவான் மீன ராசிக்கும், துலாம் ராசியில் இருக்கும் கேது பகவான் கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். ராகுவும் கேதுவும் வரும் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பயணம் செய்வார்கள். இந்த கிரகப்பெயர்ச்சி யாருக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறது என்று பார்க்கலாம்.
அள்ளித்தரப்போகும் ராகு கேது: ராகு செல்வம் செல்வாக்கை அள்ளிக்கொடுப்பார். கேது திடீர் ஞானத்தை கொடுத்து மோட்சத்திற்கு வழிகாட்டுவார். ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ராகு கேது சாதகமாக இருப்பவர்களுக்குத்தான் லாட்டரியில் பணமும், திடீர் புதையலும் கிடைக்கும். இந்த ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு குரு பகவானைப் போல ராகுவும் புதன் பகவானைப் போல கேதுவும் செயல்படுவார்கள்.

மேஷம்: விரைய ராகு ஆறாம் வீட்டு கேட்டு அற்புத மாற்றங்கள் நிகழப்போகிறது. பண வருமானம் அதிகரிக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஓன்று சேருவர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் தேடி வரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் சந்தோஷமும் மன மகிழ்ச்சியும் அதிகரிக்கும். கணவன் மனைவி உடல் நிலையில் சற்று கவனம் செலுத்தவும். சிலருக்கு வெளி நாடு செல்லும் யோகம் கிட்டும். வெளி நாட்டு தொடர்புகளால் உங்கள் தொழிலை விரிவாக்கம் செய்து அதில் லாபத்தையும் அடைவீர்கள்.
ரிஷபம்: லாப ஸ்தானத்திற்கு வரப்போகும் ராகுபகவான் பண வரவை அதிகரிப்பார். மனதில் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். கணவன் மனைவிக்குள் பிரியம் அதிகரிக்கும். பூர்வ புண்ணிய கேதுவினால் பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஒரு சிலருக்கு வெளி நாடு போகும் வாய்ப்பு கிடைக்கும். புது தொழில் தொடங்க வழி கிடைக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளுடன் சுமூக போக்கு உண்டாகி சக ஊழியர்களிடம் இருந்து வந்த வேற்றுமை மாறும்.
மிதுனம்: பத்தாம் வீட்டிற்கு வரப்போகும் ராகு பதவியை தருவார். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். பண வரவை அதிகரிப்பார். ஒரு சிலருக்கு அரசியல் தொடர்புகள் ஏற்படும். இதன் பொருட்டு பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். தம்பதியருக்குள் இணக்கம் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை தரமே மாற போகிறது. தொழில் செய்பவர்கள் தங்கள் இலக்கை அடைய கடுமையாக உழைக்க வேண்டி வரும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். வேலையில் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.
கடகம்: பாக்ய ஸ்தானத்திற்கு வரப்போகும் ராகு பண தட்டுப்பாடுகளை நீக்குவார். பல வழிகளில் இருந்தும் பண மழை கொட்டும். கணவன் மனைவி உறவுக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழப்பமான மனநிலை மாறி தெளிவான சிந்தனை உதயமாகும். உறவினர்கள் மத்தியில் பெரும் மதிப்பு அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இழந்த செல்வங்களை திரும்ப பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் உங்களை தேடி வரும். ஒரு சிலருக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.

