ராகு கேது பெயர்ச்சி 2023: தீபாவளி முதல் 4 ராசிக்காரர்களுக்கு கோடி கோடியாக செல்வம் குவியுமாம்
சென்னை: நவ கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகு அள்ளிக்கொடுப்பார். கேது ஞானத்தை கொடுப்பார். ராகுவும் கேதுவும் தந்தைக்காரகன் சூரியனுக்கும் தாய் காரகன் சந்திரனுக்கும் ஆகாத கிரகங்களாக இருக்கின்றன. ராகு கேது பெயர்ச்சி இந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் நிகழப்போகிறது. 12 ராசிகளில் எந்த ராசிக்காரர்களுக்கு கோடி கோடியாக செல்வம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
ராகு கேது: ஒருவருக்கு நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் ஏற்பட காரணமாக ராகுவும் கேதுவும் இருக்கின்றன. தசாபுத்தி சரியில்லாமல் இருந்து ராகு கேதுவும் ஒருவரின் ஜாதகத்தில் சரியில்லாமல் இருந்தால் அவர்களை மனக்குழப்பத்திற்கு ஆளாக்கி அவர் தற்கொலை முடிவு எடுக்கும் அளவிற்கு தள்ளப்படுவார்கள். ராகு கேது சாதகமாக இருந்தால் ஒருவருக்கு செல்வம் செல்வாக்கு எப்படி தேடி வருமே அந்த அளவிற்கு ராகு கேது கிரகங்கள் சரியாக அமையாவிட்டால் செல்வம், செல்வாக்கு இழந்து அவமரியாதை ஏற்படும். ராகு கேது சாதகமாக இருப்பவர்களுக்குத்தான் லாட்டரியில் பணமும், திடீர் புதையலும் கிடைக்கும். ஒரு பிச்சைக்காரர்கூட திடீர் என கோடீஸ்வரராக மாறுவதும் கூட ராகுவினால்தான். கேது திடீர் ஞானத்தை கொடுத்து மோட்சத்திற்கு வழிகாட்டுவார்.

மேஷம் விரைய ராகு: ராகு விரைய ஸ்தானத்திற்கும் கேது ஆறாம் வீடான நோய் எதிரி சத்ரு ஸ்தானத்திற்கும் மாறுகின்றனர். இதுநாள்வரை உங்க ராசியில் அமர்ந்து ஆட்டிப்படைத்த ராகு இனி விரைய ஸ்தானத்திற்கு மாறுவது சிறப்பு. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பதன் அடிப்படையில் இப்பொழுது கெட்ட இடத்திற்கு ராகு கேது வருவது நல்லது தான். சுபகாரியங்கள் திருமணம் சடங்கு கிரக பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம்,தொழில் அமையும் வாய்ப்பை அமைத்துக்கொடுப்பார். சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும். கேது பெயர்ச்சியால் சிலருக்கு புது வேலை வாய்ப்பு மற்றும் தொழிலைஅமையும். இதுநாள் வரை தொந்தரவு செய்த நோய்பிரச்சினை நீங்கும். போட்டி பொறாமை ஒழியும்.
ரிஷபம் லாப ராகு: உங்க ராசிக்கு சாதகமான இடத்திற்கு ராகு கேது வரப்போகின்றனர். விரைய ஸ்தானத்தில் இருந்த ராகு லாப ஸ்தானத்திற்கு மாறுவதால் எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவையும் கொடுப்பார். ராக போட்டி பொறாமைகளை ஒழிப்பார். எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஒயமாட்டிர்கள். அடுத்தவர்களின் சூழ்ச்சியால் உங்களுக்கு வந்த பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும். மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ஆம் வீட்டில் வருவது யோகம். பலவித சோதனைகளை தாண்டி மாற்றங்களை கொடுக்கும். வாங்கிய கடனுக்கு அசலுக்கு அதிகமாக கடனை செலுத்தியவர்களுக்கு கடன் சுமை குறையும். காரிய வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகள் கை கூடும். பலவித ஏமாற்றங்களால் ஊரை விட்டு ஓடி விடுவோமா என்று நினைத்தவர்கள் சொந்த ஊரிலே தலை நிமிர்ந்து வாழலாம். சுப காரியங்கள் சந்தோஷமாக நடக்கும். இது வரை உங்களை தரக்குறைவாக நடத்தியவர்கள் எல்லாம் இனி உங்களை கண்டு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள்.
மிதுனம் தொழில் ராகு: லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் ராகு தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். நீங்கள் எடுக்கும் ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். தொழிலாளியாக இருந்த நீங்கள் முதலாளி ஆகும் யோகம் வரும். நினைத்த மாதிரி நல்ல வேலை வாய்ப்பு அமையலாம் சம்பள உயர்வும் வசதி வாய்ப்புகளும் தேடி வரும். சொந்த வீடு வாங்கும் யோகம் வரும், சுப காரியங்கள் நல்லமுறையில் கைகூடி வரும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு இனி சிறிது சிறிதாக கடன் சுமை குறையும். இந்த ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும்.
கடகம் பாக்ய ராகு: கேது மாறி வரும் இடம் முன்றாம் பாவம் சகோதரம்,வீரியம்,வீரம்,எழுத்தறிவு,விளையாட்டு ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். ராகுவிற்கு குரு பார்வை கிடைப்பதால் குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடி வரும், புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். நிர்வாக பொறுப்புகள் தேடி வரும். நினைத்த காரியம் கைகூடி வரும். கடந்த காலங்களில் பல பிரச்சினைகளை சந்தித்த உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் விமோசனம் கிடைக்கும். வருமானம் திருப்தி தரும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலைகளில் இடையூறு நீங்கும்.மறைமுக எதிர்ப்புகள் விலகும்.
-
குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்கு பேச்சில் தான் கண்டமே.. இந்த விஷயங்களை செய்திடவே செய்திடாதீங்க -
Guru Peyarchi: கும்ப ராசிக்கு காத்திருக்கும் ஆபத்து.. இந்த விஷயங்களில் மிகுந்த கவனம் அவசியம் -
Guru Peyarchi: மகர ராசிக்கு காத்திருக்கும் ராஜவாழ்க்கை.. இந்த விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனம் -
Guru Peyarchi: தனுசு ராசியினரே தயாராகுங்கள்! குரு தரப்போகும் அபார யோகங்கள் -
விருச்சிகத்துக்கு பொற்காலம் ஆரம்பம்.. குருவின் அருளால் வரப்போகும் ராஜயோகம் -
Guru Peyarchi: கிங்காக மாறப்போகும் துலாம் ராசி.. 10 இல் வரும் குரு அள்ளித் தரும் அதிர்ஷ்ட யோகங்கள் -
அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டரு.. லாபத்தில் குரு.. கன்னி ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட் -
குரு 12-இல்.. சிம்ம ராசிக்கு வெளிநாட்டு யோகம், புதிய வாய்ப்புகள்.. வாழ்க்கையில் பெரிய திருப்பம்! -
Guru Peyarchi: மேஷ ராசிக்கு அதிர்ஷ்டத்தை தரும் குருப்பெயர்ச்சி.. வாழ்க்கையை மாற்றும் 3 விஷயங்கள் -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. வேலையில் முன்னேற்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications