Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி 2023.. 18 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஜாக்பாட்..6 ராசிக்காரர்களை அசைக்க முடியாது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராகு மேஷ ராசியிலும் கேது துலாம் ராசியிலும் அமர்ந்துள்ளனர். ராகு உடன் குரு பயணம் செய்ய இப்போது கும்ப ராசியில் இருந்து சனி பார்க்கிறார். அக்டோபர் மாதம் ராகு மீன ராசிக்கும் கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். ராகுவின் பயணம், பார்வை சஞ்சாரத்தினால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்களுக்கும் 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரைக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

நவ கிரகங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு கேது கிரகங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றன. கால புருஷ தத்துவதத்திற்கு மூன்றாவது வீடு தைரிய வீரிய ஸ்தானம். இளைய சகோதர ஸ்தானம். கால புருஷ தத்துவத்திற்கு ஒன்பதாம் வீடு பாக்ய ஸ்தானம் உயர்கல்வி, வெளிநாட்டு பயணம், தந்தையை குறிக்கும். பொதுவாகவே ராகு கேது கிரகங்கள் இருக்கும் இடத்துக்கேற்ப அந்த வீட்டின் அதிபதியைப் போல் பலன் தருவார்.

Rahu ketu peyarchi palan 2023: Rahu Ketu Who will get Jacpot after 18 years

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கைகூடி வரும் காலம் வந்து விட்டது. விரைய ஸ்தானத்தில் உள்ள ராகுவை திடீர் பண வரவை அள்ளித்தருவார். ஆறாம் இடத்தில் பயணம் செய்யும் கேதுவினால் நன்மைகள் அதிகம் நடைபெறப்போகிறது. உங்களுக்கு நீண்ட நாட்களாக இருந்த உடல் உபாதைகள் நீங்கும். பணத்தினை முறையான வழியில் சேமிப்பது அவசியம். பண விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணத்தை யோசித்து முதலீடு செய்யுங்கள். பத்திரமான இடத்தில் பணத்தை சேமிப்பது நன்மை தரும். நிதி நிறுவனங்கள் சீட்டு கம்பெனிகளில் பணத்தை போட்டு விட்டு ஏமாந்து போய் விட வேண்டாம். உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கேது பகவான் உங்க எதிரிகளை வெல்ல வைப்பார். பண வருமானத்தை ராகுவும் கேதுவும் அள்ளி கொடுப்பார்கள் கடன் பிரச்னைகள் குறையும். பொறுமையுடன் இருந்தால் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

ரிஷபம்: ராகு பகவான் லாப ஸ்தானமான 11வது வீட்டிலும் கேது பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாவது வீட்டிலும் வரப்போவதால் உங்கள் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். அசாத்தியமான வெற்றியைப் பெற்றுத் தருவார் ராகு. லாப ஸ்தானத்தில் உள்ள ராகுவின் மீது பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள கேதுவின் பார்வை விழுகிறது. நிறைய பண வரவு கிடைக்கும். பணத்தை சேமிக்கும் அளவிற்கு செலவுகள் கட்டுப்படும். மனதில் நினைத்ததை செயல்படுத்துவதில் வேகம் காட்டுவீர்கள். மனதில் நல்ல சிந்தனைகளையும், நல்லெண்ணங்களையும் கேது அருள்வார். கேதுவினால் விவேகமும், ராகுவினால் வேகமும் கிடைக்கும். எல்லா விஷயங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். உங்க வருமானம் 2020ஆம் ஆண்டு அபரிமிதமாக உயரும். அதற்கான வேலைகளை ராகுவும் கேதுவும் செய்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நினைத்த பதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு மதிப்பு மரியாதை கூடும் உயர்பதவிகள் தேடி வரும். விரும்பிய இடத்திற்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். உங்க பிள்ளைகளுக்கு நன்மைகள் நடைபெறும். பிள்ளைகளிடம் இருந்த பிரச்சினைகள் தீரும் திருமண பாக்கியம் கிடைக்கும்.

