Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: அக்டோபர் முதல் விபரீத ராஜயோகம். 4 ராசிக்காரர்களுக்கு இனி அதிரடிதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் பின்னோக்கி நகரக்கூடியவை. மேஷ ராசியில் பயணம் செய்யும் ராகு மீன ராசிக்கும் துலாம் ராசியில் பயணம் செய்யும் கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் மாத இறுதியில் நிகழப்போகும் நிலையில் எந்த ராசிக்காரர்களுக்கு கோடி கோடியாக பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சிம்மம்: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு 9ஆம் வீட்டில் பயணம் செய்யும் ராகு 8ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். 3ஆம் வீட்டில் பயணம் செய்யும் கேது அக்டோபர் முதல் 2ஆம் வீடான குடும்ப ஸ்தானத்திற்கு வருகிறார். ராகு பகவான் திடீர் யோகத்தையும் பெருமை புகழையும் தருவார். விபரீத ராஜயோகத்தால் எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். உங்களுடைய வீட்டில் திருமணம் சுபகாரியம் நடக்கும். கோர்ட் வம்பு வழக்கு சாதகமாகும்.சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம். சிலர் பிள்ளைகள் படிப்புக்காக ஊரை மாற்றலாம். சிலருக்கு வீட்டுக்கு மேல் வீடு கட்டும் வாய்ப்பு வரும். குடும்ப ஸ்தானத்தில் கேது வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும். உங்களுடைய முயற்சி தன்னம்பிக்கை மூலம் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும். இந்த ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும்.

Rahu Ketu Peyarchi palan 2023: Viparitha Raja Yogam from October for these 4 zodiac signs

கன்னி: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு ராசிக்கு ஏழாம் வீட்டில் ராகுவும் ராசியில் கேதுவும் அமரப்போகின்றனர். ராசியில் கேது சஞ்சரிப்பதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும்.வருமானம் திருப்தி தரும்.தேவைகள் பூர்த்தியாகும்.குடும்பத்தில் பிள்ளைகள் படிப்புக்கு செலவு செய்வீர்கள். ராகு களத்திர ஸ்தானத்தில் அமர்வதால் கஷ்டங்கள் நீங்கி இனி தலை நிமிரலாம். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒன்று சேரலாம். வாழ்க்கையே போர்க்களம், ஏமாற்றம் சஞ்சலம் என்று வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் மாற்றம் முன்னேற்றம் வரும்.

துலாம்: உங்களுடைய ராசியில் கேது பயணம் செய்கிறார். ராகு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். அக்டோபர் மாதம் முதல் ராகு விலகி ஆறாம் வீட்டிற்கும் கேது விலகி 12ஆம் வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். இதுநாள் வரைக்கும் கெட்டானை தொட்டானும் கெட்டான் என்பதை போல யாருக்கோ போக வேண்டிய பிரச்சனைகள் உங்களை வாட்டி வதைத்தது. இனி பிரச்சினைகள் தீரப்போகிறது. எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன்கள் அடைப்படும் தீராத நோய் தீரும். தொழில் முயற்சிகள் கை கூடும்.படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். திருமணம் கை கூடி வரும் சந்தான யோகம் தேடி வரும். நீண்ட நாள் பட்ட கடன்களும் அடைபடும்.

Rahu Ketu Peyarchi palan 2023: Viparitha Raja Yogam from October for these 4 zodiac signs

தனுசு: உங்களுடைய ராசிக்கு 5ஆம் இடத்தில் ராகு குரு உடன் பயணம் செய்கிறார். லாப ஸ்தானமான 11ஆம் இடத்தில் கேது இடம் மாறுகின்றனர். ராகு பகவான் சுக ஸ்தானமான நான்காம் இடத்திற்கும்,10ஆம் இடத்திற்கும் மாறுகிறார்கள். இதுவரை திணறடித்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். 4ம் பாவம் தாயார்,சுகம்,வாகனம் கல்வி,நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இந்த 4ம் பாவத்திற்க்கு ராகு வருகிறார். தாயார் வழியில் சில தேவையற்ற செலவுகள் உண்டாகலாம். பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். பழைய கடன்கள் அடைப்படும். புதிய கடன் வாங்கி சுபகாரியம்,திருமணம்,பிள்ளைகள் படிப்புக்கு செலவு செய்ய நேரிடும். வரவுகள் அதிகரிக்கும் சேமிப்பும் உயரும். தொழில் நிலை முன்னேற்றத்தை தரும்.

இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிவடையும்.

மகரம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே.. 4ஆம் வீட்டில் உள்ள ராகு 3ஆம் இடத்திலும் 10 இடத்தில் இருந்த கேது 9ம் இடத்திற்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றனர். 3ஆம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார். ராகு இப்பொழுது யோகத்தை வாரி வழங்க போகிறார். இனி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். வீட்டுத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உங்களை ஏளனம் செய்தவர்கள் எல்லாம் உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து உற்சாகமடைவார்கள். திருமண நிகழ்ச்சிகள் சுபமாக முடியும். உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டீர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். உற்றார் உறவினர் பகை மறந்து வீடு தேடி வருவார்கள்.

Rahu Ketu Peyarchi palan 2023: Viparitha Raja Yogam from October for these 4 zodiac signs
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+