ராகு கேது பெயர்ச்சி 2023: அக்டோபருக்குப் பின் அஷ்டலட்சுமி யோகம்..அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா?
சென்னை: நவ கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகு கேது திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 13ஆம் தேதி அக்டோபர் 30,2023 நாள் மீனம் ராசிக்கும், கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றன. இந்த கிரகங்களின் இடப் பெயர்ச்சியால் சிலருக்கு அசுர வளர்ச்சியும் அற்புத யோகமும் அக்டோபர் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகிறது. சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிரடி மாற்றம் ஏற்படப்போகிறது. துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.
நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது.

ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். அக்டோபர் மாதம் முதல் புதனை போல கேதுவும் குருவை போல ராகுவும் செயல்பட உள்ளதால் துலாம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
நிகழ உள்ள ராகு பெயர்ச்சியால் தீபாவளிக்குப் பிறகு புதிய தொழில் முயற்சிகள் கை கூடும்.படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும்.வெளிநாட்டு தொடர்புடைய உத்யோகம் கிட்டும். பதவி உயர்வு பெற்று வருமானம் கூடும். வீடு மனை வாங்கும் யோகம் வரும். திருமணம் சுபகாரியம் கைகூடி வரும். பெண்களுக்கு புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும்.
6ஆம் பாவத்திற்கு ராகு வரப்போவதால் நினைத்தது நிறைவேறும் காலம் வந்து விட்டது. உறவினர்களின் பாசமும் நேசமும் அதிகரிக்கும். எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு அமர்ந்துள்ளதால் கடன் அடைப்படும் தீராத நோய் திரும். போட்டி பொறாமை பொடி பொடியாகும். முடியாத காரியங்களை முடித்து காட்டுவீர்கள். எதிரிகள் உங்களைக் கண்டு விலகி ஓடுவார்கள்.
ஆறாம் வீட்டிற்கு ராகு வரப்போவது அஷ்ட லட்சுமி யோகத்தை தரக்கூடியது. இதுநாள் வரை இருந்த துன்பங்கள் துயரங்கள் நீங்கும். கடன் பிரச்சினையில் இருந்தும் நோய்களில் இருந்தும் நிவாரணம் பெறுவீர்கள். தம்பதியரிடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபராத்தில் இருந்த தடைகள் முன்னேற்றங்கள் நீங்கும். பிள்ளைகள் வழியில் இருந்த செலவுகள் நீங்கும். மன உளைச்சல் நீங்கும்.

ஞானகாரகன் கேது பகவான் ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு 12ஆம் இடமான மோட்ச வீட்டிற்கு இடம் பெயரப்போவதால் ஆன்மீக பயணங்கள் அதிகரிக்கும். கோவில்களுக்கு பயணம் செய்வீர்கள். ஆன்மீக பயணம் அதிகரிக்கும். உலக ஞானத்தை அறிந்து கொள்வீர்கள். உங்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
வேலை விசயமாக நீங்கள் செய்யும் புது முயற்சிகள் கை கூடும்.வரவு எட்டணா செலவு பத்தணா நிலை மாறி சேமிப்புகள் உயரும்.சுப தேவைகளுக்கு கடன் பட நேரிடும். நிண்ட நாள் கடன்களும் அடையும். வண்டி வாகன மாற்றமும் வீடு மாற்றமும் சொந்த வீடு குடி போகும் சந்தர்ப்பங்கள் உருவாகும்.
நீண்ட நாட்களாக சிரமப்பட்டு வந்த அம்மாவின் உடல் நலனில் முன்னேற்றத்தை தரும். புது வீடு, உயர்பதவி யோகம் தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் யோகத்தை கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியையும் ஏற்றத்தையும் கொடுக்கும். மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தை கொடுத்து சுகத்தையும் செல்வாக்கையும் அதிகரிக்கும். திருப்பதி ஏழுமலையானையும் காளஹஸ்தீஸ்வரரையும் வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.












Click it and Unblock the Notifications