ராகு கேது பெயர்ச்சி 2023: அரசியல்வாதிகள் வாழ்க்கையில் ட்விஸ்ட்.. தேர்தலில் சீட் கிடைக்குமா?
சென்னை: கால புருஷ தத்துவப்படி ராகு பகவான் 12ஆம் வீடான அயன சயன போக ஸ்தானமான மீன ராசிக்கும் கேது பகவான் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானமான கன்னி ராசிக்கும் மாறுகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சி எந்த ராசியில் பிறந்த அரசியல்வாதிகளின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்: அசுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரங்களில் பிறந்த மேஷ ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி அதிரடி மாற்றத்தை தரப்போகிறது. மாற்றங்களும் முன்னேற்றங்களும் உண்டாகும். நோய்களில் இருந்து தப்பிப்பிழைத்தாலும் மருத்துவ செலவுகள் வந்து கொண்டுதான் இருக்கும். உணவு விசயத்தில் கவனம் தேவை. வயிறு பிரச்சினைகள் வரலாம். பதவியில் மாற்றங்கள் வரலாம் சிலருக்கு பதவி இறக்கம் உண்டாகும். தலைமையின் ஆதரவு இருப்பதால் தப்பிப்பிழைப்பீர்கள்.

ரிஷபம்: கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் நட்சத்திரங்களில் பிறந்த ரிஷப ராசி அரசியல்வாதிகளுக்கு காரிய தடை நீங்கும். பேசி பேசியே காரியம் சாதிப்பீர்கள். முன் கோபத்தை கட்டுப்படுத்துங்கள். சில நேரங்களில் கட்சித்தலைமையில் கோபத்திற்கு ஆளாக நேரிடும் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தேர்தல் காலம் என்பதால் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ள நேரிடும். ராகு எந்த அளவிற்கு பணத்தை அள்ளிக்கொடுக்கிறாரோ அந்த அளவிற்கு சர்ச்சைகளையும் கொண்டு வருவார் கவனம் தேவை.
மிதுனம்: மிருகஷீரிடம், திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரங்களில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு தொழில் ஸ்தான ராகுவும், பஞ்சம ஸ்தான கேதுவும் உங்களுடைய வாழ்க்கையில் திடீர் திருப்பங்களை ஏற்படுத்தப்போகின்றனர். பண வருமானம் பல வழிகளில் இருந்தும் வரும். கவனமாக செலவு செய்யாவிட்டால் கூடவே ரெய்டும் வரும். அரசியல்வாதிகள் கவனத்தோடு இருப்பது நல்லது. சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் அரசியல்வாதிகள் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். கோபத்தை குறைத்தாலே போதும் தப்பிக்கலாம். பதவியை தரக்கூடிய தலைவர் சொல்வதற்கு எதிர் பேச்சு பேசாமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள். தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும்.

கடகம்: புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களில் பிறந்த கடக ராசிக்காரர்களே.. மகிழ்ச்சியான மன நிலையில் இருப்பீர்கள். பாக்ய ஸ்தான ராகு, தைரிய ஸ்தான கேது உங்களுக்கு மகிழ்ச்சியை தரப்போகின்றனர். பேச்சுதான் உங்களுக்கு கை கொடுக்கும். தேர்தல் நேரத்தில் உங்களுடைய பேச்சு கை கொடுக்கும் வெற்றியை தேடித்தரும். பணம் பலவழிகளிலும் வரும். அஷ்டமத்து சனியால் கோபம் கொப்பளிக்கும். கோபத்தை கட்டுப்படுத்தா விட்டால் தோல்வியை சந்திக்க நேரிடும். கட்சித்தலைமையிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. தண்ணீரில் கண்டம் கவனம் தேவை. உடலில் நீர் தொடர்பான பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை.












Click it and Unblock the Notifications