ராகு கேது பெயர்ச்சி 2023: திடீர் நோய்கள்.. 18 மாதங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் யாரெல்லாம் கவனம்
சென்னை: ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் மாதம் நிகழப்போகிறது. 18 மாதங்கள் ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் பயணம் செய்வார்கள். ராகு கேது பின்னோக்கி நகரும் கிரகங்கள். ராகு மேஷ ராசியில் இருந்து மீனம் ராசிக்கும் கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் நிகழப்போகிறது.
அக்டோபர் மாதம் நிகழப்போகும் ராகு கேதுவினால் சில ராசிக்காலர்கள் உடல்நலத்தில் அதிக அக்கறை காட்டுவது அவசியமாகும்.
ராகு கேது பெயர்ச்சி மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. ராகு பகவான் குரு பகவானைப் போலவும் கேது பகவான் புதன் பகவானைப்போலவும் செயல்படப்போகிறது. ராகுவுக்கும் கேதுவிற்கும் சொந்த வீடு இல்லை என்பதால் எந்த வீட்டில் அமர்கின்றனவோ அந்த ராசி அதிபதியைப் போல செயல்படுவார்கள். எனவே நிகழப்போகும் ராகு கேது பெயர்ச்சி பல ராசிக்காரர்களுக்கு நன்மைகளைச் செய்யப்போகிறது.
குருவின் வீட்டில் ராகு பயணம் செய்வது சிறப்பு.

கடகம்: சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு ராகு பாக்ய ஸ்தானத்திற்கு செல்கிறார். குருவின் வீட்டில் சுக்கிரன் உச்சமடையும் வீட்டில் ராகு பயணம் செய்வதால் உதவிகள் தேடி வரும். பண வருமானம் அதிகரிக்கும். சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்தாலும் ராகு பகவான் யோகத்தையும் வெற்றியையும் தருவார். கடன் பிரச்சினைகள் நீங்கும். நட்பும் உறவும் அதிகரிக்கும். கோடி கோடியாக செல்வத்தை கொட்டிக்கொடுப்பார் ராகு பகவான். எதிர்பார்க்காத வெற்றிகளை ராகு பகவான் தேடி வந்து கொடுப்பார். கேது பகவான் 3ஆம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்வார். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பெண்களுக்கு இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். வலியும் வேதனையும் வாட்டி எடுத்தாலும் கெடுதல் நடைபெறுவதில் இருந்து ராகுவும் கேதுவும் காப்பாற்றுவார்கள்.
விருச்சிகம்: ராகு கேது பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிரடி மாற்றத்தை தேடித்தரப்போகிறது. காரணம் 12ஆம் வீட்டில் பயணம் செய்த கேது லாப வீட்டிற்கு செல்கிறார். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புதன் வீட்டில் கேது பயணம் செய்வதால் செய் தொழிலில் வெற்றி கிடைக்கும். 5ஆம் வீட்டில் ராகு பயணம் செய்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகி குழந்தைக்காக தவமிருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். உயர்கல்வி யோகம் தேடி வரும். பிரம்மாண்டமான வளர்ச்சியைத் தரப்போகிறார் ராகு பகவான். எதிர்பார்த்த வெற்றிகள் கைகூடி வரும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரப்போகிறது. பட்டங்களும் பதவிகளும் தேடி வரும். கௌரவப்பதவிகள் தேடி வரும். கோவில்களில் அறங்காவலர் பதவிகள் தேடி வரப்போகிறது. சிக்கல்கள் நீங்கும். உங்களுக்கு உடலில் சில பாதிப்புகளை ஏற்படுத்தும். கருடபகவானை வழிபட வெற்றிகள் தேடிவரும்.

கும்பம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி நடைபெறும் இந்த கால கட்டத்தில் ராகு பகவான் குடும்ப ராகுவாக இரண்டாம் வீட்டிற்கு வருகிறார். அதே போல கேது பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கு வருகிறார். தொழில் முதலீடுகளில் அகலக்கால் வைக்கக்கூடாது. வேலை செய்பவர்களுக்கு வருமானம் வரும் என்றாலும் புதிய தொழில் தொடங்க சரியான காலமில்லை. ராகு பகவான் பணத்தில் சிக்கலை ஏற்படுத்துவார். கடன் வாங்கவோ, கடன் கொடுக்கவோ வேண்டாம். வாக்கு கொடுக்காதீர்கள் வசமாக மாட்டிக்கொள்வீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே பேசும் போது கவனம் தேவை. புதிய நண்பர்களிடம் பேசும் போது நிதானம் தேவை. யாரை நம்பியும் பணத்தை கொடுத்து ஏமாந்து விடாதீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனமும் அக்கறையும் தேவை. கேது பகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் கவனம் தேவை. வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. இரவு நேரங்களில் காரமான எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்ப விசயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. சண்டை சச்சரவுகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மன குழப்பங்களும் வரலாம். ஆலய தரிசனம் மன அமைதியைக் கொடுக்கும். உங்களுடைய ஒவ்வொரு அடியிலும் கவனம் தேவை.
மீனம்: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் ஜென்ம ராசியில் அமரப்போகிறார். ஏழரை சனியில் விரைய சனி நடைபெறும் இந்த கால கட்டத்தில் ராகு பகவான் உங்கள் வீட்டில் அமர்ந்து குரு பகவானைப் போல செயல்படப்போகிறார். ராகு நிழல் கிரகம், பாவ கிரகம் என்றாலும் சுப கிரகமான குரு பகவானின் வீட்டில் ராகு பயணம் செய்வது சிறப்பு. குடும்ப ஸ்தானத்தில் இருந்த ராகு சொந்த வீட்டிற்கு வரப்போகிறார். மன குழப்பம் அதிகரிக்கும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்வது நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு செய்யாதீர்கள். உறவினர்களிடையே சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வரலாம் கவனம் தேவை. திருமண சுப காரிய விசயங்களில் ஈடுபடும் போது கவனம் தேவை. களத்திர ஸ்தானத்தில் அமரப்போகும் கேது பகவான் நிறைய தடைகளை ஏற்படுத்துவார். அதே நேரத்தில் உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் நிதானமும் அவசியம் தேவைப்படும். தொழில் வியாபாரத்தில் முதலீடு செய்யும் போது ஒருமுறைக்கு இருமுறை கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அதீத அக்கறை தேவை. காற்று தொடர்பான நோய்கள் வரலாம். குளிர் காற்றில் நடமாடும் போது கவனம் தேவை. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு 18 மாதங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவைப்படும்.












Click it and Unblock the Notifications