ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: திடீர் கோடீஸ்வர யோகம்.. பெட்டி நிறைய தங்கம் யாருக்கு சேரும்
சென்னை: ராகு சூது கிரகம்.. கோடி கோடியாக அள்ளித்தருவார் ராகு பகவான். ராகு கேது பெயர்ச்சியால் யாரெல்லாம் திடீர் கோடீஸ்வரர் ஆகப்போகிறார்கள். பெட்டி பெட்டியாக தங்கம் யாருக்கு சேரும் என்று பார்க்கலாம். தோஷங்கள் நீங்கி சந்தோஷத்தை அனுபவிக்கப்போவது யார் என்று பார்க்கலாம்.
ராகு கேது: பெரும்பாலான கோவில்களில் நாளைய தினம் ராகு கேது பெயர்ச்சி பரிகார யாகங்கள் செய்கின்றனர். சிறப்பு அபிஷேகங்களும் லட்சார்ச்சனையும் செய்கின்றனர். திருக்கணித பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் 30ஆம் தேதி நிகழ உள்ளது. மேஷ ராசியில் இருந்து ராகு மீன ராசிக்கும் துலாம் ராசியில் இருந்து கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகமும் திடீர் அதிர்ஷ்டமும் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.

சிம்மம் : உங்கள் ராசிக்கு 8ஆம் வீட்டில் ராகுவும், 2ஆம் வீட்டிற்கு கேதுவும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றனர். ஜாதகத்தில் 8ஆம் இடம் என்பது கெட்ட ஸ்தானமாகும். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது போல பாவ கிரகம் 8ஆம் வீட்டில் வந்தால் கெடுதல்களை அழிப்பார். ராகு பகவான் பெருமையையும் புகழையும் தருவார். ராகு சூது கிரகம். எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். தொழிலில் நிலையான தன்மை கிடைக்கும்.வருமானம் சேமிப்பு உயரும். சிலர் வீட்டுக்கு மேல் வீடு கட்டும் வாய்ப்பு வரும். கேது 2ஆம் வீட்டிற்கு வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும். உங்களுடைய முயற்சி வெற்றியை தரும். ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். உழைப்பை மட்டுமே நம்பும் உங்களுக்கு நல்லதே நடைபெறும்.
கன்னி: இது வரை 2 ம் இடத்தில் கேதுவும் 8ஆம் இடத்தில் ராகு இருந்த நிலை மாறி ராசியில் கேதுவும் 7 ஆம் இடத்தில் ராகுவும் பெயர்ச்சியாகின்றனர். களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில் ராகு பயணம் செய்யப்போகிறார் புதிய தொழில் தொடங்கலாம். கோர்ட்டு விவாகரத்து என்று அலைந்தவர்களுக்கு தீர்ப்பு சாதகமாக அமைந்து மறுமணம் நடக்கலாம். உங்கள் ராசியில் கேது கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். அடுத்த ஆண்டு மே மாதம் குரு ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அப்போது கன்னி ராசியின் மீது குருவின் பார்வை விழுகிறது. அந்த வகையில் கேதுவுக்கு குரு பார்வை கிடைப்பதால் கோடீஸ்வர யோகம் தேடி வரும். கஷ்டங்களில் இருந்து விடிவு விமோசனம் ஆகியவற்றை அடையலாம். காலம் பிறக்கும் நல்ல வேலை கிடைக்கும். இது வரை போரட்டாம் ஏமாற்றம் சஞ்சலம் என்று வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் மாற்றம் முன்னேற்றம் வரும்.

துலாம்: ராகு 6ஆம் பாவத்திற்கும் கேது 12ஆம் பாவத்திற்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றனர். எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன் அடைப்படும் தீராத நோய் தீரும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். மோட்ச ஸ்தானத்தில் மோட்சகாரகன் வருவதால் புது முயற்சிகள் கை கூடும்.வரவு எட்டணா செலவு பத்தணா நிலை மாறி சேமிப்புகள் உயரும். சுப தேவைகளுக்கு கடன் பட நேரிடும். இந்த ராகு கேது பெயர்ச்சி யோகம் செல்வாக்கு சொத்து சுகத்தை கொடுக்கும். நினைத்த காரியம் நிறைவேறப்போகிறது. ராகு கேது பெயர்ச்சி பண வருமானத்தோடு அறிவையும் ஞானத்தையும் தரப்போகிறது.
விருச்சிகம்: ராகு உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டிற்கும் கேது லாப ஸ்தானமான 11ம் இடத்திற்க்கும் வருகிறார்கள். 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஸ்தானங்களில் ராகு கேது சஞ்சரிப்பார்கள். உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி நிம்மதியை தரும். தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். இது வரை தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். புத்திரபாக்கியம் தடைப்பட்ட தம்பதியினருக்கு புத்திரபாக்கியமும் குடும்பத்தில் அமைதியும் நிலவும். திருமணம் ஆகி விவாகரத்தானவர்களுக்கு மறுமணம் நடக்கும். ராகு கேது பெயர்ச்சி ஆறுதலையும் முன்னேற்றத்தையும் தொழில் நிலை யோகத்தையும் வலிமையான சம்பாதித்யத்தையும் கொடுக்கும். அசையா சொத்துகள் வீடு மனை வாங்கும் யோகத்தை கொடுக்கும். ராகு கேது பெயர்ச்சியால் தோஷங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கப்போகிறது.












Click it and Unblock the Notifications