ராகு கேது பெயர்ச்சி 2023:அள்ளிக்கொடுக்கப்போகும் ராகு..பொன் மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் யார்?
மதுரை: ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும் கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் அக்டோபர் மாத இறுதியில் இடபெயர்ச்சி அடைய உள்ளனர். இந்த ராகு கேது பெயர்ச்சியால் ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்களை தரப்போகிறது என்று பார்க்கலாம்.
ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள்.

நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ,ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சி ரிஷபம் ராசிக்கும் கொடுக்கும் பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.
ரிஷபம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு ராகு நிறைய யோகத்தை தரப்போகிறார். இதுநாள் வரை 12ஆம் வீட்டில் விரையத்தில் அமர்திருந்த ராகு லாப ஸ்தானமான 11வது வீட்டிற்கு லாப ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி ஆவது யோகமான கால கட்டம். அள்ளிக்கொடுக்கப்போகிறார் ராகு பகவான். நீங்கள் எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவையும் தருவார். போட்டி பொறாமைகளை ஒழிப்பார். அடுத்தவர்களின் சூழ்ச்சியால் நீங்கள் மாட்டிய பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும். பாகப் பிரிவினை, சொத்து வழக்குகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடியும்.
குடும்ப ஒற்றுமை: வீட்டில் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக்கொண்டிருந்த தம்பதியர் இடையே இனி ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் எல்லோரும் மகிழ்ச்சியான செய்திகளை சொல்வார்கள். மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று உயர்கல்விக்கு செல்வார்கள். உடல்நிலையும் உற்சாகமாக இருக்கும். குடும்பத்தில் நிலவும் அமைதியும் சந்தோசமும் உங்களின் பயணத்தை வெற்றிப்பாதையை நோக்கி இழுத்துச்செல்லும்.
உயர்பதவி: வேலை செய்யும் இடத்தில் இதுநாள்வரை உங்களை அலட்சியப்படுத்தியவர்கள் தேடி வந்து பேசுவார்கள். வேலைக்கு ஏற்ற மதிப்பு கூடும். உயரதிகாரிகள் உங்களை தேடி வந்து பேசுவார்கள். உயர்பதவி தேடி வரும். சம்பள உயர்வும் கூட வரும். கலைத்துறையினருக்கு புதிய பட வாய்ப்புகள் தேடி வரும் வருமானம் கூடும். பெண்களுக்கு நினைத்ததெல்லாம் நிறைவேறும் காலம் வந்து விட்டது பொன்மழை பொழியும் நேரம் இது.
வெற்றிகள் தேடி வரும்: உங்களுக்கு இதுநாள்வரை தடைபட்டு வந்த நல்ல காரியங்கள் இனி மளமளவென முடியும். திருமணமாகமல் இருந்தவர்களுக்கு தோஷங்கள் நிவர்த்தியாகி திருமணம் கைகூடி வரும். சிலருக்கு பிள்ளைபாக்கியம் வந்து சேரும். குல தெய்வ பிரார்த்தனைக்காக குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வீர்கள். வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமையும். சொத்து வழக்குகள் முடிவுக்கு வந்து உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வரும்.

கேது பெயர்ச்சி: மோட்ச காரகன் கேது இதுநாள்வரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்திருந்தார். இனி பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ல் வருவது யோகம் தான். புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானத்தில் கேது வருவதால் சோதனைகளை தாண்டி மாற்றங்களை கொடுக்கும். சொந்த வீடு வாங்கும் யோகம் வந்து விட்டது. அதற்கேற்ப பணவருமானமும் அதிகரிக்கும்.
குடும்ப அமைதி: தாய்வழி உறவினர்களுடன் கோபத்துடன் பேச வேண்டாம். புதிய முயற்சிகள் கை கூடும். புதிய மனிதர்களின் தொடர்பு அவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும். இது வரை உங்களை தரக்குறைவாக நடத்தியவர்கள் எல்லாம் இனி உங்களை கண்டு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள். உங்களுக்கு இதுநாள்வரை தடைபட்டு வந்த நல்ல காரியங்கள் இனி மளமளவென முடியும்.
வெற்றிகள் தேடி வரும்: திருமணமாகமல் இருந்தவர்களுக்கு தோஷங்கள் நிவர்த்தியாகி திருமணம் கைகூடி வரும். சிலருக்கு பிள்ளைபாக்கியம் வந்து சேரும். குல தெய்வ பிரார்த்தனைக்காக குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வீர்கள். வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமையும். சொத்து வழக்குகள் முடிவுக்கு வந்து உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வரும். ஆன்மீக பயணம் செல்வீர்கள். மகான்கள் தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். இந்த ராகு கேது பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு அளவில்லாத ஆனந்தத்தை தரப்போகிறது.












Click it and Unblock the Notifications