ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: 18 ஆண்டுகளுக்குப் பின் விபரீத ராஜயோகம்.. அனுபவிக்கும் ராசிக்காரர்கள்
சென்னை: நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் பின்னோக்கி நகரக்கூடியவை. மேஷ ராசியில் பயணம் செய்யும் ராகு மீன ராசிக்கும் துலாம் ராசியில் பயணம் செய்யும் கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். ராகு கேதுவும் நவம்பர் மாதம் முதல் வரும் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பயணம் செய்வார்கள். இந்த கிரகப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகத்தினால் கோடி கோடியாக செல்வம் வரும் என்று பார்க்கலாம்.
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ராகு கேது சாதகமாக இருந்தால் ஒருவருக்கு செல்வம் செல்வாக்கு தேடி வரும் ராகு கேது சாதகமாக இருப்பவர்களுக்குத்தான் லாட்டரியில் பணமும், திடீர் புதையலும் கிடைக்கும். ராகு செல்வம் செல்வாக்கை அள்ளிக்கொடுப்பார். கேது திடீர் ஞானத்தை கொடுத்து மோட்சத்திற்கு வழிகாட்டுவார். இந்த ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு குரு பகவானைப் போல ராகுவும் புதன் பகவானைப் போல கேதுவும் செயல்படுவார்கள். மீன ராசியில் அமரும் ராகுவினால் விபரீத ராஜயோகமும் அதனால் கோடி கோடியாக பண வருமானமும் ஒருவருக்குத் தேடி வரப்போகிறது.

மேஷம்: பண வருமானம் அதிகரிக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் தேடி வரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் சந்தோஷமும் மன மகிழ்ச்சியும் அதிகரிக்கும். கணவன் மனைவி உடல் நிலையில் சற்று கவனம் செலுத்தவும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிட்டும். வெளிநாட்டு தொடர்புகளால் உங்கள் தொழிலை விரிவாக்கம் செய்து அதில் லாபத்தையும் அடைவீர்கள்.
ரிஷபம்: லாப ஸ்தானத்திற்கு வரப்போகும் ராகுபகவான் பண வரவை அதிகரிப்பார். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். கணவன் மனைவிக்குள் பிரியம் அதிகரிக்கும். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஒரு சிலருக்கு வெளிநாடு போகும் வாய்ப்பு கிடைக்கும். புது தொழில் தொடங்க வழி கிடைக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளுடன் சுமூக போக்கு உண்டாகி சக ஊழியர்களிடம் இருந்து வந்த வேற்றுமை மாறும்.
மிதுனம்: பத்தாம் வீட்டிற்கு வரப்போகும் ராகு பதவியை தருவார். வேலை தேடுபவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். பண வரவை அதிகரிப்பார். ஒரு சிலருக்கு அரசியல் தொடர்புகள் ஏற்படும். இதன் பொருட்டு பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். தம்பதியருக்குள் இணக்கம் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை தரமே மாற போகிறது. தொழில் செய்பவர்கள் தங்கள் இலக்கை அடைய கடுமையாக உழைக்க வேண்டி வரும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். வேலையில் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.
கடகம்: பாக்ய ஸ்தானத்திற்கு வரப்போகும் ராகு பண தட்டுப்பாடுகளை நீக்குவார். பல வழிகளில் இருந்தும் பணமழை கொட்டும். கணவன் மனைவி உறவுக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழப்பமான மனநிலை மாறி தெளிவான சிந்தனை உதயமாகும். உறவினர்கள் மத்தியில் பெரும் மதிப்பு அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இழந்த செல்வங்களை திரும்ப பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் உங்களை தேடி வரும். ஒரு சிலருக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.
சிம்மம்: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு 9ஆம் வீட்டில் பயணம் செய்யும் ராகு 8ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். 3ஆம் வீட்டில் பயணம் செய்யும் கேது அக்டோபர் முதல் 2ஆம் வீடான குடும்ப ஸ்தானத்திற்கு வருகிறார். ராகு பகவான் திடீர் யோகத்தையும் பெருமை புகழையும் தருவார். விபரீத ராஜயோகத்தால் எதிர்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். உங்களுடைய வீட்டில் திருமணம் சுபகாரியம் நடக்கும். கோர்ட் வம்பு வழக்கு சாதகமாகும்.சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம். சிலர் பிள்ளைகள் படிப்புக்காக ஊரை மாற்றலாம். சிலர் வீட்டுக்கு மேல் வீடு கட்டும் வாய்ப்பு வரும். குடும்ப ஸ்தானத்தில் கேது வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும். உங்களுடைய முயற்சி தன்னம்பிக்கை மூலம் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும். இந்த ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும்.
கன்னி: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு ராசிக்கு ஏழாம் வீட்டில் ராகுவும் ராசியில் கேதுவும் அமரப்போகின்றனர். ராசியில் கேது சஞ்சரிப்பதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும்.வருமானம் திருப்தி தரும்.தேவைகள் பூர்த்தியாகும்.குடும்பத்தில் பிள்ளைகள் படிப்புக்கு செலவு செய்வீர்கள். ராகு களத்திர ஸ்தானத்தில் அமர்வதால் கஷ்டங்கள் நீங்கி இனி தலை நிமிரலாம். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒன்று சேரலாம். வாழ்க்கையே போர்க்களம், ஏமாற்றம் சஞ்சலம் என்று வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் மாற்றம் முன்னேற்றம் வரும்.
துலாம்: உங்களுடைய ராசியில் கேது பயணம் செய்கிறார். ராகு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். அக்டோபர் மாதம் முதல் ராகு விலகி ஆறாம் வீட்டிற்கும் கேது விலகி 12ஆம் வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். இதுநாள் வரைக்கும் கெட்டானை தொட்டானும் கெட்டான் என்பதை போல யாருக்கோ போக வேண்டிய பிரச்சனைகள் உங்களை வாட்டி வதைத்தது. இனி பிரச்சினைகள் தீரப்போகிறது. எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன்கள் அடைப்படும் தீராத நோய் தீரும். தொழில் முயற்சிகள் கை கூடும்.படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். திருமணம் கை கூடி வரும் சந்தான யோகம் தேடி வரும். நீண்ட நாள் பட்ட கடன்களும் அடைபடும்.
விருச்சிகம்: ராகு பகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் அமர போகிறார் கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி அன்யோன்யம் பெருகும். செய்வதறியாது இருந்து வந்த மந்த நிலை மாறி புது உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். கிடைக்கும் வேலையில் உங்களை நிலை நிறுத்திக்கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு இட மாறுதல்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. புது முயற்சியில் சற்று நிதானம் தேவை. ஆடை, ஆபரணங்கள் வந்து சேரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். இது நாள் வரை உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் அமர்ந்து வீண் விரையங்களை, மன சோர்வையும் அளித்து வந்த கேது பகவான் இனி உங்கள் ராசிக்கு 11ஆம் வீட்டில் வந்து அமர போகிறார். இதனால் தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கைகூடும். வங்கியில் வாங்கிய கடன்களை பைசல் செய்வீர்கள். திடீர் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். புது புது உத்திகளை கையாண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள். குடும்ப வருமானம் உயரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பெண்கள் விஷயத்தில் சற்று கவனம் தேவை.
தனுசு: உங்களுடைய ராசிக்கு 5ஆம் இடத்தில் ராகு உங்கள் ராசிநாதன் குரு உடன் பயணம் செய்கிறார். லாப ஸ்தானமான 11ஆம் இடத்தில் கேது இடம் மாறுகின்றனர். ராகு பகவான் சுக ஸ்தானமான நான்காம் இடத்திற்கும்,10ஆம் இடத்திற்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றனர். உங்களுடைய பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். 4ம் பாவம் தாயார்,சுகம்,வாகனம் கல்வி,நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இந்த 4ம் பாவத்திற்க்கு ராகு வருகிறார். தாயார் வழியில் சில தேவையற்ற செலவுகள் உண்டாகலாம். பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். பழைய கடன்கள் அடைப்படும். புதிய கடன் வாங்கி சுபகாரியம்,திருமணம்,பிள்ளைகள் படிப்புக்கு செலவு செய்ய நேரிடும். வரவுகள் அதிகரிக்கும் சேமிப்பும் உயரும். தொழில் நிலை முன்னேற்றத்தை தரும். இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிவடையும்.
மகரம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே.. 4ஆம் வீட்டில் உள்ள ராகு 3ஆம் இடத்திலும் 10 இடத்தில் இருந்த கேது 9ம் இடத்திற்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றனர். 3ஆம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார். ராகு இப்பொழுது யோகத்தை வாரி வழங்க போகிறார். இனி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். வீட்டுத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உங்களை ஏளனம் செய்தவர்கள் எல்லாம் உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து உற்சாகமடைவார்கள். திருமண நிகழ்ச்சிகள் சுபமாக முடியும். உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டீர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். உற்றார் உறவினர் பகை மறந்து வீடு தேடி வருவார்கள்.
கும்பம்: வாக்கு ஸ்தானத்தில் ராகு வருவதால் நிதானமாக பேசுங்கள் கோபத்தை தவிருங்கள். பண விசயத்தில் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். செலவுகள் அதிகம் வரும் சிக்கனமும் சேமிப்பும் தேவை. நாவடக்கம் ரொம்ப முக்கியம். பங்குச்சந்தையில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்தால் உங்களுக்கு பலன் கிடைக்கும். சிலருக்கு உயர் பதவிகள் தேடி வரும். பணவரவு அதிகமாகும். எதிர்ப்புகள் விலகும். சொல்லிலும் செயலிலும் வேகம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். பரிகாரம்: செவ்வாய்க்கிழமை முருகனை வணங்குங்கள். துர்க்கைக்கு அரளி மாலை அணிவித்து வழிபடுங்கள். பாதிப்புகள் நீங்கும்.
மீனம்: உங்கள் ராசிக்கு 2 ம் வீட்டில் பயணம் செய்யும் ராகு ஐப்பசி மாதத்திற்குப் பிறகு ஜென்ம ராசிக்கு வருவதால் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும் . குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் பேச்சில் ஒரு நிதானமும் பொறுப்பு தன்மையும் தென்படும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு சண்டைகள் வந்து போகும் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். வரவுக்கு மீறி செலவு செய்வதை தவிர்க்கவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலருக்கு திருமண யோகம் கைகூடும். களத்திர ஸ்தானத்திற்கு வரப்போகும் கேது பகவான் குடும்பத்தில் சில பிரச்சினைகளை உண்டாக்குவார் விட்டுக்கொடுத்து செல்வது குடும்பத்திற்கு நல்லது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications