Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி பலன்: 18 ஆண்டுகளுக்குப் பின் மீன ராசியில் அமரும் ராகு..குபேர யோகம் பெறுவது யார்

ராகு கேது பெயர்ச்சியால் மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம், கன்னி வரை பிறந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று சுருக்கமாக பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவ கிரகங்களில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்றாலும் மனிதர்களின் நல்லது கெட்டதுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ராகு கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது அந்த அளவிற்கு அள்ளிக்கொடுப்பார். ஒருவருக்கு மறைமுகமாக வரும் திடீர் அதிர்ஷ்டம் பணவரவு யோகங்கள் எல்லாமே ராகுவினால் ஏற்படக்கூடியதுதான். கேது ஆன்மீக வழியில் கொண்டு செல்வார். போதும்டா சாமி இதுக்கு மேல எதுவுமே வேணாம். சந்நியாச வாழ்க்கையே சந்தோஷம் என்ற மனநிலைக்கு மாற்றி விடுவார் கேது. ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் மாதம்தான் என்றாலும் கிரகங்களின் நட்சத்திர மாற்றம் சில பலன்களை தரப்போகிறது. இந்த பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை பிறந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன்பாக ராகு காலம் எமகண்டம் பார்த்துதான் செய்கின்றனர். ராகு ஆசைக்காரகன் அள்ளிக்கொடுப்பார். கேது ஞானத்தை கொடுப்பார். ராகுவும் கேதுவும் தந்தைக்காரகன் சூரியனுக்கும் தாய் காரகன் சந்திரனுக்கும் ஆகாத கிரகங்களாக இருக்கின்றன.

Rahu Ketu Peyarchi palan 2023 tamil : Rahu ketu transit 12 zodiac signs parikaram

ராகு கேது சாதகமாக இருந்தால் ஒருவருக்கு செல்வம் செல்வாக்கு எப்படி தேடி வருமே அந்த அளவிற்கு ராகு கேது கிரகங்கள் சரியாக அமையாவிட்டால் செல்வம், செல்வாக்கு இழந்து அவமரியாதை ஏற்படும். ராகு கேது சாதகமாக இருப்பவர்களுக்குத்தான் லாட்டரியில் பணமும், திடீர் புதையலும் கிடைக்கும். ஒரு பிச்சைக்காரர்கூட திடீர் என கோடீஸ்வரராக மாறுவதும் கூட ராகுவினால்தான். கேது திடீர் ஞானத்தை கொடுத்து மோட்சத்திற்கு வழிகாட்டுவார்.
இந்த ராகு கேது பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று மின்னல் வேகத்தில் பார்க்கலாம்.

மேஷம்

ராசியில் உள்ள ராகு விரைய ஸ்தானத்திற்கும் ஏழாம் வீட்டில் உள்ள கேது ஆறாம் வீடான நோய் எதிரி சத்ரு ஸ்தானத்திற்கும் மாறுகின்றனர். சிலருக்கு வெளிநாட்டு பயணம்,தொழில் அமையும் வாய்ப்பை அமைத்துக்கொடுப்பார். சுபகாரியங்கள் திருமணம் சடங்கு கிரக பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். கேது பெயர்ச்சியால் சிலருக்கு புது வேலை வாய்ப்பு மற்றும் தொழில் அமையும். இதுநாள் வரை தொந்தரவு செய்த நோய்பிரச்சினை நீங்கும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் ராகு பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடலாம்.

Rahu Ketu Peyarchi palan 2023 tamil : Rahu ketu transit 12 zodiac signs parikaram

ரிஷபம்

லாப ராகு அற்புதங்களை செய்வார். விரைய ஸ்தானத்தில் இருந்த ராகு லாப ஸ்தானத்திற்கு மாறுவதால் எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவையும் கொடுப்பார். அடுத்தவர்களின் சூழ்ச்சியால் உங்களுக்கு வந்த பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும். மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ல் வருவது யோகம் தான். காரிய வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகள் கை கூடும். சுப காரியங்கள் சந்தோஷமாக நடக்கும்.

Rahu Ketu Peyarchi palan 2023 tamil : Rahu ketu transit 12 zodiac signs parikaram

மிதுனம்

கஷ்டங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. நீங்கள் எடுக்கும் ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். தொழிலாளியாக இருந்த நீங்கள் முதலாளி ஆகும் யோகம் வரும். நினைத்த மாதிரி நல்ல வேலை வாய்ப்பு அமையலாம் சம்பள உயர்வும் வசதி வாய்ப்புகளும் தேடி வரும். சொந்த வீடு வாங்கும் யோகம் வரும், சுப காரியங்கள் நல்லமுறையில் கைகூடி வரும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். ராகு கேது பெயர்ச்சி வாழ்க்கையில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரப்போகிறது.

Rahu Ketu Peyarchi palan 2023 tamil : Rahu ketu transit 12 zodiac signs parikaram

கடகம்

கடந்த காலங்களில் பல பிரச்சினைகளை சந்தித்த உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் விமோசனம் கிடைக்கும். வருமானம் திருப்தி தரும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலைகளில் இடையூறு நீங்கும்.மறைமுக எதிர்ப்புகள் விலகும். பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடி வரும், புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். நிர்வாக பொறுப்புகள் தேடி வரும். நினைத்த காரியம் கைகூடி வரும்.

