Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: அள்ளித்தரப்போகும் ராகு கேது..வீடு தேடி வரும் குபேர யோகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவ கிரகங்களில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்றாலும் மனிதர்களின் நல்லது கெட்டதுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாம்பு கிரகங்களான ராகு பணத்தையும் அதிர்ஷ்டத்தையும் அள்ளிக்கொடுப்பார். கேது ஞானத்தை கொடுப்பார். ராகு கேது சாதகமாக இருப்பவர்களுக்குத்தான் லாட்டரியில் பணமும், திடீர் புதையலும் கிடைக்கும். ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் மாத இறுதியில் நிகழப்போகிறது. ராகு கேது பெயர்ச்சியால் துலாம்,விருச்சிகம்,தனுசு, மகரம்,கும்பம், மீனம் வரையிலான ஆறு ராசிகளில் பிறந்தவர்களில் எந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Rahu ketu peyarchi palan 2023: Rahu Ketu Who will get Gubera yogam

துலாம்: உங்க ராசியில் கேது பயணம் செய்கிறார் 7 ஆம் பாவத்தில் ராகு பயணம் செய்து வருகிறார். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு விரைய ஸ்தானமான 12 ஆம் பாவத்தில் கேதுவும் 6ஆம் பாவத்தில் ராகுவும் பயணம் செய்யப்போகின்றனர். எதிரி போட்டி பொறாமை கடன் வைத்திய செலவு ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன்கள் அடைப்படும் தீராத நோய் தீரும். தொழில் முயற்சிகள் கை கூடும்.படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். திருமணம் கை கூடி வரும் சந்தான யோகம் தேடி வரும். நீண்ட நாள் பட்ட கடன்களும் அடைபடும். கெட்டவனை தொட்டானும் கெட்டான் என்பதை போல யாருக்கோ போக வேண்டிய பிரச்சனைகள் உங்களை வாட்டி வதைத்தது. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு மன அழுத்த பிரச்சினைகள் நீங்கும் நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்: ராகு உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். கேது 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்.
அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ராகு 5ஆம் இடத்திற்கும் கேது 11ம் இடத்திற்கும் வருகிறார்கள். 12ல் உள்ள கேது உங்களுடைய தூக்கத்தை கெடுத்து வருகிறார். நோய் நொடிகளுக்கு வைத்திய செலவுகளை செய்ய வைத்து கடன் சுமை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அர்த்தாஷ்டம சனியும் ஒருபக்கம் அம்மாவிற்கு செலவை ஏற்படுத்தி வருகிறது. தொழில் வியாபாரத்தில் போதுமான வருமானம் வந்தாலும் நிம்மதி குறைந்த வாழ்க்கை வாழ்ந்த உங்களுக்கு 18 வருஷத்துக்கு பிறகு 5ம் இடத்திற்கு ராகு வருவதால் முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கி சுகம் பெறலாம். கடன் சுமை குறையும். கேது லாப ஸ்தானத்தில் வருவதால் தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும் தடைபட்ட காரியத்தை செவ்வனே செய்து முடிப்பீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சி நிலையான தொழில் யோகத்தையும் வலிமையான சம்பாதித்யத்தையும் கொடுக்கும். அசையா சொத்துகள் வீடு மனை வாங்கும் யோகத்தை கொடுக்கும். அக்டோபருக்குப் பிறகு ராகு கேது பெயர்ச்சி மன நிம்மதியை தரும்.

Rahu ketu peyarchi palan 2023: Rahu Ketu Who will get Gubera yogam

தனுசு: உங்களுடைய ராசிக்கு 5ஆம் இடத்திலும்,11ஆம் இடத்திலும் ராகு கேது பயணம் செய்கின்றனர். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு சுக ஸ்தானமான நான்காம் இடத்திற்கும் ராகுவும் 10ஆம் இடத்திற்கும் மாறுகிறார்கள். இதுவரை திணறடித்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
4ம் பாவம் தாயார்,சுகம்,வாகனம் கல்வி,நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இந்த 4ம் பாவத்திற்கு ராகு வருகிறார். இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள். தாயார் வழியில் சில தேவையற்ற செலவுகள் உண்டாகலாம். பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். பழைய கடன்கள் அடைப்படும்.புதிய கடன் வாங்கி சுபகாரியம்,திருமணம்,பிள்ளைகள் படிப்புக்கு செலவு செய்ய நேரிடும். வரவுகள் அதிகரிக்கும் வங்கியில் சேமிப்பும் உயரும். வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ராகுவும் கேதுவும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு திடீர் அதிர்ஷ்டத்தை தரப்போகிறார்கள்

மகரம்: மகர ராசிக்காரர்களே, இது வரை 4ஆம் இடத்தில் இருந்த ராகு 3ஆம் இடத்திலும் 10 இடத்தில் இருந்த கேது 9ம் இடத்திற்கும் வருகிறார்கள். 3ஆம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார். ராகு இப்பொழுது யோகத்தை வாரி வழங்க போகிறார். இனி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.தேவைகள் பூர்த்தியாகும்.இது வரை ஏளனம் செய்தவர்கள் எல்லாம் உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து வியந்து போவார்கள். திருமண நிகழ்ச்சிகள் சுபமாக முடியும். உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டீர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். உற்றார் உறவினர் பகை மறந்து வீடு தேடி வருவார்கள்.

Rahu ketu peyarchi palan 2023: Rahu Ketu Who will get Gubera yogam

கும்பம்: ராகுவும் அக்டோபர் மாதம் முதல் 18 மாதங்கள் உங்க ராசிக்கு குடும்ப ஸ்தானத்திற்கும் கேது உங்க ராசிக்கு ஆயுள் ஸ்தானத்திற்கும் வருவது சிறப்பு. திடீர் பணவருமானம் வரும் திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். அதே நேரத்தில் சேமிக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்படும் அளவிற்கு செலவுகளும் வரும். குடும்பத்தோட நிறைய நேரம் செலவு பண்ணுவீங்க. உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருங்க. உணவு விசயத்தில கட்டுப்பாடா இருங்க. கண் தொடர்பான பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும் கவனமாக இருங்க. கூட வேலை செய்றவங்களை அனுசரித்து போங்க. வேலை செய்யும் இடத்தில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். என்ன செய்றது நம்ம நேரம் யாருமே ஒத்துழைப்பு தர மாட்றாங்களேன்னு கோபம் வரத்தான் செய்யும். உங்க கோபம், உணர்வுகளை கட்டுப்படுத்துங்கள். உங்க வீட்ல கூட பேசும் போது காரசார விவாதங்களை தவிர்த்திடுங்க. ராகு காலத்தில் ராகு கேதுவிற்கு அர்ச்சனை பண்ணுங்க நல்லதே நடக்கும்.

மீனம்: 18 ஆண்டுகளுக்கு பிறகு ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு வந்து அமரப்போகிறார். ஜென்ம ராகு, களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் கேது பயணம் செய்யப்போவதால் 18 மாதங்கள் அதாவது 2025ஆம் ஆண்டு மே மாதம் வரை உங்களுக்கு யோக காலம்தான். திடீர் பணவருமானம் வரும் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். மனைவி பெயரில் புதிய தொழில் தொடங்கலாம். ஏழரை சனி காலம் விரைய சனி என்பதால் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வேலையில் திடீர் இடமாற்றம் வரலாம். திடீர் செலவுகள் வரும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். எந்த வேலையிலும் கவனமாகவும் விழிப்புணர்வோடும் இருங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+