ராகு கேது பெயர்ச்சி பலன்: 2024ல் 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிரடி ஜாக்பாட்.. குபேர யோகம்!
சென்னை: ராகு கேது தற்போது மூலை ராசிகளான மீன ராசியிலும் கன்னி ராசியிலும் பயணம் செய்கின்றனர். ராகுவின் பார்வை ரிஷபம், கன்னி மகர ராசிகளின் மீது விழுகிறது. கேதுவின் பார்வை விருச்சிகம், மீனம், கடக ராசிகளின் மீது விழுகிறது. ராகு கேதுவின் பயணம் பார்வையால் 2024 ஆம் ஆண்டு தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
தனுசு: உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் உள்ள ராகுவும் பத்தாம் வீட்டில் உள்ள கேதுவும் உங்களுடைய வாழ்க்கையில் வெற்றியை தேடித்தரப்போகின்றனர். நான்காம் வீட்டில் ராகுவும், தொழில் ஸ்தானத்தில் கேதுவும் பயணம் செய்வது சிறப்பான அம்சமாகும். வீட்டில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். சிலர் புதிய வீட்டிற்கு இடம் மாறுவீர்கள். சிலருக்கு வேலையில் இட மாற்றம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பொறுமையோடு இருந்தால் பண இழப்பை சரி செய்யலாம். வேலை செய்யும் இடத்தில் இழந்த செல்வாக்கை திரும்ப பெறுவீர்கள். பொருளாதார நிலை சீரடையும். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு சென்று துர்க்கையை வழிபட நன்மைகள் நடைபெறும்.

மகரம்: எவ்லாமே அற்புதம்தான் காரணம் மூன்றில் ராகு பாக்ய ஸ்தானத்தில் கேது பயணம் செய்வது சகல சந்தோஷத்தையும் தரப்போகின்றன. மூன்றாமிடத்தில் அமர்ந்துள்ள ராகுவினால் உங்கள் மனதில் அசாத்தியமான தைரியத்தை இடம்பெறச் செய்யும். அடுத்தவர் செய்யத் தயங்கும் காரியத்தினை எவ்வித தயக்கமுமின்றி சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். குருவின் பார்வை கேதுவிற்கு கிடைக்கப்போகிறது. குரு பகவான் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கப்போவதால் 2024 ஆம் ஆண்டில் அள்ளிக்கொடுக்கப் போகிறார் ராகு பகவான். காதலால் கசிந்து உருகுவீர்கள். அபரிமிதான பண வரவு கிடைக்கும்.
கோடீஸ்வர யோகம்: ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் குரு உடன் இணைந்து அமர்ந்து உள்ள கேதுவினால் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் கோடீஸ்வர யோகம் கிடைத்துள்ளது. செய்யும் தொழில் மூலம் நல்ல லாபமும் புதிய தொழிலில் ஈடுபடும் வாய்ப்பும் கிடைக்கும். தேவைக்கேற்ப பணவசதி உண்டாகும். சிலருக்கு வண்டி வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களையும் நடத்தி மகிழ்வீர்கள். வெள்ளிகிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வைத்து வழிபடுங்கள். அத்தனையும் சுகமாக நடைபெறும்.
கும்பம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களுக்கு ராகு கேது கிரகங்கள் வளர்ச்சியைத் தரப்போகின்றன. உங்கள் ராசிக்கு ராகு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் - கேது பகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்வதால் யோகங்கள் கிடைக்கப்போகிறது. பேசும் வார்த்தைகளில் கடுமையை வெளிப்படுத்த வேண்டாம் கனிவை வெளிப்படுத்துங்கள். பணவரவு பொருளாதார வரவு அதிகரிக்கும் அதே நேரத்தில் செலவும் கூடும் சேமிக்கத் தொடங்குங்கள். வாக்கு கொடுக்காதீர்கள் மாட்டிக்கொள்வீர்கள்.
பண விசயத்தில் கவனம்: அஷ்டமத்தில் உள்ள கேது பகவானுக்கு குரு பகவானின் பார்வை கிடைப்பதால் உடல் நலத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் மன உளைச்சல்கள் தீரும் உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடாக இருங்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். கடன் கொடுக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்வது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு மரியாதை கூடும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு மரியாதை கூடும். ராகு காலத்தில் நெய்தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.
மீனம்: ஜென்ம ராகு களத்திர ஸ்தான கேது உங்களுக்கு யோகங்களைத் தரப்போகிறார். களத்திர ஸ்தானத்தில் உள்ள கேதுவை மே மாதத்திற்குப் பிறகு குரு பகவான் பார்வையிடுகிறார். கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பண விசயத்தில் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு சீராகும்.
ஆன்மீக பயணம்: ஏழாம் இடத்தில் அமர்ந்து உள்ள கேதுவினால் சத்ரு நாசம் ஏற்படும். எதிரிகள் காணாமல் போவார்கள். புதிய நபர்களை நம்பி எந்த விஷயத்திலும் இறங்கக் வேண்டாம். பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குரு பகவானை பார்வையிடப்போகும் கேது ஆன்மீக பயணத்தை ஏற்படுத்துவார். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பெண்களுக்கு வருமானம் அதிகரிக்கும். செவ்வாய்கிழமையில் துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்












Click it and Unblock the Notifications