Rahu Ketu Peyarchi palan 2023 tamil : Rahu ketu transit 12 zodiac signs parikaram

சிம்மம்

ராகு பெயர்ச்சியால் எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்றவை ஏற்படும். ஒளிமயமான எதிர்காலம் அமையப்போகிறது. திருமணம் சுபகாரியம் நடைபெறும். கோர்ட் வம்பு வழக்கு சாதகமாகும்.சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம். சிலர் பிள்ளைகள் படிப்புக்கு ஊரை மாற்றலாம்.சிலர் வீட்டுக்கு மேல் வீடு கட்டும் வாய்ப்பு வரும். சொல்லும் செயலும் வெற்றி பெறும். உங்க முயற்சி தன்னம்பிக்கை மூலம் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அதே நேரத்தில் பணம் விசயங்களில் வாக்குக்கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள்.

Rahu Ketu Peyarchi palan 2023 tamil : Rahu ketu transit 12 zodiac signs parikaram

கன்னி

ராகு கேது பெயர்ச்சியால் உங்களுக்கு நல்லது நடக்கப்போகிறது. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும்.வருமானம் திருப்தி தரும்.தேவைகள் பூர்த்தியாகும்.குடும்பத்தில் பிள்ளைகள் படிப்புக்கு செலவு செய்வீர்கள். களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில் ராகு அமர்வதால் கஷ்டங்கள் நீங்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

Rahu Ketu Peyarchi palan 2023 tamil : Rahu ketu transit 12 zodiac signs parikaram

துலாம்

உங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் தீரப்போகிறது. எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன்கள் அடைப்படும் தீராத நோய் தீரும். தொழில் முயற்சிகள் கை கூடும்.படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். திருமணம் கை கூடி வரும் சந்தான யோகம் தேடி வரும். நீண்ட நாள் பட்ட கடன்களும் அடைபடும்.

Rahu Ketu Peyarchi palan 2023 tamil : Rahu ketu transit 12 zodiac signs parikaram

விருச்சிகம்

ராகு கேது பெயர்ச்சி நிம்மதியை தரும். தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும் தடைபட்ட காரியத்தை செவ்வனே செய்து முடிப்பீர்கள். கடன் சுமை குறையும். நிலையான வருமானம் தேடி வரப்போகிறது. அசையா சொத்துகள் வீடு மனை வாங்கும் யோகத்தை கொடுக்கும். 18 வருஷத்துக்கு பிறகு 5ம் இடத்திற்கு ராகு வருவதால் முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கி சுகம் பெறலாம்.

Rahu Ketu Peyarchi palan 2023 tamil : Rahu ketu transit 12 zodiac signs parikaram

தனுசு

ராகு பகவான் இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள். தாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் உண்டாகலாம். பழைய கடன்கள் அடைப்படும். வருமானம் அதிகரிக்கும். தொழில் நிலை முன்னேற்றத்தை தரும். வரவுகள் அதிகரிக்கும் சேமிப்பும் உயரும். பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். சுபகாரியம்,திருமணம்,பிள்ளைகள் படிப்புக்கு செலவு செய்ய நேரிடும். காரிய வெற்றி உண்டாக சனிக்கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

Rahu Ketu Peyarchi palan 2023 tamil : Rahu ketu transit 12 zodiac signs parikaram

மகரம்

மகர ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 3ஆம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார். ஏழரை சனியால் துயரப்படும் உங்களுக்கு ராகு பகவான் இனி யோகத்தை வாரி வழங்க போகிறார். இனி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். திருமண நிகழ்ச்சிகள் சுபமாக முடியும். உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். உற்றார் உறவினர் பகை மறந்து வீடு தேடி வருவார்கள்.

Rahu Ketu Peyarchi palan 2023 tamil : Rahu ketu transit 12 zodiac signs parikaram

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே..ராகுவும் கேதுவும் அக்டோபர் மாதம் முதல் 18 மாதங்கள் உங்க ராசிக்கு குடும்ப ஸ்தானத்திற்கும் கேது உங்க ராசிக்கு ஆயுள் ஸ்தானத்திற்கும் வருவது சிறப்பு. திடீர் பணவருமானம் வரும் திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். விரைய சனியால் சம்பாதித்த பணத்தை சேமிக்க முடியவில்லையே என்ற வருத்தப்பட்ட நீங்கள் இனி பணத்தை சேமிக்கத் தொடங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். கோபம், உணர்வுகளை கட்டுப்படுத்துங்கள். காரசார விவாதங்களை தவிர்த்து விடுங்கள். பொறுமையும் நிதானமும் தேவைப்படும் மாதமாகும்.

Rahu Ketu Peyarchi palan 2023 tamil : Rahu ketu transit 12 zodiac signs parikaram

மீனம்

18 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசிக்குள் அமரப்போகிறார் ராகு பகவான். ஜென்ம ராகு, ஏழாம் வீட்டில் கேது இனி 18 மாதங்கள் அதாவது அக்டோபர் 2023ஆம் ஆண்டுவரை உங்க ராசியில் சஞ்சரிப்பார்கள். திடீர் பணவருமானம் வரும் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். மனைவி பெயரில் புதிய தொழில் தொடங்கலாம். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வேலையில் திடீர் இடமாற்றம் வரலாம். திடீர் செலவுகள் வரும். சிலருக்கு அதிகமாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரும். ஏழரை சனியில் விரைய சனி காலம் என்பதால் அகலக்கால் வைக்காதீர்கள். செவ்வாய்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு நல்லெண்ணெய் தீபம் விளக்கு போடுவது நல்லது.

Rahu Ketu Peyarchi palan 2023 tamil : Rahu ketu transit 12 zodiac signs parikaram
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+