ராகு கேது பெயர்ச்சி 2023: இந்த 6 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புத மாற்றம்.. திடீர் ஜாக்பாட்!
சென்னை: வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி நிகழ்ந்திருந்தாலும் திருக்கணித பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் 30ஆம் தேதி நிகழ உள்ளது. மேஷ ராசியில் இருந்து ராகு மீன ராசிக்கும் துலாம் ராசியில் இருந்து கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் ஏற்படப்போகிறது.
துலாம்: உங்கள் ராசிக்கு எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன் அடைப்படும் தீராத நோய் தீரும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். மோட்ச ஸ்தானத்தில் மோட்சகாரகன் வருவதால் புது முயற்சிகள் கை கூடும்.வரவு எட்டணா செலவு பத்தணா நிலை மாறி சேமிப்புகள் உயரும். சுப தேவைகளுக்கு கடன் பட நேரிடும். இந்த ராகு கேது பெயர்ச்சி யோகம் செல்வாக்கு சொத்து சுகத்தை கொடுக்கும். நினைத்த காரியம் நிறைவேறப்போகிறது. ராகு கேது பெயர்ச்சி பண வருமானத்தோடு அறிவையும் ஞானத்தையும் தரப்போகிறது.

விருச்சிகம்: ராகு கேது பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிம்மதியை தரும். தொட்டது துலங்கப்போகிறது. தேவையற்ற செலவுகள் குறையும் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். இது வரை தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் நிலவும். திருமணம் ஆகி விவாகரத்தானவர்க்களுக்கு மறுமணம் நடைபெறும். ராகு கேது பெயர்ச்சி ஆறுதலையும் முன்னேற்றத்தையும் தொழில் நிலை யோகத்தையும் வலிமையான சம்பாதித்யத்தையும் கொடுக்கும். அசையா சொத்துகள் வீடு மனை வாங்கும் யோகத்தை கொடுக்கும். ராகு கேது பெயர்ச்சியால் திடீர் திருப்புமுனைகள் ஏற்படப்போகிறது. யோகமும் திடீர் அதிர்ஷ்டமும் தேடி வரப்போகிறது.
தனுசு: பத்தில் ஒரு பாவி இருந்தால் பதவி யோகம் தேடி வரும் என்று சொல்வார்கள். இது வரை தடைப்பட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவுக்கு வரும். ராகு பகவான் வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் தொழில் மாற்றம் வரலாம். பழைய கடன்கள் அடைப்படும். தொட்டது துலங்கும் நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். கேது யோககாரனாக செயல்பட்டு யோக பலனை வாரி வழங்குவார். தொழில் நிலை முன்னேற்றத்தை தரும்.யோகம் வசதி வாய்ப்புகள் கூடும். தனுசு ராசிக்காரர்களுக்கு இன்னும் 18 மாதங்களுக்கு நல்லதே நடக்கும். நம்பிக்கையோடு இருங்கள்.
மகரம்: உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டமும் யோகமும் தேடி வரப்போகிறது. தலைநிமிர்ந்து வாழ வழி செய்யப்போகிறார் ராகு பகவான். உங்களின் நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். மோட்சத்தை கொடுக்க கூடிய கேது பகவான் 9ஆம் வீட்டிற்கு வருவதால் உங்களுக்கு பொற்காலம் ஆரம்பமாகப்போகிறது. கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டீர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். இனி எந்த பிரச்சினைகள் வந்தாலும் ராகு கேது உங்களை நல்வழி படுத்தப்போகிறார்.

கும்பம்: உங்களுக்கு தேவைகேற்ப தனவரவு, நண்பர்கள் உதவி கிடைக்கும். அரசு மற்றும் வெளிநாட்டு வேலைகளுக்கு காத்து இருந்தவர்களுக்கு வாய்ப்பு கை கூடிவரும். வீடு பூமி வாகனம் சம்பந்தபட்ட வகையில் சுப விரைய செலவுகள் ஏற்படும். யாரோ பட்ட கடனுக்கு நீங்கள் பொறுப்பேற்று கடனை அடைக்கும் நிலையும் வரலாம். பூர்வீக சொத்து பிரச்சினைகள் வரலாம் எதிலும் நிதானமாக பேசியும் அமைதியாகவும் செயல்படுவது நல்லது. கேது பகவான் போட்டி பொறாமை எதிரி எல்லாவற்றையும் அழிப்பார். கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கப்போகிறது. பொற்காலம் தொடங்கப்போகிறது.
மீனம்: ஜென்ம ராசியில் வரும் ராகுவிற்கு கேதுவின் பார்வையும் ராசிக்கு கிடைக்கிறது. நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். சகோதர சகோதரிகள் வகையில் அனுகூலம் ஆதாயத்தை தரும். சிலருக்கு மனைவி பெயரில் தொழில் தொடங்கும் வாய்ப்பு வரும். தொழிலில் முன்னேற்றம் வரும். சிலருக்கு தொழில் மாற்றம்,இடமாற்றம் வரலாம். நண்பர்கள் உதவியால் பொருளாதாரம் நிலை உயரும் இது வரை தடைப்பட்ட திருமணம் இனி தடை நீங்கி நடக்கும். உத்தியோக உயர்வு கல்வி மேன்மையை பெற்று நல்ல வேலைக்கு போகலாம். உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு வரும். ராகு கொடுத்தால் கேது கெடுப்பார். எல்லாவற்றிலும் கவனமாக செயல்பட வேண்டும். ராகு கொடுப்பதை அனுபவிக்கத் தயாராகுங்கள். குல தெய்வ வழிபாடு குடும்பத்தில் மன நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கப்போகிறது.












Click it and Unblock the Notifications