ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: யாருடைய வங்கிக்கணக்கில் பல கோடி பணம் டெபாசிட் ஆகும்.. செக் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்முடைய வங்கிக்கணக்கில் பல ஆயிரம் கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டால் எப்படி இருக்கும் அப்படித்தான் பலருக்கும் நடக்கிறது. ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்த அக்கவுண்டில் 9000 கோடி பணம் டெபாசிட் செய்யப்படுகிறது. இது எல்லாம் ராகு கேது ஆடும் ஆட்டம். அள்ளித்தருவார் ராகு பகவான். ராகு கேது பெயர்ச்சியால் யாரெல்லாம் கோடீஸ்வரர் யோகத்தை பெறப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.

ராகு கேது பெயர்ச்சி எப்போது: பெரும்பாலான கோவில்களில் நாளைய தினம் ராகு கேது பெயர்ச்சி பரிகார யாகங்கள் செய்கின்றனர். சிறப்பு அபிஷேகங்களும் லட்சார்ச்சனையும் செய்கின்றனர். திருக்கணித பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் 30ஆம் தேதி நிகழ உள்ளது. மேஷ ராசியில் இருந்து ராகு மீன ராசிக்கும் துலாம் ராசியில் இருந்து கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகமும் திடீர் அதிர்ஷ்டமும் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.

Rahu ketu peyarchi palan 2023: Who are the zodiac signs who are sudden millionaires?

மேஷம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு 12மிடத்தில் ராகுவும் 6ம் இடத்தில் கேதுவும் மாறுகிறார்கள். . "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்" என்பதன் அடிப்படையில் மறைவு ஸ்தானத்திற்கு ராகு கேது வருவது நல்லது தான். சுபகாரியங்கள் திருமணம் சடங்கு கிரக பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். அறிவாளியை முட்டாளாக்கி உட்கார வைத்த ராகு 12 ம் இடத்திற்கு மாறுவதால் வெளிநாட்டு பயணம்,தொழில் அமையும் வாய்ப்பை கொடுப்பார். வர்த்தக தொடர்பு ஏற்படும். சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும். தொழில் வியாபாரத்தில் கோடிகோடியாக லாபம் சம்பாதித்து சுகபோகங்களை பெருக்கி கொள்ளலாம். கடன்கள் அடைபடும். கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எல்லாம் தித்திக்கும் நிலைக்கு மாறும். உங்களுடைய செயல்களில் காரியங்களில் தோல்வியை கண்டு அஞ்சாத உங்களுக்கு வெற்றியை எட்டி பிடிக்க வைக்கும். ராகு கேது பெயர்ச்சி முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் தரும். மலைபோல வரும் துன்பம் எல்லாம் பனிபோல விலகி குடும்பத்தில் அமைதி ஆனந்தம் கிடைக்கும். குலதெய்வத்தை கும்பிட்டால் கூடவே வந்து காத்து நிற்கும்.

ரிஷபம்: லாப ஸ்தானமான11ல் வரும் ராகு எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவு போட்டி பொறாமைகளை ஒழிப்பார். யார் கண்டது உங்க பேங்க் அக்கவுண்ட்டில் கூட ஆயிரம் கோடி டெபாசிட் ஆக வாய்ப்பிருக்கிறது. செக் பண்ணுங்க. காரணம் லாப ராகு கோடி கோடியாக கொட்டிக்கொடுப்பார். எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஒயமாட்டிர்கள். உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் தானாகவே மறைந்து விடும். பாகப் பிரிவினை,செக் மோசடி வழக்குகள் இருந்தால் அது உங்களுக்கு சாதகமான தீர்ப்பை கொடுக்கும். 5ஆம் வீட்டில் கேது பயணம் செய்யப்போவதால் காரிய வெற்றியும் வாக்கு நாணயத்தையும் காப்பாற்றி கொள்ளலாம். புதிய முயற்சிகள் கை கூடும். புதிய மனிதர்களின் தொடர்பு அவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். வார்த்தைகளால் வஞ்சித்து ஏமாற்றியவர்களின் முகத்தில் கரியை பூசி விடுவீர்கள். ஏமாற்றங்களால் ஊரை விட்டு ஓடி வீடுவோமா என்று நினைத்தவர்கள் சொந்த ஊரிலே தலை நிமிர்ந்து வாழலாம். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலையில் திருப்திகரமான போக்கும் மாற்றமும் உருவாகும்.இது வரை உங்களை தரக்குறைவாக நடத்தியவர்கள் எல்லாம் இனி உங்களை கண்டு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள். 5ல் கேது இருப்பதால் குலதெய்வ பிரார்த்தனை செய்யுங்கள் குடும்பம் செழிக்கும் கவலைகள் நீங்கும்.

மிதுனம் : பத்தாம் வீட்டில் ராகுவும் நான்காம் வீட்டில் கேதுவும் பயணம் செய்யப்போவதால் யோகங்கள் தேடி வரப்போகின்றன. நீங்கள் எடுக்கும் ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். 10 ஆம் இடம் தொழில் ஸ்தானம், கீர்த்தி, செல்வாக்கு அந்தஸ்து ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழிலாளி முதலாளி ஆகலாம். நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம் நல்ல சம்பளம் வசதி வாய்ப்புகளை உருவாக்கி தரலாம்.
குடும்பத்தில் மகிழ்ச்சி கணவன் மனைவி ஓற்றுமை ஒங்கும்.குடும்பத்தில் சுபகாரியம் சுபமாக முடியும். மறைமுக எதிர்ப்பு வேண்டாத விமர்சனங்களுக்கு ஆளாகி கெட்ட பெயர் எடுத்த உங்களுக்கு உங்களின் அருமை என்ன என்பதை புரிய வைப்பீர்கள். கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு இனி சிறிது சிறிதாக கடன் சுமை குறையும். அஷ்டம சனியால் மான அவமானம் தோல்விகளை சந்தித்த உங்களுக்கு வாழ்க்கையில் துடுப்பில்லாத படகு போல தத்தளித்த உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சியும் நிகழ்ந்துள்ள சனிப்பெயர்ச்சியும் ஆறுதலையும் முன்னேற்றத்தையும் தரும். குரு பகவானும் உங்களுக்கு கோடி கோடியாக கொட்டிக்கொடுக்கப்போகிறார்.

கடகம்: அஷ்டம சனியால் கஷ்டங்களை சந்தித்து வரும் உங்களுக்கு ஆறுதலாக வருகிறது ராகு கேது பெயர்ச்சி. ஒன்பதாம் இடத்தில் ராகு மூன்றாம் வீட்டில் கேதுவும் பயணம் செய்யப்போகின்றனர். தசைகள் யோகமாக இருந்தால் தலைக்கு வந்தது தலை பாகையோடு போய்விட்டது என்று ஆறுதல் படுத்திக்கொள்ளலாம். குடும்பத்தில் சுபகாரியம் புதுமுயற்சி,திருமணம்,புத்திர பாக்கியம் போன்ற சுபமங்கள நிகழ்ச்சிகள் நடக்கும்.
நிர்வாக பொருப்புகள் தேடி வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள்,வெளிநாட்டு பயணங்கள் அனுகூலம் ஆதாயத்தை தரும். வருமானம் அதிகரிக்கும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலைகளில் இடையூறுகள் நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். நீங்கள் நினைத்த காரியம் கை கூடும். அஷ்டமத்து சனியால் உடல்நலக்கோளாறு கணவன் மனைவி பிரச்சினை போலீஸ் வம்பு வழக்கு சந்தித்தவர்களுக்கு ராகு கேது விடிவையும் விமோசனத்தை தந்து காசு,பணம் சம்பாத்தியம் சேமிப்பை கொடுப்பார் என்பது உறுதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+