Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி 2023: குழப்பத்தை நீக்கும் குடும்ப ராகு..வார்த்தைகளில் கவனம் யாருக்கு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 13ஆம் தேதி அக்டோபர் 30,2023 நாள் ராகு மீனம் ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றன. இந்த கிரகங்களின் இடப் பெயர்ச்சியால் சிலருக்கு அசுர வளர்ச்சியும் அற்புத யோகமும் அக்டோபர் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகிறது. கும்பம் ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் உங்கள் குடும்ப வாழ்க்கையில் சில நன்மைகள் ஏற்படப்போகிறது. நிழல் கிரகங்களின் இடப்பெயர்ச்சி பார்வைகளால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது.

Rahu ketu peyarchi palan 2023 Tamil: Kumbam rasi Rahu Ketu Peyarchi Palan

ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். 18 மாதங்கள் ராகுவும் கேதுவும் மீனம் மற்றும் கன்னி ராசிகளில் பயணம் செய்கின்றனர். அக்டோபர் மாதம் முதல் கும்பம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நேர்மையான எண்ணமும் சுறுசுறுப்பான செயல்பாடுகளும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, அக்டோபர் மாதம் முதல் ராகு பகவான் குடும்ப ஸ்தானமான இரண்டாவது வீட்டிற்கும் எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் கேதுவும் பயணம் செய்கின்றனர். தானம் கொடுப்பதில் சிறந்தவர் நீங்கள்தான். குடும்ப ஸ்தானத்தில் வரும் ராகுவினால் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். யாருக்கும் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். உங்கள் பேச்சில் கவனமும் நிதானமும் தேவை, தவறான புரிந்து கொண்டு சண்டைக்கு வர வாய்ப்பு உள்ளது.

சகோதர சகோதரிகள் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கடன் வாங்கிய பணத்தை தராமல் ஏமாற்றியவர்கள் நேரில் வந்து கொடுத்து விட்டு செல்வார்கள். திடீர் திருப்பங்கள் நிகழப்போகிறது. காரியத்தடைகள் நீங்கும் வெற்றி கை கூடும். திடீர் மருத்துவ செலவுகள் வரலாம. எதிர்பாலினத்தவரிடம் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதாரவு கிடைக்கும். சிக்கல்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

கேது பகவான் ராசிக்கு எட்டாவது வீட்டிற்கு மாறப்போவதால் உங்களுக்கு வேலையில் அலைச்சல் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பயணங்களின் கவனம் தேவை. என்றாலும் இனி வரும் காலங்களில் சிக்கல்கள் நீங்கி மன நிம்மதி அதிகரிக்கும். திடீர் செலவுகளால் சேமித்த பணம் கரையும். ஒருவித பயமும் பதற்றமும் வந்து நீங்கும்.

உடல் சோர்வும் அவ்வப்போது மன உளைச்சலும் ஏற்படலாம். கவனமும் நிதானமும் தேவைப்படும். அலுவலகத்தில் பணிச்சுமையும் உண்டாகும். மன தடுமாற்றம் இருந்தாலும் சில நேரங்களில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அவசர முடிவுகள் எடுத்து விட்டு அவதிப்பட வேண்டாம். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் வந்து நீங்கும். பேச்சில் கனிவும் செயலில் துணிவும் தேவைப்படும் காலகட்டமாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+