சிம்மம்: ராகு பகவான் அஷ்டம ஸ்தானமான 8வது வீட்டிற்கு செல்லப்போவதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பட்டங்கள் பதவிகள் உங்களுக்கு தேடி வரும். பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவ செலவு குறையும். தேவையற்ற வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். உங்கள் சாதூர்ய பேச்சால் யாராலும் முடிக்க முடியாத வேலையை எளிதில் முடித்து காட்டுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
கன்னி: ராகு பகவான் தீபாவளிக்குப் பிறகு உங்கள் ராசிக்கு களத்திர ஸ்தானமான 7 ஆம் வீட்டில் வந்து அமர போகிறார். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மன கசப்புகள் விலகி மகிழ்ச்சியான நிலை ஏற்படும். ஓருவருகொருவர் விட்டு கொடுத்து சென்றால் தேவையற்ற குழப்பங்களை விலக்கலாம். பணவிஷயத்தில் சிக்கன போக்கு தேவை. உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கேது பகவான் உங்கள் ஜென்ம ராசியிலேயே வந்து அமர போகிறார். இதனால் உங்கள் பேச்சில் ஒரு ஒரு கனிவு தென்படும். கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவதங்களை தவிர்க்கவும். விட்டு கொடுத்து போனால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
துலாம்: ஐப்பசி மாதம் முதல் உங்கள் ராசிக்கு 6ஆம் வீட்டில் வந்து அமரப்போகிறார். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவர். இனி குடும்பத்தில் அமைதி திரும்பி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பண வருமானம் அதிகரிக்கும் கொடுக்க வேண்டிய கடன்களை அடைத்து விடுவீர்கள். சொத்து பிரச்சனைகளில் ஒரு சுமூக தீர்வு ஏற்படும். கேது பகவான் இனி 12 ஆம் வீட்டீற்கு வரப்போவது திடீர் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இது நாள் வரை மேலதிகாரிகளுடன் இருந்து வந்த மோதல் போக்கு விலகி பதவி உயர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
விருச்சிகம்: ராகு பகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் அமர போகிறார் இதனால் கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி நெருக்கம் கூடும். வேலையில் இருந்து வந்த மந்த நிலை மாறி புது உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். கிடைக்கும் வேலையில் உங்களை நிலை நிறுத்திக்கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு இட மாறுதல்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. புது முயர்ச்சியில் சற்று நிதானம் தேவை. ஆடை, ஆபரணங்கள் சேரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். குடும்ப வருமானம் உயரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பெண்கள் விஷயத்தில் சற்று கவனம் தேவை.

தனுசு: உங்கள் ராசிக்கு 4 ஆம் வீடான சுக ஸ்தானத்தில் வந்து அமர போகிறார் ராகு பகவான். இனி பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம் விலகும். வியாபாரத்தில் கணிசமான தொகையை முதலீடு செய்து அளவான லாபத்தை பெறுவீர்கள். கேது பகவான் தொழில் ஸ்தானமான 10ஆவது வீட்டில் வந்து அமரப்போவதால் இனி எடுத்த காரியத்தை எளிதில் முடிக்க வைப்பார். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் தேதி வரும்.
மகரம்: ராகு பகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் வளர்ச்சி அதிகரிக்கும். எதிலும் வெற்றி உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வங்கியில் அடகு வைத்து நகைகளை திருப்புவீர்கள். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும் . தடைபட்ட சுபகாரியங்கள் எளிதில் நடைபெறும். கேது பகவான் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் வியாபாரத்தில் பல மடங்கு லாபம் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளி நாடுகளில் இருந்து உதவிகள் தேடி வரும் . உங்கள் பேச்சுக்கும் அனைவரும் கட்டுப்படுவார்கள்.
கும்பம்: வாக்கு ஸ்தானத்திற்கு ராகு வருவதால் வாக்குக் கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். கோபமான பேச்சுக்களை தவிருங்கள். நாவடக்கம் ரொம்ப முக்கியம். செலவுகள் அதிகம் வரும் சிக்கனமும் சேமிப்பும் தேவை. பங்குச்சந்தையில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்தால் உங்களுக்கு பலன் கிடைக்கும். சிலருக்கு உயர் பதவிகள் தேடி வரும். பணவரவு அதிகமாகும். எதிர்ப்புகள் விலகும். சொல்லிலும் செயலிலும் வேகம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும்.
மீனம்: தீபாவளிக்குப் பிறகு ராகு பகவான் ஜென்ம ராசிக்கு வருவதால் பண வரவு அதிகரிக்கும் . குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெறுவீர்கள். உங்கள் பேச்சில் ஒரு நிதானமும் பொறுப்பு தன்மையும் தென்படும். நினைத்த காரியம் நிறைவேறும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். களத்திர ஸ்தானத்தில் கேது பயணம் செய்வதால் கணவன் மனைவிக்குள் சின்னச் சின்ன சண்டைகள் வந்து போகும் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலருக்கு திருமண யோகம் கைகூடும். வரவுக்கு மீறி செலவு செய்வதை தவிர்க்கவும்.












Click it and Unblock the Notifications