ராகு கேது பெயர்ச்சி 2023: ஆனந்தம் ஆனந்தம் பாடும்.. உற்சாகத்தில் நடனமாடும் ராசிக்காரர்கள் யார்?
மதுரை: ராகுவும் கேதுவும் ஒவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும் கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் அக்டோபர் மாத இறுதியில் இடபெயர்ச்சி அடைய உள்ளனர். இந்த ராகு கேது பெயர்ச்சியால் மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்களை தரப்போகிறது என்று பார்க்கலாம்.
நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ,ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். அக்டோபர் மாதம் முதல் ராகு குரு பகவானைப்போலவும் கேது புதன் பகவானைப்போலவும் செயல்படப்போகின்றனர்.
மேஷ ராசிக்காரர்களுக்கு ராகு ஜென்ம ராசியிலும், கேது 7ம் பாவத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர். அக்டோபருக்குப் பிறகு இடப்பெயர்ச்சியாகி 12மிடத்தில் ராகுவும் 6ம் இடத்தில் கேதுவும் மாறுகிறார்கள். சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி என கிரகங்களின் இடப்பெயர்ச்சி அற்புதமாக இருக்கும் இந்த சூழ்நிலையில் ராகு கேது பெயர்ச்சியும் அருமையாக அமையப்போகிறது. ஜென்ம ராசியில் அமர்ந்து அறிவாளியை முட்டாளாக்கி உட்கார வைத்த ராகு
12 ஆம் வீட்டிற்கு விரைய ஸ்தானத்திற்கு வரப்போவதால் வெளிநாட்டு பயணம்,தொழில் அமையும் வாய்ப்பை கொடுப்பார். வர்த்தக தொடர்பு ஏற்படும்.
விரைய ஸ்தான ராகு நிறைய பண வருமானத்தை தருவார் சிலருக்கு வீடு மாற்றம் ஊர் மாற்றம் ஏற்படும். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பதன் அடிப்படையில் இப்பொழுது கெட்ட இடத்திற்கு ராகு கேது வரப்போவது நல்லது தான். சுபகாரியங்கள் திருமணம் சடங்கு கிரக பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். சிலரது பிள்ளைகளுக்கு கலப்பு திருமணம் காதல் திருமணம் அவர்கள் விருப்பபடி செய்து வைக்கும் சூழ்நிலை வரும்.

கேது உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து குடும்பத்தில் சிக்கலை ஏற்படுத்தி வருகிறார். இனி கேது ஆறாம் வீட்டிற்கு வரப்போவதால் புதனை போல கேது செயல்படுவார். புத்தசாலித்தனம் அதிகரிக்கும். புது வேலை வாய்ப்பு மற்றும் தொழிலை பெருக்கி லாபம் சம்பாதித்து சுகபோகங்களை பெருக்கி கொள்ளலாம்.புதிய கடன்களை வாங்கினாலும் அது சுப விரயமாக மாற்றி பழைய கடன்களை அடைக்கலாம். நோய் நொடி போட்டி பொறாமை ஒழியும். வீண் மருத்துவ செலவுகள் குறையும்.
உங்களுக்கு குடைச்சல் கொடுத்த எதிரிகள் பலவீனமடைவார்கள். கோர்ட் வழக்குகள் சாதகமாகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். இழுபறியான பணிகள் முழுமையடையும். கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எல்லாம் முடிவுக்கு வரும். இனிமையான காலங்களை அனுபவிக்கப்போகிறீர்கள். உங்களுடைய செயல்களில் காரியங்களில் தோல்வியை கண்டு அஞ்சாத உங்களுக்கு வெற்றியை எட்டி பிடிக்க வைக்கும். ராகு கேது பெயர்ச்சி முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் தரும். மலைபோல வரும் துன்பம் எல்லாம் பனிபோல விலகி குடும்பத்தில் அமைதி ஆனந்தம் அதிகரிக்கும் காலம் வந்து விட்டது. பவுர்ணமி நாளில் சிவ தரிசனம் செய்ய நன்மைகள் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications