ராகு கேது பெயர்ச்சி 2023: ஜென்ம ராகு..களத்திர கேது..அள்ளித்தருமா? அசரடிக்குமா? யாரெல்லாம் கவனம்
சென்னை: திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 13ஆம் தேதி அக்டோபர் 30,2023 நாள் ராகு மீனம் ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றன. இந்த கிரகங்களின் இடப் பெயர்ச்சியால் சிலருக்கு அசுர வளர்ச்சியும் அற்புத யோகமும் அக்டோபர் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகிறது. இந்த ராகு கேது பெயர்ச்சியால் மீனம் ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் சில நன்மைகள் ஏற்படப்போகிறது. நிழல் கிரகங்களின் இடப்பெயர்ச்சி பார்வைகளால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
மீனம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம ராசியில் அமரப்போகிறார் ராகு. களத்திர ஸ்தானத்தில் அமரப்போகிறார் கேது. நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது.

ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். 18 மாதங்கள் ராகுவும் கேதுவும் மீனம் மற்றும் கன்னி ராசிகளில் பயணம் செய்கின்றனர். அக்டோபர் மாதம் முதல் மீனம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மீனம் ராசிக்காரர்களே..ராகு உங்கள் ராசியில் அமர்ந்து உங்கள் ராசிநாதன் குரு பகவானைப் போல செயல்படப்போகிறார். தைரியம் தன்னம்பிக்கை கூடும். காரியத்தடைகள் நீங்கும். பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். எந்த பிரச்சினைகளையும் எளிதில் எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன சங்கடங்கள் வந்தாலும் எளிதில் நீங்கும். திடீர் பண வரவு வரும் கூடவே செலவுகளும் வந்து கையைக் கடிக்கும்.
வேலையில் திறமை அதிகரிக்கும் வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். வியாபாரத்தில் போட்டி பொறாமை அதிகரிக்கும். லாபமும் அதிகரிக்கும். பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம் தவறாகிவிடும். கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் பதவிகள் கிடைக்கும். எதையும் உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுக்காதீங்கள். அலசி ஆராய்ந்து அறிவிப்பூர்வமாக முடிவு எடுப்பது நல்லது. முன்கோபம் அதிகரிக்கும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள் அவசரப்பட்டு பேசிவிட்டு பின்னர் வருத்தப்பட வேண்டாம்.
பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அவர்கள் மீது அக்கறையும் கவனமும் செலுத்துங்கள். பிள்ளைகளுக்கு பிடித்தமான படிப்பில் சேர்த்து விடுவதே நன்மை. மகளுக்கோ, மகனுக்கோ நல்ல இடத்தில் வரன் அமையும் கல்யாணம் கை கூடி வரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும். வண்டி வாகனம் வாங்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். சொந்த வீடு கட்டுபவர்கள் வீடு கட்டி கிரகப்பிரவேஷம் செய்வீர்கள். பிரிந்த சொந்தங்கள் ஒன்று சேரும் காலம் வரப்போகிறது.
இக்காலகட்டத்தில் உடல்நலக் குறைகள், சிறு சிறு விபத்துகள், ஏமாற்றங்கள், இழப்புகள் மற்றும் உறவினர்கள் மத்தியில் மனக்கசப்புகள் வந்து நீங்கும். இந்த கால கட்டத்தில் ஜென்ம ராகு மனக்குழப்பத்தை தருவார். உடல் ஆரோக்கியத்தில் தலைச் சுற்றல், உணர்ச்சி வேகத்தில் தவறான முடிவுகள் எடுக்க வேண்டாம். அவ்வப்போது மன உளைச்சல், டென்ஷன், சோர்வு, தலைவலி வந்து நீங்கும். சின்னச் சின்ன மருத்துவ செலவுகள் வரலாம் கவனம் தேவை.
களத்திர ஸ்தானமான ஏழாவது வீட்டில் கேது பயணம் செய்வதால் குடும்பத்தில் காரசாரமான விவாதங்கள் வந்து போகும். அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வாழ்க்கைத் துணைவருக்கு லேசாக முதுகுவலி வந்து நீங்கும். பயமும் பதற்றமும் விலகும். எதிரிகள் தொல்லைகள் அகலும். சகோதரியின் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்க வேண்டாம். தொழில் ரகசியங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம். நேர்மையான வழியை கடைபிடியுங்கள் நல்லதே நடக்கும்.
கேது பகவான் புதன் பகவானைப் போல செயல்படுவார். கேதுவினால் நல்ல செய்தி தேடி வரும். அரசு வேலை கிடைக்கும். அரசு, தனியார் துறையில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் தேடி வரும். பொறுப்புகளை கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள். திருமணமாகி குழந்தைக்களுக்காக காத்திருப்பவர்களுக்கு இந்த கேது பெயர்ச்சி நல்ல செய்தியை தேடி தரப்போகிறது.












Click it and Unblock the Notifications