மிதுனம்: துனம் ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்திலும் கேது பகவான் நான்காம் வீடான சுக ஸ்தானத்திலும் அமர்ந்து உள்ளனர். சொத்து, சுகம் சேருவதோடு உங்க வாழ்க்கையின் தரமும் உயரும். நீங்கள் எடுக்க போகும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறைக் காட்டுங்கள். 2023ஆம் ஆண்டு இறுதி முதல் சுகமும் சந்தோஷமும் தேதி வரும். 2024ஆம் ஆண்டு சுகமான ஆண்டாக அமையப்போகிறது. புதிய தொழில் முயற்சிகள் கை கொடுக்கும். குடும்பத்தோடு ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய வீடு நிலம் வாங்குவீர்கள் அதற்கான வேலையை ராகு செய்வார். உங்க வேலையில் முன்னேற்றமும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.

கடகம்: கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் வாழ்க்கைத் தரம் உயரும். ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் கேது பகவான் தைரிய ஸ்தானத்திலும் பயணம் செய்கின்றனர். ராகு வெளிநாட்டு பயணத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார்.
கேதுவின் 3ஆம் இடத்தில் பயணம் செய்வதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். மறைமுக எதிரிகள் மாயமாவார்கள். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். புதிய சொத்து வாங்க முயற்சிப்போருக்கு கால நேரம் கூடிவரும். விலகியிருந்த உறவினர்கள் நெருங்கி வருவார்கள். செவ்வாய்கிழமைகளில் விநாயகரை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

Rahu ketu peyarchi palan 2023: Rahu Ketu Who will get Jacpot after 18 years

சிம்மம்: ராகு பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் கேது பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் பயணம் செய்யப்போகின்றனர். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. வீண் வாக்குவாதத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். குடும்ப பிரச்சினைகளை வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அதீத கவனமும் அக்கறையும் செலுத்துங்கள். அநாவசிய பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். வியாழக்கிழமைகளில் குருபகவானை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

கன்னி: நிகழப்போகும் ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு யோகத்தை அள்ளித்தரப்போகிறது. ராகு பகவான் ஏழாம் வீட்டிலும் கேது பகவான் ஜென்ம ராசியிலும் பயணம் செய்யப்போவதால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் இதுநாள் வரை தடைபட்டு வந்த சுப காரியங்கள் கைகூடும். கணவன் மனைவிடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி நெருக்கம் உண்டாகும். பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். பண வருமானம் அதிகரித்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். உங்களின் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு சேமிப்பது அவசியம். ஜென்ம ராசியில் வந்து அமர உள்ள கேது பகவான் விரக்தியான மனநிலையைத் தருவார் என்றாலும் கவலைப்படாமல் செய்யும் வேலையில் கவனம் செலுத்துங்கள். காகத்திற்கு எள் சாதம் வைப்பது நல்லது.

துலாம்: இந்த ராகு கேது பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரப்போகிறது. ராகு பகவான் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்திலும் அமர்ந்துள்ளார். ஆறாம் வீட்டில் அமர்ந்துள்ள ராகு நோய்களையும் கடனையும் அதிகரிப்பார். வயிறு செரிமான கோளாறுகள் வந்து நீங்கும். மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அநாவசியமாக பணத்தை கடனாக வாங்க வேண்டாம் யாருக்கும் பணத்தை கடன் கொடுக்கவும் வேண்டாம் ஜாமீன் கையெழுத்தும் போட வேண்டாம். விரைய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். உத்யோகத்தில் சம்பளம், பதவி உயர்வு கிடைக்கும்.

