ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: ரோகிணி, மிருகஷீரிடம்,திருவாதிரை.. யாருடைய வாழ்க்கையை புரட்டிப்போடும்
சென்னை: மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் ராகு மீன ராசியில் ரேவதி நட்சத்திற்கு இடம் மாறுகிறார். அதே போல துலாம் ராசியில் உள்ள கேது கன்னி ராசியில் உள்ள சித்திரை நட்சத்திரத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த இடப்பெயர்ச்சியால் ரோகிணி, மிருகஷீரிடம், திருவாதிரை நட்சத்திரங்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.
ரோகிணி: ரோகிணிக்கு சந்திரன் அதிபதி. பகவான் கிருஷ்ணன் அவதரித்த நட்சத்திரம் ரோகிணி. பிறக்கும் போதே சந்திர திசையில் பிறந்தவர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். ராகு திசை நடப்பவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி யோகத்தை தரும். காரணம் ராகு லாப ஸ்தானத்தில் பயணம் செய்வார். அதிர்ஷ்டகரமான ராகு கேது பெயர்ச்சி 18 மாதங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி யோகத்தை தரப்போகிறார். வீடு தேடி யோகம் வரப்போகிறது.

மிருகஷீரிடம்: அற்புதமான நட்சத்திரம் மிருகஷீரிடம். ராகு கேது பெயர்ச்சி யோகத்தை தரப்போகிறது. பண வருமானம் அதிகரிக்கும். ராகு பெயர்ச்சி பொருளாதார முன்னேற்றத்தை தரப்போகிறது. நிழல் கிரகமான ராகு பலவிதமான யோகத்தை தரப்போகிறார். தடைபட்ட காரியங்களில் இருந்து தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். முன்னேற்றத்தைத் தரக்கூடிய நேரமாக அமைந்துள்ளது. நினைத்த காரியம் நிறைவேறும். ராகு திசையாக இருக்கும் பட்சத்தில் சுப காரியங்கள் நடைபெறும். உங்களுக்கு யோகத்தை தரக்கூடிய ராகு கேது பெயர்ச்சியாக அமைந்துள்ளது. ராகு குரு தொடர்பில் இருந்தாலும் திடீர் அதிர்ஷ்டத்தை தரப்போகிறது.
திருவாதிரை: 27 நட்சத்திரங்களில் மிகவும் உயர்வான நட்சத்திரமாக போற்றப்படும் நட்சத்திரங்களில் திருவாதிரையும் ஒன்று. சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம். திருவோணமும் திருவாதிரையும் விஷேசமானது. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நட்சத்திர அதிபதி ராகு. ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை தரப்போகிறது. ராகு திசை இளம் வயதிலேயே முடிந்திருக்கும். ராகு புத்தி நடக்கும் பட்சத்தில் யோகத்தை கொடுப்பார். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பதவி அதிகாரம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை கிடைக்கும்.












Click it and Unblock the Notifications