ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: கொட்டிக்கொடுக்க போகும் ராகு.. 18 ஆண்டுகளுக்குப்பின் திருப்புமுனை
சென்னை: இந்த ஆண்டு ஐப்பசி மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. மேஷ ராசியில் இருக்கும் ராகு பகவான் மீன ராசிக்கும், துலாம் ராசியில் இருக்கும் கேது பகவான் கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். ராகு கேது கிரகப்பெயர்ச்சியால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
அள்ளிக்கொடுக்கும் ராகு: நிழல் கிரங்களான ராகு கேது சாதகமாக இருந்தால் ஒருவருக்கு செல்வம் செல்வாக்கு தேடி வரும் ராகு கேது சாதகமாக இருப்பவர்களுக்குத்தான் லாட்டரியில் பணமும், திடீர் புதையலும் கிடைக்கும். ராகு செல்வம் செல்வாக்கை அள்ளிக்கொடுப்பார். கேது திடீர் ஞானத்தை கொடுத்து மோட்சத்திற்கு வழிகாட்டுவார். நவ கிரகங்களில் ராகுவும் கேது நிழல் கிரகங்கள். இந்த கிரகங்கள் எப்போதுமே நேருக்கு நேராக சந்தித்துக்கொள்ளும். சூரியன், செவ்வாய், புதன், குரு, சனி, சந்திரன், சுக்கிரன் ஆகிய ஏழு கிரகங்களும் முன்னோக்கி நகரும் போது ராகுவும் கேதுவும் பின்னோக்கி நகரும். இந்த ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு குரு பகவானைப் போல ராகுவும் புதன் பகவானைப் போல கேதுவும் செயல்படுவார்கள்.

சிம்மம்: ராகு பகவான் பாக்ய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானமான 8வது வீட்டிற்கு செல்லப்போவதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பட்டங்கள் பதவிகள் உங்களுக்கு தேடி வரும். பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவ செலவு குறையும். தேவையற்ற வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். உங்கள் சாதூர்ய பேச்சால் யாராலும் முடிக்க முடியாத வேலையை எளிதில் முடித்து காட்டுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
கன்னி: ராகு பகவான் இனி ராசிக்கு 7 ம் வீட்டில் வந்து அமர போகிறார். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மன கசப்புகள் விலகி மகிழ்ச்சியான நிலை ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து சென்றால் தேவையற்ற குழப்பங்களை விலக்கலாம். பணவிஷயத்தில் சிக்கன போக்கு தேவை. உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கேது பகவான் உங்கள் ஜென்ம ராசியிலேயே வந்து அமர போகிறார். இதனால் உங்கள் பேச்சில் ஒரு ஒரு கனிவு தென்படும். கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவதங்களை தவிர்க்கவும். விட்டு கொடுத்து போனால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

துலாம்: ராகு பகவான் ஐப்பசி மாதம் முதல் உங்கள் ராசிக்கு 6ஆம் வீட்டில் வந்து அமரப்போகிறார். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவர். இனி குடும்பத்தில் அமைதி திரும்பி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பண வருமானம் அதிகரிக்கும் கொடுக்க வேண்டிய கடன்களை அடைத்து விடுவீர்கள். சொத்து பிரச்சனைகளில் ஒரு சுமூக தீர்வு ஏற்படும். கேது பகவான் இனி 12 ஆம் வீட்டீற்கு வரப்போவது திடீர் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இது நாள் வரை மேலதிகாரிகளுடன் இருந்து வந்த மோதல் போக்கு விலகி பதவி உயர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
விருச்சிகம்:ராகு பகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் அமர போகிறார் இதனால் கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி நெருக்கம் கூடும். வேலையில் இருந்து வந்த மந்த நிலை மாறி புது உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். கிடைக்கும் வேலையில் உங்களை நிலை நிறுத்திக்கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு இட மாறுதல்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. புது முயர்ச்சியில் சற்று நிதானம் தேவை. ஆடை, ஆபரணங்கள் சேரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். குடும்ப வருமானம் உயரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பெண்கள் விஷயத்தில் சற்று கவனம் தேவை.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications