Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: சட்டென்று மாறும் வாழ்க்கை.. 18 மாதங்களுக்கு ராஜயோகம் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவ கிரகங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு கேது கிரகங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றன. மீன ராசிக்கு ராகுவும், கன்னி ராசிக்கு கேதுவும் இடப்பெயர்ச்சி அடையப்போவதால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

துலாம்: தலை மேல் அமர்ந்திருந்த கேது விலகுகிறார். மன நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். புயலில் சிக்கிய படகாய் தவித்துக்கொண்டிருந்த துலாம் ராசிக்காரர்களுக்கு கலங்கரை விளக்கம் கண்ணுக்கு தென்பட ஆரம்பிக்கும். ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அமரும் ராகு நோய்களையும் கடனையும் அதிகரிப்பார். கடன் வாங்க வேண்டாம் யாருக்கும் கடன் கொடுக்கவும் வேண்டாம் ஜாமீன் கையெழுத்தும் போட வேண்டாம். வயிறு செரிமான கோளாறுகள் வந்து நீங்கும். மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. விரைய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். நல்ல வேலையும் உத்யோகத்தில் சம்பளம், பதவி உயர்வு கிடைக்கும். வெள்ளிக்கிழமையன்று ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

Rahu Ketu peyarchi palan 2023: Thulam, Viruchigam, Dhanusu, Makaram, Kumbam and Meenam

விருச்சிகம்: லாப ஸ்தானத்தில் அமரும் கேது வேலை செய்யும் இடத்தில் உத்யோக உயர்வையும், பணவரவையும் தரப்போகின்றனர். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும் புகழ் கூடும். ஐந்தாம் வீட்டில் அமர்ந்துள்ள ராகுவும் தொழிலுக்காக வெளியூரில் தங்க வேண்டியிருக்கும். சிலருக்கு இடமாற்றமும் ஏற்படும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலக விசயமாக வெளிநாடு பயணம் அடிக்கடி செல்வீர்கள். புதிதாக சிலருக்கு வெளிநாடு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. ராகுவினால் டென்சன் குறையும், கேதுவினால் பொருளாதார வரவு அதிகரிக்கும். ஆன்மீக விசயங்களுக்காக அதிக செலவுகளை செய்வீர்கள். செவ்வாய்கிழமையன்று ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

தனுசு: இந்த ராகு கேது பெயர்ச்சி வாழ்க்கையில் வெற்றியை தேடித்தரும். நான்காம் வீட்டில் ராகுவும், தொழில் ஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்துள்ளது சிறப்பான அம்சமாகும். வீட்டில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். சிலர் புதிய வீடு மாறுவீர்கள். சிலருக்கு வேலையில் மாற்றம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பொறுமையோடு இருந்தால் இழப்பை சரி செய்யலாம். இழந்த செல்வாக்கை திரும்ப பெறுவீர்கள். பொருளாதார நிலை சீரடையும். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு சென்று துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மகரம்: தைரிய ஸ்தானத்தில் அமரும் ராகுவினால் உங்கள் மனதில் அசாத்தியமான தைரியம் தன்னம்பிக்கை உண்டாகும். ராகு பகவான் இனி அள்ளிக்கொடுக்கப் போகிறார். அபரிமிதான பண வரவு கிடைக்கும். நீங்கள் நினைத்தது நிறைவேறும் கோடீஸ்வர யோகம் கிடைத்துள்ளது. செய்யும் தொழில் மூலம் நல்ல லாபமும் புதிய தொழிலில் ஈடுபடும் வாய்ப்பும் கிடைக்கும். தேவைக்கேற்ப பணவசதி உண்டாகும். சிலருக்கு வண்டி வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களையும் நடத்தி மகிழ்வீர்கள். வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வைத்து வழிபடுங்கள். அத்தனையும் சுகமாக நடைபெறும்.

Rahu Ketu peyarchi palan 2023: Thulam, Viruchigam, Dhanusu, Makaram, Kumbam and Meenam

கும்பம்: உங்கள் ராசிக்கு ராகு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் கேது பகவான் எட்டாம் வீட்டிலும் பயணம் செய்கின்றனர். பேசும் வார்த்தைகளில் கடுமையை வெளிப்படுத்த வேண்டாம் கனிவை வெளிப்படுத்துங்கள். பணவரவு பொருளாதார வரவு அதிகரிக்கும் அதே நேரத்தில் செலவும் கூடும் சேமிக்கத் தொடங்குங்கள். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடாக இருங்கள். எதிர்பாராத திடீர் மருத்துவ செலவுகள் உண்டாகும். கடன் கொடுக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்வது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு மரியாதை கூடும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு மரியாதை கூடும். புதன்கிழமை விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள் நல்லதே நடக்கும்.

மீனம்: ஜென்ம ராகு களத்திர ஸ்தான கேது உங்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சிறு சிறு தொந்தரவுகள் வந்து நீங்கும். கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பணம் விசயத்தில் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். சத்ரு நாசம் ஏற்படும். புதிய நபர்களை நம்பி எந்த விஷயத்திலும் இறங்கக் வேண்டாம். பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. விற்பனையாகாமல் இருந்த சொத்துக்கள் விற்பனையாகும். பெண்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரும். செவ்வாய்க்கிழமையில் துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+