ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: தீபாவளிக்குப் பின் திடீர் அதிர்ஷ்டம்.. செல்வம் யாருக்கு தேடி வரும்
சென்னை: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு பகவான் 12ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். கேது பகவான் 6ஆம் வீட்டில் பயணம் செய்கிறார்.
ராகு கேது பெயர்ச்சி என்ன பலன்களைத் தரப்போகிறது. வேலையில் புரமோசன் கிடைக்குமா தொழில் வியாபாரம் சிறப்படையுமா என்று பார்க்கலாம்.
ராகு கேது பெயர்ச்சி: மீன ராசியில் 18 மாதங்கள் பயணம் செய்யும் ராகு பகவான் ரேவதி, உத்திரட்டாதி, பூரட்டாதி நட்சத்திரங்களில் பயணம் செய்வார். கன்னி ராசியில் பயணம் செய்யும் கேது பகவான் சித்திரை, ஹஸ்தம், உத்திரம் நட்சத்திரங்களில் பயணம் செய்வார். ராகுவின் பார்வை ரிஷபம், கன்னி, மகரம் ராசிகளின் மீது விழுகிறது. கேதுவின் பார்வை கடகம், மீனம், விருச்சிகம் ராசிகளின் மீது விழுகிறது.

மேஷம்: கப்பலே கவிழ்ந்தாலும் கவலைப்பட மாட்டீர்கள் நீங்கள். ஜென்ம குரு உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். சனி பகவான் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார் ராகு பகவான். சந்தோஷமான பலன்களை தரப்போகிறார் ராகு பகவான். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். பாடாய் படுத்திய பிரச்சினைகள் மனக்குழப்பங்கள் நீங்கும். வம்பு வழக்குகள் சாதகமாக இருக்கும்.
தொழில் லாபம்: வீண் பிரச்சினைகள் அலைச்சல் உண்டாகும். பொறுமையும் நிதானமும் தேவை. பிள்ளைகளால் செலவு வரும். வீடு இடமாற்றம் உண்டாகும். ராகுவின் பார்வை குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். பண வருமானம் வரும். தொழில் வியாபாரத்தில் லாபம் வரும். சட்டத்திற்கு புறம்பான வழியில் ஈடுபட வேண்டாம். வீண் அலைச்சல் வந்து நீங்கும். குடும்பத்தில் சுப காரியம் ஏற்படும்.
ராகுவின் பார்வை: ஆறாம் வீட்டில் கேது பகவான் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் உள்ள கேதுவின் மீது ராகுவின் பார்வை விழுகிறது. சுப காரியங்கள் நடைபெறும். பொருளாதாரம் வளம் பெறும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். வங்கிக்கடன் உதவி கிடைக்கும். வம்பு வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகள் தொல்லை ஒழியும்.
திடீர் அதிர்ஷ்டம்: லாட்டரி, ரேஸ் பங்குச்சந்தைகளில் லாபமும் திடீர் அதிர்ஷ்டமும் ஏற்படும். தொழில் வேலை ஸ்தானத்தின் மீது ராகுவின் பார்வை விழுகிறது. உங்களின் தொழில் முதலீடுகள் இரட்டிப்பு லாபம் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பண வருமானம் வரும். அரசு வேலை கிடைக்கும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் கைகூடி வரப்போகிறது. அடிக்கடி ஆன்மீக பயணம் செல்வீர்கள்.
ஆறாம் வீட்டில் கேது: கன்னி ராசி உங்கள் ராசிக்கு ஆறாம் வீடு. கேதுவின் பயணத்தால் தன்னம்பிக்கை தைரியம் கூடும். கேதுவின் பார்வையால் உங்களுக்கு வங்கிக்கடன் கிடைக்கும். விரும்பிய இடத்தில் இடமாற்றம் கிடைக்கும். கடன்களை அடைக்கும் அளவிற்கு பல வழிகளில் பணம் வரும். திருமணம் சுப காரியம் நடைபெறும். வேலை, கல்விக்காக வெளிநாட்டு பயணம் உண்டாகும். வீடு, நிலம் வாங்குவீர்கள்.
கேது பகவான்: ஆறாம் வீட்டில் அமர்ந்துள்ள கேதுவின் 8 ஆம் இட பார்வையால் உங்களுக்கு திடீர் மாற்றங்கள் ஏற்படும். சுக ஸ்தானத்தின் மீதும் விரைய ஸ்தானத்தின் மீதும், ஆயுள் ஸ்தானத்தின் மீதும் கேது பகவான் பார்வை விழுகிறது. அதிக வட்டிக்கு வாங்கி அகலக்கால் வைக்காதீர்கள். வாகன பயணங்களில் கவனம் தேவை. நிதானமும் பொறுமையும் அவசியம்.
புகழ் செல்வாக்கு: பண வருமானம் தாராளமாக இருக்கும். யாரை நம்பியும் பண முதலீடு செய்யாதீர்கள். உறவினர்களிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வயிறு தொந்தரவு வாயு பிரச்சினைகள் வரலாம் எண்ணெய் பலகாரங்களை சாப்பிடுவது தவிர்ப்பது நல்லது. சுகத்தையும் சந்தோஷத்தையும் தரக்கூடிய ராகு கேது பெயர்ச்சியாக உள்ளது. குல தெய்வ வழிபாடு அவசியம்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
ஜூன் முதல் 20 நாட்கள் கவனம்.. கோபம் கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம்..குரு சுக்கிரன் அருளால் பணமழை -
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications