ராகு கேது பெயர்ச்சி பலன் 2023:விபரீத ராஜயோகம்... 18 மாதங்கள் அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிக்காரர்கள்
சென்னை: நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் பின்னோக்கி நகரக்கூடியவை. மேஷ ராசியில் பயணம் செய்யும் ராகு மீன ராசிக்கும் துலாம் ராசியில் பயணம் செய்யும் கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் மாதத்தில் நிகழப்போகும் நிலையில் குருவாக செயல்படப்போகும் ராகுவினாலும் புதனாக செயல்படப்போகும் கேதுவினாலும் விபரீத ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.
மேஷம்: மேஷத்தை விட்டு ராகு விலகப்போகிறார். ஜென்ம ராகுவால் நிறைய எதிர்மறை எண்ணங்கள் கோபங்களை சந்தித்து வந்தீர்கள். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு 12ஆம் வீட்டில் விரைய ஸ்தானத்தில் ராகு செல்வது யோகம். நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இடமாற்றம் ஏற்படும், சிலருக்கு ஊர்மாற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு வெளிநாடு, வெளியூர் செல்லும் யோகத்தை தரப்போகிறார். வெளிநாடு பயணம் செல்வீர்கள். கேது தற்போது மேஷ ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு கேது ஆறாம் வீட்டிற்கு செல்கிறார். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். உங்களின் பலம் அதிகரிக்கும். உங்களின் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இந்த ராகு கேது பெயர்ச்சி கோடி கோடியாக அள்ளித்தரப்போகிறது ராகு தரப்போகும் விபரீத ராஜயோகத்தால் 18 மாதங்களுக்கு மேஷ ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள்.

ரிஷபம்: 12ஆம் வீட்டில் உள்ள ராகு லாப ஸ்தானத்திற்கு சென்று அமரப்போகிறார். எதிர்பார்க்காத தன லாபம் கிடைக்கும். திடீர் பண வரவு தேடி வரும். வீடு சொத்து வாங்குவீர்கள். யோகத்தை அள்ளித்தரப்போகிறார் ராகு பகவான். நிறைய தன வரவை தருவார். உச்சத்திற்கு செல்லப்போகிறீர்கள். குருபகவானின் வீட்டில் ராகு செல்வதால் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. எதிர்பார்க்காத ஆதாயத்தை தேடித்தருவார் ராகு பகவான். வேலை பொருளாதார வளர்ச்சி, பேரதிர்ஷ்டத்தை தரப்போகிறார் ராகு பகவான். கேது உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். பூர்வ புண்ணியத்தால் நிறைய அதிர்ஷ்டம் தேடி வரும். பூர்வீக சொத்துக்கள் தேடி வரப்போகிறது. கோவிலுக்கு சென்று ஏழைகளுக்கு தானம் கொடுப்பது நல்லது.
மிதுனம்: ராகு கேது பெயர்ச்சியால் புதிதாக தொழில் செய்ய காத்திருப்பவர்களுக்கு நல்ல நேரம் பிறக்கப்போகிறது. வேலை தேடுபவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். பண வரவை அதிகரிப்பார். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் பயணம் செய்யும் கேது பகவான் உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். இதனால் உங்கள் வாழ்க்கை தரமே மாற போகிறது. வேலை செய்யும் இடத்திலும் சமூகத்திலும் உங்களின் அந்தஸ்து உயரும். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் உண்டாகும்.
கடகம்: ராகு பகவான் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு யோக காரகன். குரு பகவான் வீட்டில் ராகு பகவான் அமர்கிறார். மீன ராசியில் சுக்கிரன் உச்சமடையும் வீடு. அந்த வீட்டில் ராகு பகவான் அமர்வது கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பு. ராகு பகவான் பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கு வரப்போகிறார். உங்களுக்கு ஆதாயமான பலன்கள் கிடைக்கும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி தைரிய ஸ்தானத்தில் அமரப்போவது அற்புதமான யோகத்தை கொடுக்கும். சர்ப்ப கிரகங்களின் இடப்பெயர்ச்சி மிகப்பெரிய யோகத்தை தரப்போகிறது. பொதுவாகவே, ராகு கேதுவுக்கு 3, 6, 11,ஆகிய வீடுகள் நல்ல அம்சம்தான். இதுநாள் வரை தடைபட்டு வந்த காரியங்கள் மளமளவென முடியும். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளினால் வீடு களைகட்டும். தள்ளிப்போன பதவி உயர்வும் ஊதிய உயர்வும் தடையின்றி கிடைக்கும். வேலைச்சுமை குறையும். வேலை செய்யும் இடத்தில் உங்களின் நிர்வாகத்திறனை மேலதிகாரி பாராட்டுவார். சிலருக்கு பெரிய நிறுவனங்களில் தகுதி திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்.
சிம்மம்: ராகு கேது பெயர்ச்சியால் எடுத்த காரியங்களில் வெற்றிகள் தேடி வரும். பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். வேலையில் நல்ல மாற்றம் ஏற்படும். உயரதிகாரியின் ஆதரவினால் பதவி உயர்வும், பணவரவு ஏற்படும். நோய்கள் நீங்கும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை சம்பந்தமாக திடீர் பயணங்கள் உண்டாகும். வீட்டில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். எட்டாம் வீட்டில் அமரப்போகும் ராகு விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. உங்களுடைய ராசிக்கு 3 ஆம் வீட்டில் அமர்ந்து பயணம் செய்யும் கேது பகவான் அக்டோபர் மாதம் முதல் உங்களுடைய ராசிக்கு 2 ஆம் வீட்டிற்கு வப்போகிறார். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உறவினர்கள் நண்பர்களுக்கு பண விசயங்களில் தேவையற்ற வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். அளவுடன் பேசி காரியத்தை சாதிப்பீர்கள். அளவிற்கு மீறி பேசும் போது பெரும் சிக்கலில் மாட்டும் நிலை உருவாகும்.
கன்னி: ராகு பகவான் உங்கள் ராசிக்கு உங்கள் ராசிக்கு களத்திர ஸ்தானமான 7ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். உடலில் சுறுசுறுப்பும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி மகிழ்ச்சியான மனநிலை உண்டாகும். ஓருவருகொருவர் விட்டு கொடுத்து சென்றால் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்கலாம். பண விஷயத்தில் சிக்கன போக்கு தேவை. உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உங்களுடைய ராசிக்கு 2 ஆம் இடத்தில் இருந்து வீண் வாக்குவாதங்களை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கேது பகவான் அக்டோபர் மாதம் முதல் உங்கள் ஜென்ம ராசியிலேயே வந்து அமர போகிறார். அற்புதமான கால கட்டமாக அமையப்போகிறது.
துலாம்: ராகு கேது பெயர்ச்சியால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். உங்கள் குடும்பத்தில் அமைதி திரும்பி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். குரு பகவான் பகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மன உளைச்சல்கள் நீங்கும். ஆறாம் வீட்டில் பயணம் செய்யும் ராகு விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். பண வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். சொத்து பிரச்சனைகளில் சுமூக தீர்வு ஏற்படும். உங்கள் ஜென்ம ராசியில் அமர்ந்து உடல் நிலையில் தொந்தரவு கொடுத்து வரும் கேது பகவான் ஐப்பசி மாதம் முதல் விரைய ஸ்தானமான 12 ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். திடீர் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். புதிய தொழில் தொடங்க சரியான தருணம், உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இது நாள் வரை மேலதிகாரிகளுடன் இருந்து வந்த மோதல் போக்கு நீங்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
விருச்சிகம்: ராகு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்லப்போகிறார். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி அன்யோனியம் பெருகும். செய்வதறியாது இருந்து வந்த மந்த நிலை மாறி புது உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். கிடைக்கும் வேலையில் உங்களை நிலை நிறுத்திக்கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு இட மாறுதல்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. புது முயர்ச்சியில் சற்று நிதானம் தேவை. ஆடை, ஆபரணங்கள் சேரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். கேது பகவான் உங்கள் ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு வரப்போவதால் தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கைகூடும். வங்கியில் வாங்கிய கடன்களை பைசல் செய்வீர்கள். திடீர் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
தனுசு: ராகு பகவான் உங்கள் ராசிக்கு 4 ஆம் வீடான சுக ஸ்தானத்திற்கு வரப்போகிறார். சுக ஸ்தான ராகு வீடு மனை யோகத்தை தரப்போகிறார். சொத்து விவகாரங்களில் இருந்த பிரச்சினைகளை சுமுகமாகப் பேசித் தீர்ப்பீர்கள். உங்கள் ராசிக்கு 11 ஆம் வீட்டில் பயணம் செய்யும் கேது பகவான் ஐப்பசி மாதம் முதல் உங்கள் ராசிக்கு 10ஆம் வீட்டிற்கு வரப்போவதால் வேலை தொழிலில் புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களிடையே ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் நீங்கி அன்பு பாராட்டுவார்கள். வேலைச்சுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்வீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். மூத்த சகோதரருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் தேடி வரும்.
மகரம்: ராகு பகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் வந்து அமரப்போகிறார். எதிலும் வெற்றி உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் கூடும். அடகு வைத்து நகைகளை திருப்புவீர்கள். கடன்கள் பைசலாகும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்னை விலகும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும் . தடைபட்டு வந்த சுபகாரியங்களை இனிதே சிறப்பாக நடந்தேறும். உங்கள் ராசிக்கு 10ஆம் வீட்டில் பயணம் செய்கிறார் கேது. ஐப்பசி மாதம் முதல் கேது பகவான் இனி உங்கள் ராசிக்கு 9ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். வேலையில் நிலவி வந்த தேக்க நிலை மாறும். பெண்களின் நட்பு கிடைக்கும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பன்மடங்கு லாபம் பெருகும்.
கும்பம்: அக்டோபர் மாதம் முதல் 2025ஆம் ஆண்டு மே வரை 18 மாதங்கள் கும்ப ராசிக்கு குடும்ப ஸ்தானத்திற்கும் கேது உங்க ராசிக்கு ஆயுள் ஸ்தானத்திற்கும் வருவது சிறப்பு. திடீர் பணவருமானம் வரும் திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். பணத்தை சேமிக்க முடியாத அளவிற்கு செலவுகளும் வரும். குடும்பத்தோட நிறைய நேரம் செலவு பண்ணுவீங்க. உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருப்பது நல்லது. உணவு விசயத்தில கட்டுப்பாடா இருங்க. கண் தொடர்பான பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும் கவனமாக இருங்க. கூட வேலை செய்றவங்களை அனுசரித்து போங்க. வேலை செய்யும் இடத்தில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். என்ன செய்றது நம்ம நேரம் யாருமே ஒத்துழைப்பு தர மாட்றாங்களேன்னு கோபம் வரத்தான் செய்யும். உங்க கோபம், உணர்வுகளை கட்டுப்படுத்துங்கள். உங்க வீட்ல கூட பேசும் போது காரசார விவாதங்களை தவிர்த்திடுங்க. ராகு காலத்தில் ராகு கேதுவிற்கு அர்ச்சனை பண்ணுங்க நல்லதே நடக்கும்.
மீனம் ஜென்ம ராகு: 18 ஆண்டுகளுக்கு பிறகு ராகு மீனம் ராசியில் வந்து அமரப்போகிறார். ஜென்ம ராகு, ஏழாம் வீட்டில் கேது இனி 18 மாதங்கள் உங்களுடைய ராசியில் சஞ்சரிப்பார்கள். திடீர் பணவருமானம் வரும் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். மனைவி பெயரில் புதிய தொழில் தொடங்கலாம். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வேலையில் திடீர் இடமாற்றம் வரலாம். திடீர் செலவுகள் வரும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். எந்த வேலையிலும் கவனமாகவும் விழிப்புணர்வோடும் இருங்கள்.












Click it and Unblock the Notifications