ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: கோடி கோடியாக தேடி வரும் செல்வம்.. கொட்டிக்கொடுக்கப்போகும் ராகு கேது
சென்னை: இந்த ஆண்டு ஐப்பசி மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. மேஷ ராசியில் இருக்கும் ராகு பகவான் மீன ராசிக்கும், துலாம் ராசியில் இருக்கும் கேது பகவான் கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். ராகு கேது கிரகப்பெயர்ச்சியால் தனுசு, மகரம்,கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
அள்ளிக்கொடுக்கும் ராகு: நிழல் கிரங்களான ராகு கேது சாதகமாக இருந்தால் ஒருவருக்கு செல்வம் செல்வாக்கு தேடி வரும் ராகு கேது சாதகமாக இருப்பவர்களுக்குத்தான் லாட்டரியில் பணமும், திடீர் புதையலும் கிடைக்கும். ராகு செல்வம் செல்வாக்கை அள்ளிக்கொடுப்பார். கேது திடீர் ஞானத்தை கொடுத்து மோட்சத்திற்கு வழிகாட்டுவார். நவ கிரகங்களில் ராகுவும் கேது நிழல் கிரகங்கள். இந்த கிரகங்கள் எப்போதுமே நேருக்கு நேராக சந்தித்துக்கொள்ளும். சூரியன், செவ்வாய், புதன், குரு, சனி, சந்திரன், சுக்கிரன் ஆகிய ஏழு கிரகங்களும் முன்னோக்கி நகரும் போது ராகுவும் கேதுவும் பின்னோக்கி நகரும். இந்த ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு குரு பகவானைப் போல ராகுவும் புதன் பகவானைப் போல கேதுவும் செயல்படுவார்கள்.

தனுசு: உங்கள் ராசிக்கு 4 ஆம் வீடான சுக ஸ்தானத்தில் வந்து அமர போகிறார் ராகு பகவான். இனி பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம் விலகும். வியாபாரத்தில் கணிசமான தொகையை முதலீடு செய்து அளவான லாபத்தை பெறுவீர்கள். கேது பகவான் தொழில் ஸ்தானமான 10ஆவது வீட்டில் வந்து அமரப்போவதால் இனி எடுத்த காரியத்தை எளிதில் முடிக்க வைப்பார். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் தேதி வரும்.
மகரம்: ராகு பகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் பயணம் செய்வதால் எதிலும் வெற்றி உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வங்கியில் அடகு வைத்து நகைகளை திருப்புவீர்கள். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும் . தடைபட்ட சுபகாரியங்கள் எளிதில் நடைபெறும். கேது பகவான் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் வியாபாரத்தில் பல மடங்கு லாபம் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளி நாடுகளில் இருந்து உதவிகள் தேடி வரும் . உங்கள் பேச்சுக்கும் அனைவரும் கட்டுப்படுவார்கள்.

கும்பம்: வாக்கு ஸ்தானத்தில் ராகு வருவதால் நிதானமாக பேசுங்க. கோபத்தை தவிருங்கள். செலவுகள் அதிகம் வரும் சிக்கனமும் சேமிப்பும் தேவை. நாவடக்கம் ரொம்ப முக்கியம். பங்குச்சந்தையில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்தால் உங்களுக்கு பலன் கிடைக்கும். சிலருக்கு உயர் பதவிகள் தேடி வரும். பணவரவு அதிகமாகும். எதிர்ப்புகள் விலகும். சொல்லிலும் செயலிலும் வேகம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். பரிகாரம்: செவ்வாய்கிழமை முருகனை வணங்குங்கள். துர்க்கைக்கு அரளி மாலை அணிவித்து வழிபடுங்கள். பாதிப்புகள் நீங்கும்.
மீனம்: உங்கள் ராசிக்கு 2 ம் வீட்டில் பயணம் செய்யப்போகும் ராகு ஜென்ம ராசிக்கு வருவதால் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும் . குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் பேச்சில் ஒரு நிதானமும் பொறுப்பு தன்மையும் தென்படும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு சண்டைகள் வந்து போகும் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். வரவுக்கு மீறி செலவு செய்வதை தவிர்க்கவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலருக்கு திருமண யோகம் கைகூடும்.












Click it and Unblock the Notifications