Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி பலன்: கோடி கோடியாக பெட்டி நிறைய பணம்.. 2024ல் யார் வீட்டிற்கு தேடி வரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. ராகு அள்ளிக்கொடுப்பார்.. கேது ஞானத்தை அள்ளிக்கொடுப்பார் தற்போது மூலை ராசிகளான மீன ராசியிலும் கன்னி ராசியிலும் பயணம் செய்கின்றனர். ராகு கேதுவின் பயணம் பார்வையால் 2024 ஆம் ஆண்டு சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

சிம்மம்: கண்டச்சனி காலமாக இருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு உடல்நிலையில் சில பாதிப்புகளை ஏற்படுத்தும். வீட்டு பிரச்சினைகளை வெளியில் சொல்ல வேண்டாம். ராகு பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் கேது பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் பயணம் செய்கின்றனர். இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்திற்கு எந்த ஒரு சுப காரியத்தை செய்யும் முன்பும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது.

Rahu Ketu Peyarchi Palan: 2024 prediction for Simmam, Kanni,Thulam and Viruchigam

ஆரோக்கியத்தில் அக்கறை: அலுவலகம் வேலை செய்யும் இடத்தில் பொது இடங்களில் வீண் வாக்குவாதங்களை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். குடும்ப பிரச்சினைகளை யாருக்கும் சொல்ல வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பணம் விசயமாக யாருக்கும் வாக்கு தர வேண்டாம். அடுத்தவர்களின் பிரச்சினைகளில் அவசியமின்றி தலையிட வேண்டாம். வியாழக்கிழமைகளில் குருபகவானை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

கன்னி: ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி யோகத்தை அள்ளித்தரப்போகிறது. ராகு பகவான் ஏழாம் வீட்டிலும் கேது பகவான் ஜென்ம ராசியிலும் பயணம் செய்வதால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் இதுநாள் வரை தடைபட்டு வந்த சுப காரியங்கள் கைகூடி வரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். தம்பதியர் இடையே நெருக்கம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

ஆரோக்கியம் அதிகரிக்கும்: வருமானம் அதிகரித்தாலும் செலவுக்கு குறையிருக்காது. உங்கள் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு சேமிப்பது அவசியம். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்வீர்கள். ஜென்ம ராசியில் பயணம் செய்யும் கேது பகவான் விரக்தியான மனநிலையைத் தருவார் என்றாலும் கவலைப்படாமல் செய்யும் வேலையில் கவனம் செலுத்துங்கள். 2024ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு குரு பகவானின் பார்வை உங்கள் ராசியை பார்வையிடப்போகிறார். மன குழப்பங்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். ஞாயிற்றுக்கிழமையன்று பிரத்யங்கிரா தேவியை வணங்குவது நல்லது. காகத்திற்கு எள் சாதம் வைப்பது நல்லது.

துலாம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு ராகுவும் கேதுவும் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரப்போகிறார். ராகு பகவான் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்திலும் அமர்ந்துள்ளார். ஆறாம் வீட்டில் அமர்ந்துள்ள ராகு நோய்களையும் கடனையும் அதிகரிப்பார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. கடன் வாங்க வேண்டாம் யாருக்கும் கடன் கொடுக்கவும் வேண்டாம் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கித் தர வேண்டாம்.

வேலையும் சம்பள உயர்வும்: விரைய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். நல்ல வேலையும் உத்யோகத்தில் சம்பளம், பதவி உயர்வு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். பிள்ளைகளுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது வண்டி வாகனம், எலக்ட்ரானிக் சாதனம் வாங்குவீர்கள். வெள்ளிக்கிழமையன்று ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

விருச்சிகம்: ராகுவும் கேதுவும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு உத்யோக உயர்வையும், பணவரவையும் தரப்போகின்றனர். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும் புகழ் கூடும். ஐந்தாம் வீட்டில் அமர்ந்துள்ள ராகுவும் லாப ஸ்தானமான 11வது வீட்டில் அமர்ந்துள்ள கேதுவும் 2024ஆம் ஆண்டில் நிறைய நன்மைகளை செய்யப்போகின்றனர். தொழில் வியாபாரத்திற்காக வெளியூரில் தங்க வேண்டியிருக்கும். வேலையில் சிலருக்கு இடமாற்றமும் ஏற்படும்.

பண வருமானம்: வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கும். ஆன்மீக விசயங்களுக்காக அதிக செலவுகளை செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலக விசயமாக வெளிநாடு பயணம் அடிக்கடி செல்வீர்கள். புதிதாக சிலருக்கு வெளிநாடு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. ராகுவினால் டென்சன் குறையும், கேதுவினால் பொருளாதார வரவு அதிகரிக்கும். செவ்வாய்கிழமையன்று ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+