ராகு கேது பெயர்ச்சி 2023: சட்டென்று மாறும் வாழ்க்கை.. ராகு கேதுவால் உச்சத்திற்கு செல்வது யார்?
சென்னை: வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி நிகழ்ந்திருந்தாலும் திருக்கணித பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் 30ஆம் தேதி நிகழ உள்ளது. மேஷ ராசியில் இருந்து ராகு மீன ராசிக்கும் துலாம் ராசியில் இருந்து கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனையும் அதிசயக்கத்தக்க மாற்றமும் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திருமண சடங்கு கிரக பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.சிலரது பிள்ளைகளுக்கு கலப்பு திருமணம் காதல் திருமணம் அவர்கள் விருப்பபடி செய்து வைக்கும் சூழ்நிலை வரும். அறிவாளியை முட்டாளாக்கி உட்கார வைத்த ராகு 12 ஆம் இடத்திற்கு மாறுவதால் வெளிநாட்டு பயணம்,தொழில் அமையும் வாய்ப்பை கொடுப்பார். வர்த்தக தொடர்பு ஏற்படும். சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும். புது வேலை வாய்ப்பு அமையும், புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இந்த ராகு கேது பெயர்ச்சி திடீர் திருப்பு முனையை ஏற்படுத்தப்போகிறது. மலைபோல வரும் துன்பம் எல்லாம் பனிபோல விலகி குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் உண்டாகும்.

ரிஷபம்: லாப ஸ்தானமான11ல் வரும் ராகு எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவு போட்டி பொறாமைகளை ஒழிப்பார். உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் தானாகவே மறைந்து விடும். பாகப் பிரிவினை,செக் மோசடி வழக்குகள் இருந்தால் அது உங்களுக்கு சாதகமான தீர்ப்பை கொடுக்கும்.
புதிய முயற்சிகள் கை கூடும். புதிய மனிதர்களின் தொடர்பு அவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலையில் திருப்திகரமான போக்கும் மாற்றமும் உருவாகும். இது வரை உங்களை தரக்குறைவாக நடத்தியவர்கள் எல்லாம் இனி உங்களை கண்டு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள்.
மிதுனம் : பத்தாம் வீட்டில் ராகுவும் நான்காம் வீட்டில் கேதுவும் பயணம் செய்யப்போவதால் யோகங்கள் தேடி வரப்போகின்றன. கேந்திரத்தில் பாவ கிரகங்கள் வரும் பொழுது வலிமையாக பலனை செய்யும். நீங்கள் எடுக்கும் ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். தொழிலாளி முதலாளி ஆகலாம். நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம் நல்ல சம்பளம் வசதி வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கும்.
துடுப்பில்லாத படகு போல தத்தளித்த உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சியும் நிகழ்ந்துள்ள சனிப்பெயர்ச்சியும் ஆறுதலையும் முன்னேற்றத்தையும் தரும். அற்புதமான யோகங்கள் தேடி வரும்.
கடகம்: ராகு கேது பெயர்ச்சியால் குடும்பத்தில் சுபகாரியங்கள் வரிசையாக நடைபெறும். நிர்வாக பொருப்புகள் தேடி வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள்,வெளிநாட்டு பயணங்கள் அனுகூலம் ஆதாயத்தை தரும். வருமானம் அதிகரிக்கும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலைகளில் இடையூறுகள் நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். நீங்கள் நினைத்த காரியம் கை கூடும். அஷ்டமத்து சனியால் உடல்நலக்கோளாறு கணவன் மனைவி பிரச்சினை போலீஸ் வம்பு வழக்கு சந்தித்தவர்களுக்கு ராகு கேது விடிவையும் விமோசனத்தை தந்து காசு,பணம் சம்பாத்தியம் சேமிப்பை கொடுப்பார் என்பது உறுதி.
சிம்மம் : கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது போல ராகு பகவான் பெருமையையும் புகழையும் தருவார். ராகு சூது கிரகம். எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். தொழிலில் நிலையான தன்மை கிடைக்கும்.வருமானம் சேமிப்பு உயரும். சிலர் வீட்டுக்கு மேல் வீடு கட்டும் வாய்ப்பு வரும். உங்களுடைய சொல்லும் செயலும் வெற்றி பெறும். உங்களுடைய முயற்சி வெற்றியை தரும். ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். உழைப்பை மட்டுமே நம்பும் உங்களுக்கு நல்லதே நடக்கும்.
கன்னி: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி அற்புத மாற்றங்களைத் தரப்போகிறது. புதிய தொழில் தொடங்கலாம். உங்கள் ராசியில் கேது கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. கஷ்டங்களில் இருந்து விடிவு விமோசனம் கிடைக்கும். நல்ல காலம் பிறக்கப்போகிறது. நல்ல வேலை கிடைக்கும். புரமோசன் கிடைக்கப்போகிறது. இதுநாள் வரை போரட்டம் ஏமாற்றம் சஞ்சலம் என்று வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் மாற்றமும் முன்னேற்றம் தேடி வரப்போகிறது.












Click it and Unblock the Notifications