ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: பூர்வீக சொத்துக்களால் கோடீஸ்வர யோகம்.. யாருக்கு தேடி வரும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் இறுதியில் நிகழப்போகிறது. ஐந்தாம் வீட்டில் ராகுவும், லாப வீடான 11வது இடத்தில் கேதுவும் அமர்வதால் சந்தோஷங்கள் அதிகரிக்கும் பணவரவு பல பக்கமிருந்தும் வரும். பூர்வீக சொத்துக்களால் கோடீஸ்வரர் ஆகும் யோகம் விருச்சிக ராசிக்காரர்களை தேடி வரப்போகிறது எப்படி என்று விரிவாகப் பார்க்கலாம்.

நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். விருச்சிக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் ராகு, 11ஆம் வீட்டில் கேது பயணம் செய்யப்போவதால் தடைபட்ட திருமணம் கை கூடி வரும் பணவரவு பலவகையிலும் கிடைக்கும். சாதனைகள் புரிந்து சமூகத்தில் மிகப்பெரிய மதிப்பை பெறுவீர்கள்.

Rahu ketu peyarchi palan 2023: Viruchigam Rasi Rahu Ketu Peyarchi Palan

ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். குரு பகவானைப்போல ராகுவும் புதன் பகவானைப் போல கேதுவும் செயல்படப்போகின்றனர்.

சர்ப்ப கிரகங்களான ராகு கேது சஞ்சாரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு நன்மையை தரும் வகையில் அமைந்துள்ளது. மனதில் இருந்து வந்த கவலைகள் தீரும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு கிடைக்கும். பொருளாதாரத்தில் மேன்மையையும் சிறப்பையும் அடைவீர்கள். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கவுரவப்பதவி தேடி வரும்.

ஐந்தாமிடம் என்பது புத்திரபாக்கியம்,தெய்வ அருள் புண்ணியங்கள் காதல் உல்லாசம் கேளிக்கை அனைத்தும் 5 இடத்தின் காரகத்துவங்கள். இந்த இடத்தில் ராகு பகவான் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் சிறு சிறு சஞ்சலங்கள் வந்து செல்லும். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. அடிக்கடி ஆன்மீக பயணம் செல்வீர்கள். எதிர்பாராத அளவில் வெற்றிகள் தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகும். செய்யும் தொழிலையும் வியாபாரத்தையும் விரிவு படுத்துவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும், மன சஞ்சலத்துடன் இருந்தவர்களுக்கு மன மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கும்.

உங்க ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு வருவதால் மிகப்பெரிய திருப்புமுனையை தரப்போகிறார். குருவைப் போல ராகு செயல்படுவார். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு மன நிம்மதியை தரக்கூடியதாக இருக்கிறது. உங்களை ஏளனம் செய்தவர்கள் எல்லாம் இனி உங்களை ஆச்சரியமாக பார்க்கும் அளவிற்கு உயர்வு கிடைக்கும். இந்த ராகு பெயர்ச்சியால் உங்களுக்கு புத்திர பாக்கியம், திருமண யோகம் கைகூடி வரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிரிகள் தொந்தரவு தீரும், கடன் சுமைகள் குறையும். உங்களை விட்டு விலகி போனவர்கள் எல்லாம் இனி உங்களை தேடி வருவார்கள். விலகிப்போன சொந்தங்கள் எல்லாம் ஒன்றாக தேடி வருவார்கள். கணவன் மனைவி இடையை இருந்த பிரச்சினைகள் நீங்கும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்த வாழ்க்கை துணை உங்களைப்பற்றி தெரிந்து கொண்டு தேடி வருவார்கள். மன சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.

11ஆம் இடம் என்பது லாப ஸ்தானம், இந்த இடத்தில் கேது பகவான் அமர்வதால் அலுவலகத்தில் பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் கிடைக்கும்.
கேது லாப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இதுவரை தடைபட்ட காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இது வரை திருமணம் ஆகி புத்திரபாக்கியம் தடைப்பட்ட தம்பதியினருக்கு புத்திரபாக்கியமும் கிடைக்கும்.

பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் தேடி வரும். பூர்வீக சொத்து விவகாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெற்றோர்களுக்கு சின்னதாக மருத்துவ செலவுகள் வரும். உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி காலத்தில் பட்டம் பதவிகள் தேடி வரும். தெய்வ வழிபாடு உங்களுக்கு நல்ல பலன்களை தரப்போகிறது. குல தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதி சந்தோஷத்தைக் கொடுக்கப் போகிறது. புதன்கிழமைகளில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுங்கள். பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும் இந்த ராகு கேது பெயர்ச்சி தோஷம் நீங்கி சந்தோஷத்தை அதிகரிக்கச் செய்யும் நிம்மதியை தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+