ராகு கேது பெயர்ச்சி 2023: 18 மாதங்கள் அள்ளிக்கொடுக்கும் லாப ராகு.. கோடிகளில் புரள்வீர்கள்
சென்னை: நவ கிரகங்களில் ராகு கேது இடப்பெயர்ச்சி பின்நோக்கி நிகழும். வரும் அக்டோபர் 30ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. ஐப்பசி 13ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. ராகு பகவான் மேஷத்தில் இருந்து மீனம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். ராகு கேது பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது விரிவாக பார்க்கலாம்.
ரிஷபம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்கு லாப ராகுவாகவும், பூர்வ புண்ணிய கேதுவாகவும் பயணம் செய்யப்போகிறது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு ராகுவும் கேதுவும் மூலை ராசிகளான மீனம், கன்னி ராசிகளுக்கு வரப்போகின்றன. குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி போல ராகு கேது பெயர்ச்சியையும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். ராகு கேதுவிற்கு சொந்த வீடு இல்லை எந்த ராசியில் அமர்கின்றனரோ அந்த ராசியின் அதிபதியைப் போல செயல்படுவார்கள். அக்டோபர் வரை குரு உடன் சேர்ந்து இருக்கும் ராகு பகவான் குரு பகவான் வீடான மீன ராசிக்கு செல்லப்போகிறார். ராகு பகவான் குருவைப் போலவும், கேது புதன் பகவானைப் போலவும் செயல்படப்போகின்றனர். மிகப்பெரிய மாற்றங்களை ராகு கேது உங்களுக்கு தரப்போகிறது.

ராஜயோகம்: ராகு கேது பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு அற்புதமான யோகத்தை தரப்போகிறது. லாபத்தையும், பூர்வ புண்ணிய யோகத்தையும் தரப்போகிறது. தொழில் சனி, விரைய குரு என சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். ஐப்பசி மாதத்திற்குப் பிறகு ராஜயோகம் தரக்கூடிய ராகு கேது பெயர்ச்சியாக அமையப்போகிறது. அள்ளி அள்ளி கொடுக்கப்போகிறார் ராகு பகவான். திருமண யோகம் கைகூடி வரப்போகிறது. பொறுப்புணர்ச்சியும் கடமை உணர்ச்சியும் அதிகரிக்கப்போகிறது. நேசமும் பாசமும் அதிகரிக்கும்.
நல்ல செய்தி தேடி வரும்: உறவினர்களிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கடமை தவறாதவர்கள். அலுவலகத்தில் பொறுப்பும் வேலைப்பளுவும் அதிகரிக்கும். புரமோசன் கிடைக்கும். சம்பள உயர்வுக்காக எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும் விரைய செலவுகள் நீங்கப்போகிறது. பண வருமானம் அதிகரிப்பதால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வெற்றிகள் வீடு தேடி வரப்போகிறது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் அதிகரிக்கும். பயம் பதற்றம் நீங்கும்.

திருமண யோகம்: மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் சுப காரியம் கைகூடி வரும். ராகு திசை ராகு புத்தி நடைபெற்றால் லாப ராகு கோடீஸ்வர யோகத்தை கொட்டி கொடுக்கப்போகிறார். மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி ஏற்படப்போகிறது. 18 மாதங்கள் உங்களின் வாழ்க்கை தரம் உயரப்போகிறது. அதி அற்புதமான யோகம் கிடைக்கப்போகிறது. தன காரகன் குரு பகவானைப் போல லாப ராகு கொடுக்கப்போகிறது. பிள்ளைகளின் படிப்பிற்காக செலவு செய்வீர்கள். நாக தோஷத்தினால் ஏற்பட்ட தடைகள் நீங்கப்போகிறது. மிகப்பெரிய வெற்றிகள் தேடி வரப்போகிறது.
யோகம் தரும் கேது: வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். புரமோசனுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் வரும். காதலிப்பவர்களுக்கு வெற்றிகள் தேடி வரப்போகிறது. மனதளவிலும் உடல் அளவிலும் உற்சாகமாக இருப்பீர்கள். மனக்கவலைகள் மறையப்போகிறது. பூர்வ புண்ணிய கேது முன்னோர்களின் ஆசியை கொண்டு வரப்போகிறது. பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் நீங்கப்போகிறது. இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு யோகத்தை தரப்போகிறது. மாலை நேரத்தில் துர்க்கையம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications