ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: தொட்டதெல்லாம் லாபம்.. வீடு தேடி வரும் பொற்காலம் யாருக்கு?
சென்னை: மீன ராசியில் ராகுவும் கன்னி ராசியில் கேதுவும் இன்று முதல் பயணம் செய்கின்றனர். குரு பகவானை விட்டு விலகிய ராகு வலிமையான நிலையில் குருவின் வீட்டில் பயணம் செய்கிறார். புதன் வீட்டில் கேது பயணம் செய்யப்போகிறார். இந்த கிரகப்பெயர்ச்சியால் இன்னும் 18 மாதங்களுக்கு ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
ரிஷபம்: பொதுவாகவே ராகு லாப வீடான 11ஆம் இடத்தில் பயணம் செய்வது லாபத்தை தரப்போகிறது. சவால்களை சந்தித்த நீங்கள் சாதனைகளாக மாற்றுவீர்கள். திடீர் பண வருமானம் தேடி வரப்போகிறது. வீண் விரைய செலவுகள் கட்டுப்படும். உங்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கப்போகிறது.

ரேவதி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் ராகு பகவான் வரும் ஜூன் மாதம் 24ஆம் தேதி வரைக்கும் உங்களுக்கு கவுரவ பதவிகளை தேடி தரப்போகிறார். சொத்து பிரச்சினைகள் முடிவுக்க வரும். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்யலாம். 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு உங்களுக்கு புரமோசனும் இடமாற்றமும் கிடைக்கும்.
ராகு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் காலத்தில் யோகங்கள் தேடி வரும் 2024ஆம் ஆண்டு ஜூன் முதல் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி வரைக்கும் சனி பகவானின் நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ராகு பயணம் செய்யும் காலத்தில் நல்ல செயல்கள் நிறைய நடைபெறும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் தேடி வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.
2025ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரைக்கும் குரு பகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் ராகு பகவான் பயணம் செய்யும் காலத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் வந்து நீங்கும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்திலும் வீட்டிலும் வீண் அலைச்சல்கள் வந்து நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் செலுத்துவது நல்லது.
கேது பகவான்: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது பகவான் பயணம் செய்யும் காலத்தில் பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் வரலாம். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வந்து நீங்கும். ஆலய தரிசனமும் இறை வழிபாடும் மன அமைதியை கொடுக்கும். சித்திரை நட்சத்திரத்தில் கேது பகவான் பயணம் செய்கிறார். 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரைக்கும் பண வருமானம் வரும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி மன நிம்மதி உண்டாகும். சகோதரர்களால் சந்தோஷம் உண்டாகும். வாகன பயணங்களின் போது கவனம் தேவை.
கேதுபகவான் ஹஸ்தம் நட்சத்திரத்தில் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் அக்டோபர் வரை பயணம் செய்கிறார். வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன் மனைவி இடையே தேவையற்ற சலசலப்புகள் மனக்கசப்புகள் வந்து நீங்கும். யாருக்கும் கடன் வாங்கிக்கொடுக்கவோ வேண்டாம். ஜாமின் கையெழுத்து போட்டு பணம் வாங்கிக்கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள்.
2024ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரைக்கும் கேது பகவான் சூரியனின் நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரத்தில் பயணம் செய்யும் காலத்தில் பண விவகாரங்களில் கவனமாக இருப்பது நல்லது. தேவையற்ற முதலீடுகளை தவிர்க்கவும். யாரை நம்பியும் பணத்தை முதலீடு செய்யாதீர்கள். சுப காரியங்களுக்கு செய்யும் முயற்சிகளில் தடைகள் வந்து பின்னர் நிறைவேறும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். ஆலய தரிசனம் செய்வீர்கள். ராகு கேது பெயர்ச்சி ஏற்றங்களையும் மாற்றங்களையும் தரப்போகிறது. புற்றுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications