ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: 4 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் 18 ஆண்டுகளுக்குப் பின் அதிரடி மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவ கிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும் ராகுவும் கேதுவும் மீன ராசிக்கும் கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைந்து விட்டன. 18 மாதங்கள் இந்த கிரகங்கள் பல ராசிக்காரர்கள் வாழ்க்கையில் திருப்புமுனைகளை ஏற்படுத்தப்போகின்றன. நவ கிரகங்களில் ராகுவும் கேதுவும் சக்தி வாய்ந்த கிரகங்கள். தற்போது ராகுவும் கேதுவும் நல்ல இடத்திற்கு மாறியுள்ளனர். இந்த இடப்பெயர்ச்சியால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சிம்மம்: சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது, அஷ்டம ஸ்தானத்தில் ராகு பயணம் செய்கிறார். காரியங்களில் கவனம் செலுத்துங்கள். அதிக முதலீடு செய்ய வேண்டாம். யாருக்கும் பணம் கடனாக கொடுக்க வேண்டாம். பணத்தை முதலீடு செய்து ஏமாந்து போகாதீர்கள். குரு சண்டாள யோகம் முடியப்போகிறது. குருவின் பார்வை உங்களுக்கு தெளிவாக கிடைப்பதால் பண வருமானம் அதிகரிக்கும். பணம் கொடுக்கறேன். உனக்காக நான் செய்கிறேன் என்று வாக்கு கொடுக்காதீர்கள் ஏமாந்து போவீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். பண வருமானம் வரும். உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள். உறையூர் வெக்காளியம்மனை வழிபட சந்தோஷங்கள் அதிகரிக்கும்.

Rahu Ketu Peyarchi Palan 2023: Simmam, Kanni, Thulam and Viruchigam rasi Prediction

கன்னி: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு ராசியில் கேது அமர்கிறார். உங்கள் ராசி நாதன் போலவே செயல்படப்போகிறார். 18 மாதங்கள் ராகு 7ஆம் வீட்டில் பயணம் செய்வதால் குடும்பத்தில் சண்டை சச்சரவு வரும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குரு பகவான் பார்வை ஆறு மாதங்களில் கிடைக்கப்போகிறது. வீடு சொத்து வாங்கும் யோகம் வரும். இதுநாள் வரைக்கும் ஏமாந்தது போதும் காசு கையில் வரும். கடன் யாருக்கும் கொடுக்க வேண்டாம். நினைத்தது நிறைவேறப்போகிறது. அற்புதமான யோகத்தை தரப்போகிறது. மயிலாப்பூரில் அருள்பாலிக்கும் முண்டகக்கண்ணியை வழிபட நன்மைகள் நடைபெறும்.

துலாம்: உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் ராகுவும் 12ஆம் வீட்டில் கேதுவும் பயணம் செய்யப்போகின்றனர். அற்புதமான யோக காலமாக அமையப்போகிறது. தலைமேல் அமர்ந்திருந்த கேது விலகி விட்டதால் உடலில் இருந்த தொந்தரவுகள் நீங்கும். மன குழப்பங்கள் நீங்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையில் புரமோசன் சம்பள உயர்வு கிடைக்கும். வாழ்க்கையில் வெளிச்சம் கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொட்டது துலங்கும் ராஜயோகம் தேடி வரப்போகிறது. வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை தரப்போகிறது. அற்புதமான யோகத்தை அனுபவிக்கப்போகிறீர்கள். குருவின் பார்வையும் சுபமாக அமையப்போவதால் பணவருமானம் கிடைக்கப்போகிறது. சுக்கிர ஸ்தலமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரையும் ரங்கநாயகி தாயாரையும் வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

விருச்சிகம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி நல்ல விசயங்களை நடத்தி தரப்போகிறது. 5ஆம் வீட்டில் ராகு, லாப ஸ்தானத்தில் கேது பயணம் செய்வதால் யோகத்தை தரப்போகின்றனர். பூர்வீக சொத்துக்கள் விற்பனை மூலம் லாபம் கொடுக்கப்போகிறது. வெற்றி மீது வெற்றிகள் தேடி வரப்போகிறது. பிள்ளைகள் வாழ்க்கையில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பிற்காக வெளியூர் வெளிநாடு செல்வார்கள். ஆரோக்கியம் அதிகரிக்கும். அர்த்தாஷ்டம சனி கஷ்டத்தை தரும் அதே நேரத்தில் கேது கவலைகளை குறைப்பார். விடியலை காணப்போகிறீர்கள். செவ்வாய்கிழமை துர்க்கையை வழிபட நன்மைகள் ராஜயோகம் தேடி வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+