விருச்சிகம்: ராகுவும் கேதுவும் உத்யோக உயர்வையும், பணவரவையும் தரப்போகின்றனர். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும் புகழ் கூடும். ஐந்தாம் வீட்டிற்கு ராகுவும் லாப ஸ்தானமான 11வது வீட்டிற்கு கேதுவும் வரப்போகின்றனர். தொழிலுக்காக வெளியூரில் தங்க வேண்டியிருக்கும். சிலருக்கு இடமாற்றமும் ஏற்படும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கும். ஆன்மீக விசயங்களுக்காக அதிக செலவுகளை செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலக விசயமாக வெளிநாடு பயணம் அடிக்கடி செல்வீர்கள். ராகுவினால் டென்சன் குறையும், கேதுவினால் பொருளாதார வரவு அதிகரிக்கும். ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

தனுசு: இந்த ராகு கேது பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் வெற்றியை தேடித்தரப்போகிறது. நான்காம் வீட்டில் ராகுவும், தொழில் ஸ்தானத்தில் கேதுவும் அமரப்போவது சிறப்பான அம்சமாகும். வீட்டில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சிலர் புதிய வீடு மாறுவீர்கள். சிலருக்கு வேலையில் மாற்றம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பொறுமையோடு இருந்தால் இழப்பை சரி செய்யலாம். இழந்த செல்வாக்கை திரும்ப பெறுவீர்கள். பொருளாதார நிலை சீரடையும்.

Rahu ketu peyarchi palan 2023: Rahu Ketu Who will get Jacpot after 18 years

மகரம்: மூன்றில் ராகு ஒன்பதில் கேது மகர ராசிக்காரர்களுக்கு மனதில் அசாத்தியமான தைரியத்தை இடம்பெறச் செய்யும். அடுத்தவர் செய்யத் தயங்கும் காரியத்தினை எவ்வித தயக்கமுமின்றி சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். ராகு அள்ளிக்கொடுக்கப் போகிறார். காதலால் கசிந்து உருகுவீர்கள். அபரிமிதான பண வரவு கிடைக்கும். ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் உள்ள கேதுவினால் நீங்கள் நினைத்தது நிறைவேறும் கோடீஸ்வர யோகம் கிடைத்துள்ளது. செய்யும் தொழில் மூலம் நல்ல லாபமும் புதிய தொழிலில் ஈடுபடும் வாய்ப்பும் கிடைக்கும். தேவைக்கேற்ப பணவசதி உண்டாகும். சிலருக்கு வண்டி வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களையும் நடத்தி மகிழ்வீர்கள். வெள்ளிகிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வைத்து வழிபடுங்கள். அத்தனையும் சுகமாக நடைபெறும்.

கும்பம்: உங்கள் ராசிக்கு ராகு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் - கேது பகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகின்றனர். ஜென்ம சனி உள்ளதாலும் வாக்கு ஸ்தானத்தில் ராகு உள்ளதாலும் பேசும் வார்த்தைகளில் கடுமையை வெளிப்படுத்த வேண்டாம் கனிவை வெளிப்படுத்துங்கள். பணவரவு பொருளாதார வரவு அதிகரிக்கும் அதே நேரத்தில் செலவும் கூடும் சேமிக்கத் தொடங்குங்கள். அஷ்டமத்தில் கேது பகவான் உள்ளதால் மனதளவில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் மன உளைச்சல்கள் தீரும் உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடாக இருங்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். கடன் கொடுக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்வது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம் சந்தோஷம். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு மரியாதை கூடும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு மரியாதை கூடும். ரிஷப ராசிக்காரர்கள் ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

மீனம்: ஜென்ம ராகு அள்ளித்தரப்போகிறார் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பணம் விசயத்தில் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு சீராகும். ஏழாம் இடத்தில் அமர்ந்து உள்ள கேதுவினால் சத்ரு நாசம் ஏற்படும். எதிரிகள் காணாமல் போவார்கள். புதிய நபர்களை நம்பி எந்த விஷயத்திலும் இறங்கக் வேண்டாம். பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பெண்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரும். செவ்வாய்கிழமையில் துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+