ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: படு கஷ்டம்.. ராகு தரும் அடி பலமா இருக்கே.. ஆறுதல் தரும் கேது யாருக்கு
சென்னை: ராகு தற்போது மீன ராசியில் பயணம் செய்கிறார். அர்த்தாஷ்டம சனியால் அவதிப்படும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பூர்வ புண்ணிய ராகு சில பாதிப்புகளையே தருவார். 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரைக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு விழப்போகும் அடியை சமாளித்துதான் ஆக வேண்டும்.
எது வந்தாலும் சமாளிப்போம் என்ற மனநிலைக்கு விருச்சிக ராசிக்காரர்கள் வந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு முதலே கஷ்ட காலம்தான். ஏழரை சனி ஆரம்பித்தது எல்லாவற்றையும் இழந்து விரக்தி மனநிலைக்கு தள்ளப்பட்டவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள்தான். ஒருவழியாக ஏழரை சனி 2020ஆம் ஆண்டு முடிந்தாலும் பின்னாலேயே ஜென்ம கேது வந்து தலைமேல் அமர்ந்தது.

ஜென்ம கேது பெயர்ச்சி ஆன உடன் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் அர்த்தாஷ்டம சனி வந்து அமர்ந்து விட்டது. தொடர்ச்சியாக மருத்துவ செலவு வந்து படாத பாடு படுத்தி வருகிறது. தற்போது பூர்வ புண்ணிய ராகு, ஆறாம் வீட்டு குரு என அசரடிக்கின்றன கிரகங்கள். கிரகங்கள் சாதகமாக இல்லாமல் இருப்பதால் எதற்காகவும் யாருக்காகவும் மல்லுக்கு நிற்காதீர்கள். அப்புறம் ஊமை குத்தாக குத்தி விடுவார்கள்.
சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பெண்கள், கர்ப்பிணிகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். பண விசயத்தில் கவனம் தேவை. சொந்த பந்தங்களின் நெருக்கடி அதிகரிக்கும். குல தெய்வத்தின் அருள் இருப்பதால் நெருக்கடிகளை சமாளிப்பீர்கள்.
2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரைக்கும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பேச்சில் நிதானமும் பொறுமையும் அவசியம். யாருக்காகவும் எதற்காகவும் பணத்தை கடனாக தர வேண்டாம். 2025ஆம் ஆண்டு வரைக்கும் ஜாமின் கையெழுத்து போட்டு பணத்தை கடனாக கொடுத்து ஏமாந்து போகாதீர்கள். பொது இடங்களில் பேச்சை குறைபபது நல்லது.
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு ராகு படிப்படியாக விலகத் தொடங்குவார். அதன் பிறகு குடுத்பத்தில் நிம்மதி பிறகும். சுப செலவுகள் அதிகரிக்கும். ராகு செய்யப்போகும் மாயத்தை மீம்ஸ் ஆக பதிவிட்டுள்ளார் ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்.
எங்களுக்கும் காலம் வரும், அப்போ கஷ்டத்துக்கே கஷ்டம் கொடுப்போம். இப்படிக்கு, அடிதாங்கமுடியாமல் உளறி அலறும் "விருச்சராசி/லக்னத்தார் குழு என்று மீம்ஸ் பதிவிட்டுள்ளார் ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன். மீனம் வாங்குற அடியை போல விருச்சகமும் குறையில்லாம ஊமை குத்தா வாங்கிட்டு இருக்கு என்றும் விருச்சிகராசியினரின் நிலையை பதிவிட்டுள்ளார்.
என்னதான் ராகு அடி கொடுத்தாலும் விருச்சிக ராசிக்காரர்கள் சமாளிக்கும் வகையில் கேது கை கொடுப்பார். காரணம் கேது லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். திடீர் பண வருமானத்தை கொடுப்பார். லாட்டரி சீட்டில் திடீர் ஜாக்பாட் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வீடு சொத்து வாங்குவீர்கள். கை நிறைய சம்பளத்தில் புதிய வேலை கிடைக்கும். பண வருமானம் அதிகரிக்கும் சேமிப்பும் கூடும்.












Click it and Unblock the Notifications